நீயா நானாவில் தம்பியோடு கலந்து கொண்டு பேசிய பெண் இப்போ உயிரோடு இல்லையா? என்ன ஆனது? பின்னணி

  • சென்னை: அடுத்த நிமிடம் நிச்சயம் இல்லாத வாழ்க்கை தான் நாம் அனைவருமே வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இருக்கிற வரைக்கும் அனைவருக்கும் நம்மால் முடிந்ததை செய்துவிட்டு போய்விட வேண்டும் என்பது பலருடைய கருத்தாக இருந்தாலும் இதை உண்மை என்று சொல்வது போலத்தான் இப்போது ஒரு சம்பவம் நடந்திருக்கிறது. அதாவது கடந்த சில மாதங்களுக்கு முன்பு நீயா நானா நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசி மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற ஜமீமா என்ற பெண் இறந்து விட்டதாக செய்திகள் பரவி வருகிறது.

    Advertisement

    பெண் கேட்ட கேள்வி

    விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நீயா நானா நிகழ்ச்சியில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு குழந்தைகள் வளர்ப்பு குறித்து ஒரு எபிசோடு நடைபெற்றது. அதில் ராமநாதபுரத்தை சார்ந்த ஜமீபா பேகம் என்ற பெண் தன்னுடைய தம்பியுடன் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் அவர் பேசும்போது, என்னுடைய தம்பியை சிறுவயதில் இருந்து நான்தான் வளர்த்து வருகிறேன். அதேபோல இப்ப நானும் சிங்கிள் மதராக இருக்கிறேன். ஆனால் ஆண் பிள்ளை என்றால் எப்படி வேண்டும் என்றாலும் இருக்கலாம் என்று சொல்லி வளர்ப்பது சில இடங்களில் இருக்கிறது.

    Advertisement

    நீயா நானா எபிசோடு

    பெண் குழந்தை என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று கட்டுப்பாடும் சொல்லி அடக்கி வைத்து பலருடைய வாழ்க்கையும் சீரழிந்து விடுகிறது. நான் என்னுடைய தம்பியிடம் பாலியல் பிரச்சனைகள், இளம் வயதில் ஏற்படும் உடல் மாற்றம், எதிர் தரப்பினர் மீது ஏற்படும் கிளர்ச்சி போன்ற எல்லா விஷயங்களையும் ஓப்பனாக சொல்லி இருக்கிறேன். அதை சிலர் சொல்லாததால் தான் குழந்தைகள் இந்த விஷயத்தை தெரிந்து கொள்வதற்காக தவறான வழிகளில் போகிறார்கள்.

    எனக்கு பீரியட்ஸ் நேரத்தில் பேட் வேண்டும் என்றால் கூட என்னுடைய தம்பி வாங்கிக் கொண்டு வருவான். என்னுடைய கஷ்டம் அவனுக்கு புரிந்தால் தான் அடுத்த பெண்களுக்கும் இதுபோல கஷ்டம் இருக்கும் என்று அவனால் புரிந்துகொள்ள முடியும் என்று பேசி இருந்தார். அப்போது அவருடைய பேச்சை ஒரு சிலர் நெகட்டிவ் ஆக பேசி வந்தாலும் பலர் அவருடைய பேச்சுக்கு ஆதரவு கொடுத்திருந்தனர்.

    Advertisement

    வருத்தத்தில் ரசிகர்கள்

    அதனால் அவர் சோசியல் மீடியாவில் பெரிய அளவில் பிரபலமானார். ஆனால் இப்போ அவர் இறந்து விட்டதாக நேற்று இரவில் இருந்து தகவல்கள் பரவி வருகிறது. அவருக்கு சமீபத்தில் நடந்த சாலை விபத்தில் பயங்கரமான காயம் ஏற்பட்டதாகவும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் இறந்து விட்டதாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே தன்னுடைய குழந்தைக்கு சிங்கிள் மதராகவும், தன்னுடைய குடும்பத்திற்கு உறுதுணையாக இருந்த அவர் இப்போ இல்லை என்று தகவல் வெளியானதும் அவருடைய குடும்பத்தின் நிலை இனி என்ன ஆகும் என்ற வருத்தம் ரசிகர்களுக்கு இருக்கிறது. அடுத்த நொடி யாருக்கு என்ன ஆகும்னு தெரியாது என்று ஜமீமா பேசிய பழைய வீடியோக்களை நெட்டிசன்கள் சோசியல் மீடியாவில் பகிர்ந்து வருத்தத்தை தெரிவித்து வருகின்றனர்.

    English Summary

    Neeya Naana: We are all living lives where the next moment is uncertain. While many believe that we should do whatever we can for others while we are here, a recent incident seems to underscore the truth of this sentiment. News is circulating that Jamima—a woman who gained popularity after appearing on the show *Neeya Naana* a few months ago—has passed away.