முத்துக்குமரன் கமிஷனர் ஆபீசுக்கு போனதும்.. வாஹதா போட்ட அடுத்த பதிவு! லிஸ்ட் பெருசாகிட்டே போகுது!

  • சென்னை: பிக் பாஸ் முத்துக்குமரனுக்கும் இன்ஸ்டாகிராம் பிரபலமான வஹிதாக்கும் இடையிலான பிரச்சினை இன்னும் முடிவுக்கு வந்தபாடில்லை. முத்துக்குமரன் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுத்த பிறகும், வஹிதா தொடர்ந்து சமூக வலைதளங்களில் பதிவுகளை வெளியிட்டு வருகிறார். இப்போது அவர் போட்டிருக்கும் புதிய பதிவு இன்னும் பரபரப்பைக் கூட்டியிருக்கிறது.

    Advertisement

    முத்துக்குமரன் தன்னைத் திருமணம் செய்துகொள்வதாகக் கூறி ஏமாற்றிவிட்டதாக வாஹதா ஏற்கெனவே குற்றம்சாட்டியிருந்தார். இதற்கிடையே, இருவரும் நண்பர்களாக மட்டுமே பழகியதாக முத்துக்குமரன் விளக்கம் அளித்ததுடன், தன்னைப் பற்றி அவதூறு பரப்பப்படுவதாகக் கூறி காவல் ஆணையர் அலுவலகத்திலும் புகார் அளித்திருந்தார். இந்த விவகாரம் தொடர்பாக இருவரும் மாறி மாறி கூறும் கருத்துகள் சமூக வலைதளங்களில் பேசப்பட்டு வருகின்றன.

    Advertisement

    வாஹதா அடுத்த பதிவு

    இந்தச் சூழலில், வாஹதா தற்போது வெளியிட்டுள்ள பதிவில், தான் தற்கொலை செய்துகொள்ளப் போவதில்லை , தொடர்ந்து வாழத்தான் விரும்புகிறேன். அதே நேரத்தில், எதிர்காலத்தில் எனக்கு திடீரென ஏதாவது நடந்தாலோ, எனது மரணம் தற்கொலை என்று செய்திகள் வெளியானாலோ அதற்கு யார் காரணம் என்பது அனைவருக்கும் தெரியும் என்று குறிப்பிட்டு இருக்கிறார். மேலும் தனது செல்போனில் முத்துக்குமரனின் பெயரை சேவ் பண்ணி வைத்திருக்கும் பெயரான 'ராவணன்' என்று சொல்லி இருக்கிறார்.

    சோசியல் மீடியாவில் வாக்குமூலம்

    அதுமட்டுமல்லாமல் தனது பாதுகாப்புக்காகவே இப்படி ஒரு பதிவை வெளியிடுவதாகவும், யார் மீதும் தனக்கு நம்பிக்கை இல்லை என்றும் வாஹதா கூறியிருக்கிறார். இதுவரை தனக்கு நேரடியாக எந்த மிரட்டலும் வரவில்லை என்பதையும் அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார். இதோடு இன்னொரு விஷயத்தையும் வஹிதா கூறியிருக்கிறார். முத்துக்குமரன் தொடர்பாக ஏற்கெனவே பதிவிட்டிருந்த சில பதிவுகள் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலிருந்து தானாகவே நீக்கப்பட்டுவிட்டதாகவும், தன்னால் முன்புபோல் நேரலையில் வர முடியவில்லை என்றும் அவர் சொல்கிறார். நேரலையில் வர முயன்றபோது, 365 நாட்களுக்கு அனுமதி இல்லை என்ற தகவல் வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

    Advertisement
    நான் காதலிக்கவே இல்லை.. வஹிதா சொல்வது பொய்.. சென்னை காவல் ஆணையரிடம் முத்துக்குமரன் புகார்

    ரசிகர்கள் கேள்வி

    இங்கேதான் சில கேள்விகள் எழுகின்றன. முத்துக்குமரன் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுத்த பிறகும் வாஹதா தொடர்ந்து இப்படி பதிவிடுவது, அவரை மறைமுகமாக எச்சரிக்கும் முயற்சியா? அல்லது தனக்குப் பாதுகாப்பு இல்லை என்று உண்மையிலேயே பயந்து முன்னெச்சரிக்கையாக இப்படி எழுதுகிறாரா? இவைதான் இப்போது எழும் கேள்விகள்.

    ஆனால், வாஹதா கூறுவதால் மட்டும் அவருக்கு ஏதாவது ஆபத்து இருக்கிறது என்றோ, அதற்கு முத்துக்குமரன்தான் காரணம் என்றோ முடிவு செய்துவிட முடியாது. அதேபோல், அவருடைய பதிவுகளை வைத்து மட்டும் முத்துக்குமரன் மீது குற்றம் சுமத்தவும் முடியாது. இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து இரு தரப்பினரும் கூறும் தகவல்களையும், விசாரணையில் தெரியவரும் உண்மைகளையும் வைத்துத்தான் முடிவுக்கு வர முடியும்.

    English Summary

    Muthukumaran: The dispute between Bigg Boss contestant Muthukumaran and Instagram personality Vahitha shows no signs of ending. Even after Muthukumaran lodged a complaint at the Chennai Police Commissioner's office, Vahitha has continued to post on social media. Her latest post has further intensified the controversy.