சென்னை: ஒரு படத்தின் வெற்றி விழாவில் மிஷ்கின் பேசினால் அங்கே வழக்கமான பாராட்டு மட்டும் இருக்காது. ஏதாவது ஒரு வரி கண்டிப்பாக சர்ச்சையாகவும், சுவாரஸ்யமாகவும் மாறிவிடும். இப்போது அப்படித்தான் அவரது பேச்சில் வந்த ஒரு குறிப்பிட்ட பகுதி சமூக வலைதளங்களில் வைரலாகிக் கொண்டிருக்கிறது.
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் உருவான 'டோரதி' படத்தின் வெற்றி விழாவில் மிஷ்கின் கலந்து கொண்டு பேசியிருக்கிறார். அந்தப் படத்தில் நடித்த ரிஷிகாந்த் மற்றும் சனந்த் இருவரையும் அவர் மேடையில் வைத்தே மனம் திறந்து பாராட்டியிருக்கிறார். அவர்களைப் பாராட்டிய விதம்தான் இப்போது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறது.
மிஷ்கின் பேசியதாவது, உங்கள் 2 பேரையும் தனித்தனியாக என்னால பாராட்ட முடியாது. 2 பேரும் அந்த அளவுக்கு நீங்க நடிச்சிருக்கீங்க. நீங்கதான் உண்மையான ஹீரோக்கள். நிஜ வாழ்க்கையிலும் சரி, சினிமாவிலும் சரி நீங்கள் நீங்களாகவே இருக்கிறீங்க. உங்களுக்குள் இருக்கும் ஆணை கொன்றுதான் இந்த மாதிரி கேரக்டரில் நடிக்க முடியும். நீங்கள் அதை சிறப்பாக செய்திருக்கிறீர்கள். நீங்கள் பிறந்த வயிறு புண்ணியம் செய்த வயிறு. அந்த வயிற்றில் பிறந்ததால்தான் உங்களால் இப்படி ஒரு நடிப்பை கொடுக்க முடிந்தது. நீங்க அம்மா டயலாக் பேசி, அப்பாவை கட்டிப்பிடிச்சு, அடுத்து முத்தம் கொடுத்து, ரசிகர் மன்றம் தொடங்கி காமெடி பண்ணிடாதீங்க. நீங்க மற்றவங்க போல கிடையாது. உங்களுடைய காலில் விழுந்து நான் ஆசீர்வாதம் வாங்கணும். ஆனால் இதை இப்ப பண்ண முடியாது. நான் இன்னைக்கு ராத்திரி குடிச்சிட்டு உங்க காலில் விழுகிறேன்என என்று மிஷ்கின் சிரிக்கச் சிரிக்க சொல்லியிருக்கிறார். அதோடு நிறுத்தாமல், தனது கையில் போட்டிருந்த 2 மோதிரங்களையும் கழட்டி அந்த இருவரிடமும் கொடுத்திருக்கிறார். இதனால் விழாவில் இருந்தவர்களும் உற்சாகமடைந்திருக்கிறார்கள். படத்தில் இருவரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள் என்பதற்காக மிஷ்கின் இவ்வளவு தூரம் சென்று பாராட்டியிருப்பது ஒரு பக்கம். ஆனால், அவர் பேசிய ஒரு குறிப்பிட்ட வரிதான் இப்போது சமூக வலைதளங்களில் சுற்றிக்கொண்டிருக்கிறது. "அம்மா டயலாக் பேசி... அப்பாவை கட்டிப்பிடிச்சு... அடுத்து முத்தம் கொடுத்து... ரசிகர் மன்றம் தொடங்கி காமெடி பண்ணிடாதீங்க." இதுதான் அந்த வரி. மிஷ்கின் இதை சிரித்துக்கொண்டே, அந்த இரண்டு நடிகர்களை கிண்டல் செய்யும் விதத்தில் சொன்னார் என்பதுதான் வீடியோவை பார்க்கும்போது தெரிகிறது. ஆனால் சமூக வலைதளங்களில் எதுவுமே அத்துடன் முடிந்துவிடாது அல்லவா? இப்போது அந்த ஒரு வரியை எடுத்துக்கொண்டு, "மிஷ்கின் யாரை மனதில் வைத்துப் பேசினார்?" என்ற கேள்விதான் ஓடிக்கொண்டிருக்கிறது. குறிப்பாக தமிழக அரசியலில் நடிகர்களின் ரசிகர் மன்றங்கள் அரசியல் அமைப்புகளாக மாறியிருக்கும் சூழல் இருப்பதால், இந்த வார்த்தைகள் இன்னும் அதிகமாக கவனத்தைப் பெற்றிருக்கின்றன. விஜய் முதலில் தனது ரசிகர் மன்றங்களை மக்கள் இயக்கமாக மாற்றினார். அதன் பிறகு தமிழக வெற்றிக் கழகத்தை தொடங்கி நேரடியாக அரசியலுக்குள் வந்தார். தற்போது அவர் முதல்வராக இருக்கும் நிலையில், "ரசிகர் மன்றம்" என்ற வார்த்தையே சினிமாவை தாண்டி அரசியல் அர்த்தத்தையும் பெற்றிருக்கிறது. அதே நேரத்தில், நடிகர் சிவகார்த்திகேயனும் சமீபத்தில் தனது நற்பணி இயக்க நிர்வாகிகளை பெரிய அளவில் சந்தித்திருக்கிறார். தமிழகம் முழுவதிலிருந்தும் நிர்வாகிகளை அழைத்து நற்பணி, மக்கள் தொடர்பு, ரசிகர் அமைப்பு என்று பல விஷயங்களை அவர் பேசியிருப்பது சமூக வலைதளங்களில் விவாதமாகியுள்ளது. தனுஷின் ரசிகர் மன்ற நடவடிக்கைகளும் இதே நேரத்தில் கவனம் பெற்றிருக்கின்றன. இதனால் மிஷ்கின் சொன்ன "ரசிகர் மன்றம் தொடங்கி காமெடி பண்ணிடாதீங்க" என்ற வார்த்தையை வைத்து சிலர் இவர்களுடைய பெயர்களையும் சேர்த்து பேச ஆரம்பித்திருக்கிறார்கள்.இயக்குனர் மிஷ்கின் பேச்சு
பார்ப்பதற்குத்தான் கரடுமுரடு! சூப்பர் சிங்கர் திஷாதனாவின் கல்வி கட்டணத்தை ஏற்ற மிஷ்கின்
ரசிகர் மன்ற காமெடி
மிஸ்கின் கொடுத்த பரிசு
“விஜய் சினிமாவில் இருந்தவரை அன்பா இருந்தேன், இப்போ உறவு வித்தியாசமாகிடுச்சு!” - நறுக்னு பேசிய மிஷ்கின்
யாரை சொல்கிறார் மிஸ்கின்
தனுஷ், சிவகார்த்திகேயனின் செயல்பாடுகள்