சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்த சீரியலில் பாண்டியன் - கோமதி தம்பதியின் மகளாக 'அரசி' கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகை சத்யா சாய். சீரியலில் அவரது கதாபாத்திரத்தைச் சுற்றி பல்வேறு திருப்பங்கள் நடந்து வரும் நிலையில், தற்போது அவரது குடும்ப வாழ்க்கை தொடர்பான ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் செம வைரலாகி வருகிறது.
சீரியலில் அரசிக்கு ஜோடியாக குமர் வருவாரா, அல்லது புதிதாக அறிமுகமான கதாபாத்திரத்துடன் அவருக்கு காதல் டிராக் அமையுமா என்ற விவாதம் ரசிகர்கள் மத்தியில் தொடர்ந்து ஓடிக்கொண்டிருக்கிறது. ஆனால் நிஜ வாழ்க்கையில் சத்யா ஏற்கனவே திருமணமானவர். இதை ரசிகர்களுக்கு அடிக்கடி நினைவூட்டும் விதமாக, "சீரியல் வேறு... நிஜ வாழ்க்கை வேறு" என்ற பாணியில் தனது கணவருடன் சேர்ந்து ரீல்ஸ் வீடியோக்களையும், டான்ஸ் கிளிப்புகளையும் தொடர்ந்து பகிர்ந்து வருகிறார். அதுமட்டுமல்லாமல், வீட்டில் நடக்கும் சின்னச் சின்ன அழகான தருணங்களையும் இருவரும் ரசிகர்களுடன் பகிர்ந்து கொள்வது வழக்கம். அந்த வகையில் தற்போது சத்யாவின் கணவர் வெளியிட்டுள்ள ஒரு வீடியோ தான் இணையத்தில் பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. சத்யாவின் கணவர் ஒரு பிரபல தனியார் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். கல்லூரி பணியில் பிஸியாக இருந்தாலும், மனைவியுடன் சேர்ந்து ரீல்ஸ் வீடியோக்கள் உருவாக்குவதிலும் ஆர்வம் காட்டி வருகிறார். காதலித்து திருமணம் செய்து கொண்ட இந்த ஜோடியின் காதல் கதையும் சுவாரஸ்யமானது. கல்லூரி மாணவர்களை ஒரு நிகழ்ச்சிக்காக அழைத்துச் சென்றபோது தான் சத்யாவை முதன்முதலில் சந்தித்ததாக அவருடைய கணவர் கூறி இருக்கிறார். ஆரம்பத்தில் நட்பாக தொடங்கிய பழக்கம் பின்னர் காதலாக மாறி, இரு குடும்பங்களின் சம்மதத்துடன் திருமணத்தில் முடிந்தது. சத்யாவின் நடிப்பு பயணத்திலும், வளர்ச்சியிலும் அவருக்கு மிகப்பெரிய ஆதரவாக அவரது கணவர் இருந்து வருகிறார். இதை பல பேட்டிகளிலும் சத்யா வெளிப்படையாக கூறியிருக்கிறார். இந்நிலையில் தற்போது வெளியான வீடியோவில், வீட்டை சுத்தம் செய்வது முதல் குப்பைகளை அகற்றுவது வரை அனைத்து வேலைகளையும் சத்யாவின் கணவர் செய்வது போல காட்சிகள் இடம்பெற்றுள்ளன. அதன்பிறகு சமையலறையில் நின்று சமைக்கும் காட்சிகளும் காட்டப்படுகின்றன. இதற்கிடையில் சத்யா மட்டும் கட்டிலில் படுத்தபடி செல்போனில் மூழ்கி இருப்பது போன்ற காட்சிகளும் இடம்பெற்றுள்ளன. வீடியோவில் பேசும் அவர், "மக்களே... நான் இவ்வளவு வேலை பண்ணுறத பார்த்துட்டு இதுதான் நல்ல புருஷன் லட்சணம், இதுதான் கணவன் பண்பு என்று யாரும் எனக்கு கிளாஸ் எடுக்காதீங்க. எனக்கு ஆறுதல் சொல்லாதீங்க. நான் இங்க கிச்சன்ல கஷ்டப்பட்டு சமைச்சிட்டு இருக்கேன். ஆனா மேடம் என்ன பண்ணுறாங்கன்னு பாருங்க..." என்று காமெடியாக புலம்புகிறார். அதற்கு சத்யா மிகவும் கூலாக, "நான் போன் பார்த்துட்டு இருக்கேன்" என்று பதில் சொல்கிறார். உடனே கேமராவை நோக்கி திரும்பும் அவரது கணவர், "பார்த்தீங்களா மக்களே... என்னோட நிலைமையை! என்னை காப்பாத்த யாராவது வரமாட்டாங்களா?" என்று வேதனையுடன் முகபாவனை கொடுப்பது வீடியோவின் ஹைலைட்டாக அமைந்துள்ளது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக திருமணமான ஆண்கள் பலரும், "தலைவா... எங்க வீட்டுலயும் இதே நிலைமைதான்!", "நீங்க மட்டும் இல்லை பாஸ், நாங்க எல்லாரும் இதே டீம்தான்" என்று கலகலப்பான கமெண்ட்களை பதிவிட்டு வருகின்றனர். அதே நேரத்தில் சிலர், "ஒரு நாள் மனைவிக்காக சமைத்துக் கொடுத்தால் அதில் என்ன தவறு?", "குடும்பம் என்பதே பகிர்ந்து கொள்ளும் பொறுப்பு", "மனைவிக்கு ஓய்வு கொடுப்பதும் அன்பின் வெளிப்பாடுதான்" என்று நேர்மறையான கருத்துகளையும் பதிவிட்டு வருகின்றனர். சீரியலில் நடக்கும் கதையை விட, சத்யா மற்றும் அவரது கணவரின் இந்த இயல்பான குடும்ப வாழ்க்கை ரசிகர்களை அதிகம் கவர்ந்துள்ளது. கணவன் - மனைவி இடையேயான இந்த க்யூட்டான நகைச்சுவை தருணம் தற்போது சமூக வலைதளங்களில் ஆயிரக்கணக்கான பார்வைகளையும், பகிர்வுகளையும் பெற்று வைரலாகி வருகிறது.பாண்டியன் ஸ்டோர்ஸ் அரசி
வாத்தியார் மனைவி
சீரியல் நடிகை கணவர் வீடியோ
கணவர் சப்போர்ட்
மயிலிடம் சரவணன் போட்ட சவால்.. இணையும் குடும்பம்.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2-ல் பரபரப்பு ட்விஸ்ட்!
கணவரின் புலம்பல்