கவலைப்படாமல் இருப்பதும் ஒரு கலை தான்.. திரிஷா போட்ட பதிவு.. கையில் இருக்கும் டாட்டூவை சீண்டும் நெட்டிசன்கள்

  • சென்னை: நடிகை திரிஷா சோசியல் மீடியா பக்கத்தில் வெளியிடும் புகைப்படங்களும், போஸ்ட்களும் எப்போதுமே அதிகமாக கவனம் ஈர்த்து விடுகிறது. அந்த வகையில் தற்போது அவர் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த பதிவுதான் இணையத்தில் வைரலாகி வருகிறது. சிட்னி ஆஸ்திரேலியாவில் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து உள்ள திரிஷா அதற்கு என்று பதிவிட்டு இருக்கிறார். இதுதான் இப்போ அதிகமாக பேசப்படுகிறது.

    Advertisement

    நடிகை திரிஷா வெளியிட்ட பதிவு

    அதாவது திரிஷா வெளியிட்ட பதிவில், எதையும் மனதில் போட்டுக் கொள்ளாமல் இருப்பதும் ஒரு தேர்வு தான், அதை தேர்வு செய்யுங்கள், அதோடு சிரிக்க மறக்காதீர்கள்... என்பதே அந்த பதிவில் முக்கியமாகவும் குறிப்பிட்டு இருக்கிறார். திரிஷா இந்த பதிவை போட்ட சில நிமிடங்களிலே லட்சக்கணக்கான ரசிகர்கள் லைக் செய்து வருகின்றனர்.

    Advertisement

    ஆயிரத்திற்கும் மேற்பட்ட கருத்துக்களும் பதிவாகி இருக்கிறது. ஆல்வேஸ் குயின், ஹேப்பி திரிஷா நீங்க எப்போதுமே அழகுதான் என்றெல்லாம் வர்ணித்து ரசிகர்கள் கமெண்ட்ஸ்களை குவிக்கிறார்கள். அதுபோல இந்த போட்டோக்களில் திரிஷாவின் கையில் இருக்கும் டாட்டூவும் மீண்டும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

    நடிகை திரிஷா கையில் டாட்டூ

    பல வருஷங்களாக அவருடைய மணிக்கட்டில் இருக்கும் மீனம் ராசி சின்னம் போன்ற டாட்டூ திரிஷாவின் ரசிகர்களுக்கு மிகவும் பரிச்சயமான ஒன்றாகும். அவருடைய புதிய போட்டோ ஷூட் வெளியாகும் போதெல்லாம் அந்த டாட்டு பற்றி ரசிகர்கள் பேசுவது வழக்கமாகிவிட்டது. அதுபோல இந்த போட்டோஷூட்டில் அடர் பழுப்பு நிற ஸ்லீவ்லெஸ் டிரஸ்ஸில் மிகவும் எளிமையான தோற்றத்தில் திரிஷா போஸ் கொடுத்திருக்கிறார்.

    Advertisement

    ஜனநாயகன் பார்க்க போன திரிஷா செய்த செயல்.. திட்டும் ரசிகர்கள்.. ஆனால், கீர்த்தி சுரேஷுக்கு பாராட்டு குவியுது
    அதிக மேக்கப் இல்லாமல் இயல்பான சிரிப்புடன் இருக்கும் அந்த லுக் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்று இருக்கிறது. திரிஷாவின் அடுத்த திரைப்படம் என்ன? இனி புதிய படத்தில் கமிட்டாகி இருக்கிறாரா? அல்லது சினிமாவை விட்டு விலகப் போகிறாரா? என்று எல்லாம் கூட இந்த பதிவுக்கு கமெண்ட்ஸ் குவிக்கிறது.

    வர்ணிக்கும் ரசிகர்கள்

    அதே நேரத்தில் தற்போது திரிஷா வெளியிட்ட பதிவில் யாருடைய பெயரை குறிப்பிடவும் இல்லை, எந்த சம்பவத்தையும் சுட்டிக்காட்டவில்லை. ஆனால் கவலைப்படாமல் இருப்பதும் ஒரு தேர்வு தான் என்று ஒரு வரியை வைத்து சோசியல் மீடியாவில் விளக்கங்கள் சொல்லப்படுகிறது. ஒரு சிலர் இது ஒரு மோட்டிவேஷனல் லைன் தான் என்று சொன்னாலும் சமீப காலமாக அவரைப் பற்றி வந்த பல்வேறு வதந்திகளுக்கு இதுவே அமைதியான பதிலாக இருக்கும் என்றும் சிலர் சொல்லி வருகிறார்கள்.

    Advertisement

    20 வருஷத்துக்கு மேலாக தமிழ் சினிமாவில் பிஸியாக இருந்தாலும் சோசியல் மீடியாவில் அவ்வப்போது இதுபோல போட்டோஸ்கள் வெளியிட்டு நான் எங்கேயும் போகல, இங்கே தான் இருக்கிறேன் என்று சொல்லாமல் சொல்லி வருகிறார்.

    English Summary

    Trisha : Trisha photos and posts on her social media page always attract a lot of attention. In that way, the post he shared on Instagram is now going viral on the internet. Trisha, who has shared photos taken in Sydney Australia, has posted that. This is the most talked about right now.