கமிஷனர் ஆபீசுக்கு போன முத்துக்குமரன்.. அடுத்தடுத்து வீடியோவை வெளியிடும் வாஹிதா! புது பஞ்சாயத்து

  • சென்னை: இன்ஸ்டா பிரபலமான முத்துக்குமரன் தன்னை காதலித்து திருமணம் செய்து கொள்வதாக சொல்லி உடலுறவு வைத்துக் கொண்டு ஏமாற்றி விட்டார் என்று சோசியல் மீடியாவில் வீடியோ வெளியிட்டது பெரிய அளவில் பேசு பொருளாக மாறி இருக்கும் நிலையில் முத்துக்குமரன் திடீரென சென்னை கமிஷனர் ஆபீஸ்க்கு சென்று இருக்கிறார். அப்போது அங்கு அவரை பத்திரிகையாளர்கள் வீடியோ எடுத்து இருக்கின்றனர் அதனால் கடுப்பான அவர் அங்கிருந்து வேகமாக போயிருக்கிறார்.

    முத்துக்குமரன் மீது குற்றச்சாட்டு

    இன்ஸ்டா பிரபலம் வாஹிதா தற்கொலை முயற்சி செய்த சம்பவம் சோசியல் மீடியாவில் விவாதிக்கப்பட்டு வருகிறது. தான் தற்கொலை செய்து கொள்வதற்கு காரணம் முத்துக்குமரன் தான் என்று லைவ் வீடியோவில் பேசியபடியே காய்ச்சல் மாத்திரைகளை போட்டுக்கொண்டு மது அருந்தியப்படி, புகைபிடித்தபடியும் அந்த வீடியோவில் அவர் பேசியிருந்தார். வீடியோவின் ஆரம்பத்தில் முத்துக்குமரன் தான் என்னுடைய சாவுக்கு காரணம் என்று பேசிவிட்டு கடைசியில் நான் தான் என்னுடைய முடிவுக்கு காரணம் என்றும் சொல்லியிருந்தார்.

    பீரியட்ஸ் நேரத்தில் உடலுறவு.. அதுவும் எப்படி தெரியுமா? முத்துக்குமரன் பற்றி அடுத்த குண்டை போட்ட வாஹிதா

    இன்ஸ்டா பிரபலம் வீடியோ

    இந்த வீடியோக்கள் வெளியானதும் பெரிய அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. முத்துக்குமாரனா இப்படி எல்லாம் பண்ணுனது என்று எல்லோரும் கேள்வி எழுப்பி இருந்தனர். ஆனால் அடுத்த நாள் அந்த பெண்ணின் ஐடியில் இருந்த வீடியோக்கள் டெலிட் செய்யப்பட்டிருந்தது. அதனால் அவருக்கு என்ன ஆனது என்று கேள்வி இருந்தது. அந்த சமயத்தில் அவர் நான் மருத்துவமனையில் சிகிச்சை முடித்து ரெஸ்ட்டில் இருக்கிறேன் என்று ஒரு போஸ்ட் போட்டு இருந்தார்.

    அடுத்தடுத்த வீடியோ

    அதற்கு பிறகு இந்த முகம் தான் அழகு என்று முத்துக்குமரன் தன்னை கொஞ்சிய ஒரு வீடியோவையும் இன்ஸ்ட்டா பக்கத்தில் ஷேர் செய்து இருந்தார். இது நேற்று முதல் வைரலாகி வருகிறது. அதற்கு பிறகு இன்று காலையில் முத்துக்குமரன் எனக்கு பீரியட்ஸ் என்று சொன்ன பிறகும உடலுறவு கொண்டார் என்றும் ஒரு வீடியோவில் வாஹதா பேசியிருந்தார். அதற்கு பிறகு முத்துக்குமரன் தனக்கு போன் செய்து பேசிய ஆடியோவையும் தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார்.

    பாலியல் வன்கொடுமை இல்லை.. ஆனால் முத்துக்குமரன் குறித்து வாஹிதா போட்ட புதிய பதிவு

    முத்துக்குமார் கொடுத்த புகார்

    அதில் முத்துக்குமரன் வாஹதாவிடம், எதுக்காக நீ இப்படி வீடியோ போட்ட நேற்றிலிருந்து என்னை பற்றி ரொம்ப தப்பு தப்பா எல்லாரும் பேசிட்டு இருக்காங்க என்று கேட்டிருக்கிறார். அதற்கு அவர் நீ என்னை ஃப்ரெண்ட் என்று சொல்கிறாயே ஃப்ரெண்ட் கூட தான் பெட்டில் இருந்தியா? என்று கேட்க, அதற்கு முத்துக்குமரன் நான் உன்னை கட்டாயப்படுத்தி கூட்டிட்டு வந்து தப்பா நடந்துகிட்ட மாதிரி பேசிட்டு இருக்குற.. நான் ஃபிரண்டா தானே உன்கிட்ட பேசினேன். ஒருநாள் என் வீட்டுக்கு வந்த அப்போ ஜஸ்ட் நாம பிரண்ட்ஸா பேசிக்கிட்டு இருந்தோம். அந்த சமயத்தில் நீ வீடியோ எடுக்கணும்னு சொன்னதும் சரின்னு நானும் பேசினேன் ஆனா அதை பாதி பாதியாக சோஷியல் மீடியாவில் போஸ்ட் போட்டு என்னை அசிங்கப்படுத்திட்டு இருக்கிற என்று விவாதிக்கிறார்.

    இப்படி இவர்கள் இருவரும் பேசிக் கொண்டிருக்கும் ஆடியோ அந்த போஸ்டில் இருக்கிறது. இந்த நிலையில் முத்துக்குமரன் சென்னை கமிஷனர் அலுவலகத்தில் இது சம்பந்தமாக புகார் கொடுக்க போயிருக்கிறார். அப்போது எடுத்த வீடியோக்களும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

    English Summary

    Amidst the widespread discussion sparked by a social media video—in which a woman alleged that Instagram personality Muthukumaran deceived her after engaging in a sexual relationship under the pretext of love and marriage—Muthukumaran unexpectedly visited the Chennai Commissioner's office. When journalists filmed him there, he became agitated and hurriedly left the premises.