நிர்வாண வீடியோ அனுப்புறாங்க.. அதுவும் இவ்வளவு கேவலமாக..! நீயா நானா பிரபலம் கண்ணீர்!

  • சென்னை: நீயா நானா நிகழ்ச்சியில் பிரபலம் அடைந்த சமூக சேவகி உமா என்பவர் இன்ஸ்ட்டா பக்கத்தில் கதறி அழுது வெளியிட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. தன்னால் முடிந்த அளவிற்கு தெருவில் வசிப்பவர்களுக்கு உணவளித்து வரும் உமாவிற்கு தொடர்ந்து ஆபாச அழைப்புகள், நிர்வாண வீடியோக்கள் வருகிறது என்று அவர் கண்ணீருடன் சொல்லி இருக்கிறார்.

    சமூக சேவகி உமா

    கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த உமா ஆதரவற்றவர்களுக்கு உதவி செய்து வருகிறார். சாப்பாடு இல்லாமல் இருப்பவர்களுக்கு உணவு சமைத்துக் கொடுப்பது, வயதானவர் மற்றும் ஆதரவற்றவர்களுக்கு தேவையான உதவிகளை செய்வது, ஆதரவற்ற நிலையில் இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்வது என பல்வேறு வழிகளில் சேவை செய்து வருகிறார். இந்த உதவிகளை எல்லாம் அவர் தனக்குள்ள வசதிக்குள் மட்டும் செய்வதில்லை தன்னுடைய சொந்த சம்பாத்தியத்தில் இருந்து ஒரு பகுதியை செலவு செய்கிறார்.

    சில நேரங்களில் மற்றவர்களிடம் உதவி கேட்டு, பணம் பெற்று அந்த பணத்தில் உணவு வாங்கி சமைத்து ஏழை எளிய மக்களுக்கு வழங்கி வருகிறார். இதற்காகவே சமூக வலைதளங்களில் தனது தொலைபேசி எண்ணை பகிர்ந்து உதவி செய்ய விரும்புபவர்கள் தன்னை தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவித்து வருகிறார். ஆனால் அதே தொலைபேசி எண்ணை வைத்து சிலர் செய்து வரும் காரியம் தற்போது கண்ணீரை வர வைத்திருக்கிறது என்று அவர் பேசி இருக்கிறார்.

    இன்ஸ்டாவில் வெளியிட்ட வீடியோ

    உமா வெளியிட்ட வீடியோவில், தனக்கு தொடர்ந்து ஆபாச தொலைபேசி அழைப்புகள் வருவதாகவும், சிலர் வீடியோ காலில் எல்லை மீறி நடந்து கொள்வதாகவும் வேதனையுடன் சொல்லி இருக்கிறார். என்னை பார்த்தால் உங்களுக்கு எல்லாம் எப்படி ஆபாசமாக பேச வேண்டும் என்று தோன்றுகிறது என்று எனக்கே புரியவில்லை. நான் ஒரு அம்மா.. என்னுடைய பையன் வயது இருக்கும் இளைஞர்கள் கூட எனக்கு ஆபாசமாக வீடியோக்கள் அனுப்புகிறார்கள். இது போன்ற செயல்கள் தனக்கு மிகுந்த மனவேதனையை கொடுத்திருப்பதாக கண்ணீருடன் பேசி இருக்கிறார்.

    ஆபாச வீடியோ கால்

    மேலும் சமீபத்தில் ஒருவர் தனக்கு வெளிநாட்டில் இருந்து தொடர்ந்து வீடியோ கால் செய்து வந்ததாகவும், அந்த நபரின் போனை தான் எடுக்காமல் விட்டு விட்டதால் அவர் வாட்ஸ் அப் பக்கத்தில் அவருடைய நிர்வாண வீடியோக்களை அனுப்பி இருப்பதாகவும் அதுவெல்லாம் தனக்கு அசிங்கமாக இருக்கிறது என்று அந்த பெண் கூறி இருக்கிறார். அதோடு நான் இப்படி வீடியோ வெளியிடுவதை பார்க்கும் ஒரு சிலர் நீங்க பேசாம போலீஸ்ல கம்ப்ளைன்ட் குடுங்கன்னு சொல்றீங்க, ஆனால் நான் கம்ப்ளைன்ட் இதுவரைக்கும் 4 கம்பிளைன்ட் கொடுத்து வைத்திருக்கிறேன், எதற்கும் எந்த ஒரு விசாரணையும் இல்லை அதனாலதான் இப்போ சோசியல் மீடியாவில் இதை வீடியோவாக வெளியிடுகிறேன்.

    நான் பகிர்ந்து இருக்கும் வீடியோவில் இருக்கும் நபர் உங்களுக்கு தெரிந்தவரோ அல்லது இது போன்ற நிர்வாண வீடியோக்களை வெளியிடுபவர்களுக்கு ஒரு பாடமாக இருக்க வேண்டும் என்று தான் நான் இந்த வீடியோ வெளியிட்டு இருக்கிறேன் என்று சொல்லி இருக்கிறார். இந்தப் பெண் சில மாதங்களுக்கு முன்பு விஜய் டிவியில் ஒளிபரப்பான நீயா நானா நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

    நீயா நானாவில் நடந்த சம்பவம்

    அப்போது சமூக சேவை செய்பவர்கள் மற்றும் அதனால் வீட்டில் இருப்பவர்கள் படும் கஷ்டம் என்ற தலைப்பில் விவாதம் நடந்தது. அதில் உமாவின் மகன்களாக கோபிநாத்திடம் என்னுடைய அம்மா என் பிறந்தநாள் அன்னைக்கு கூட எனக்காக எதுவும் செய்யாமல் தெருவில் வசிப்பவர்களுக்கு சாப்பாடு போடணும் என்று கிளம்பி போயிட்டாங்க. அன்னைக்கு முந்தைய நாள் தான் அம்மாவே ஹாஸ்பிடல் இருந்தாங்க. அங்கிருந்து டிஸ்சார்ஜ் செய்ததும் அடுத்த நாளே அவங்க இப்படி போனது எனக்கு ரொம்ப வருத்தமா இருந்தது.

    இப்படியும் சில மனிதர்கள்..! இதுதான் இன்று பலருடைய நிலை! நீயா நானாவில் கலங்க வைத்த தருணம்
    அன்னைக்கு நாள் முழுக்க நான் அம்மா எனக்காக வாழ்த்து சொல்ல வருவாங்க என்று காத்திருந்தேன். ஆனா அம்மா அன்னைக்கு எனக்காக எதுவுமே செய்யல என்று கண்ணீருடன் சொல்லி இருந்தார். மகன் இவ்வளவு எமோஷனலாக பேசும் போது கூட உமா, நான் பலரிடம் பிச்சை வாங்கி இல்லாதவர்களுக்கு சமைத்துக் கொடுத்துக் கொண்டிருக்கிறேன். அப்படி வாங்கி வைத்த காய்கறிகளும், சாப்பாடு பொருள்களும் வீட்டில் இருக்கும்போது அதை வைத்துக்கொண்டு நான் எப்படி என்னுடைய மகனுடன் சந்தோஷமாக இருக்க முடியும்! அதை சமைத்து இல்லாதவர்களுக்கு கொடுத்தால் தானே அதற்கு பணம் தந்த வர்களின் மனது சந்தோஷப்படும். அதனால் தான் நான் அப்படி செய்துவிட்டேன் என்று விளக்கம் கொடுத்திருந்தார்.

    ஆனால் இப்படிப்பட்ட ஒரு பெண்ணுக்கு இதுபோன்று தொடர்ந்து மோசமான வீடியோக்கள் அனுப்புவது, வீடியோ கால் செய்வது என சிலர் தொந்தரவு கொடுத்து வருவது பலரையும் வருத்தமடைய செய்திருக்கிறது .இனியாவது இது போன்றவர்கள் திருந்த வேண்டும் என்பதுதான் அனைவரின் கருத்தாக இருக்கிறது.

    English Summary

    Neeya Naana: Social worker Uma, who became famous on the show Neeya Nana, posted a crying video on her Instagram page, which is going viral on the internet. Uma, who feeds the street dwellers as much as she can, has been receiving obscene calls and nude videos, she tearfully said.