நடிகர் பிரசாந்துக்கு கேரளா அரசு கொடுத்த புதிய பொறுப்பு.. போதைப்பொருள் தடுப்பு தூதரான டாப் ஸ்டார்.. பின்னணி தகவல்

  • சென்னை: தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் இளைஞர்களின் மனதை கொள்ளை கொண்ட டாப் ஸ்டார் பிரசாந்த் இப்போது சினிமாவை தாண்டி ஒரு முக்கியமான சமூகப் பொறுப்பை கையில் எடுத்திருக்கிறார். கேரளா அரசின் போதைப்பொருள் தடுப்பு தூதுவராக பிரசாந்த் தியாகராஜன் அறிவிக்கப்பட்டு இருக்கிறார். இந்த அறிவிப்பு வெளியானதும் பிரசாந்துக்கு இப்படி ஒரு பொறுப்பா என அவரது ரசிகர்கள் ஆச்சரியத்துடன் அந்த பதிவை பகிர்ந்து வருகிறார்கள்.

    Advertisement

    படகு போட்டியில் தொடங்கிய அத்தியாயம்

    கேரளாவில் பைப் கார்டு பகுதியில் நடைபெற்ற உலகப் புகழ்பெற்ற படகு போட்டியில் கலந்து கொண்ட பிரசாந்த், கேரளா அரசின் அழைப்பை ஏற்று அந்த நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். அந்த நிகழ்ச்சியில் கேரள அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், மாவட்ட ஆட்சியர் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். ஆனால் நிகழ்ச்சியின் ஹைலைட் படகு போட்டி மட்டுமல்ல. அதே மேடையில் பிரசாந்துக்கு ஒரு புதிய பொறுப்பும் வழங்கப்பட்டுள்ளது.

    Advertisement

    நடிகர் பிரசாந்துக்கு புதிய பொறுப்பு

    கேரளா உள்துறை அமைச்சர் ரமேஷ் சென்னித்தலா மாநிலத்தின் போதை பொருள் தடுப்பு நடவடிக்கைக்கான தூதுவராக பிரசாந்த் தியாகராஜனை அதிகாரப்பூர்வமாக அறிவித்ததுடன் அதற்கான சிறப்பு பேஜ்ஜையும் அவருக்கு அணிவித்திருக்கிறார். கேரளா அரசு மற்றும் காவல்துறை இணைந்து மாநிலம் முழுவதும் போதைப்பொருள் கடத்தல் மற்றும் பயன்பாட்டை கட்டுப்படுத்தும் நோக்கில் மேற்கொண்டு வரும் இந்த முன்னெடுப்புக்கு ஆபரேஷன் டூஃபான் என்று பெயரிடப்பட்டிருக்கிறது.

    போதைப்பொருள் தடுப்பு

    இதன் முக்கிய நோக்கம் போதை பொருள் கடத்தல் கும்பலை வேர்றுப்பதுடன் இளைஞர்கள் மற்றும் மாணவர்களிடையே போதை பொருள் பயன்பாட்டுக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்துவதும் ஆகும். இது போன்ற பிரசாரங்களில் சினிமா பிரபலங்கள் இணைவது முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. காரணம் காவல்துறை அல்லது அரசாங்கம் சொல்லும் ஒரு விழிப்புணர்வு தகவலை விட மக்கள் ஏற்கனவே மனதில் வைத்திருக்கும் ஒரு பிரபல நட்சத்திரம் அதே விஷயத்தை பேசும்போது அது இளைஞர்களை இன்னும் எளிதாக சென்றடைய வாய்ப்பிருக்கிறது.

    Advertisement

    நடிகர் பிரசாந்தின் மாற்றம்

    ஒரு காலத்தில் வைகாசி பொறந்தாச்சு, செம்பருத்தி, ஜீன்ஸ், கண்ணெதிரே தோன்றினாள், வின்னர் என அடுத்தடுத்து வெற்றி படங்களை கொடுத்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கியவர் பிரசாந்த். குறிப்பாக அவருடைய டான்ஸ், ஸ்டைல் 90ஸ் மற்றும் 2000 ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பு இருந்தது. திரையில் ஹீரோவாக வில்லனை எதிர்த்து பிரசாந்த் நிஜ வாழ்க்கையில் இளைஞர்களை அழிக்கும் போதை பொருளுக்கு எதிரான போரில் களம் இறங்குகிறார்கள் என்பதுதான் இந்த பொறுப்பின் சுவாரசியமாக பார்க்கப்படுகிறது.

    English Summary

    Prashanth: Prashanth, the 'Top Star' who once captivated the hearts of young audiences in Tamil cinema, has now taken up a significant social responsibility beyond the film industry. Prashanth Thiagarajan has been appointed as an anti-drug ambassador for the Kerala government. Upon the announcement, fans have been sharing the news with surprise, marveling at him taking on such a role.