கர்ப்பத்தை வித்தியாசமாக அறிவித்த பாண்டியன் ஸ்டோர்ஸ் அரசி.. கேப்ஷனை கவனித்தீர்களா?

  • சென்னை: விஜய் டிவில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் அரசி கேரக்டரில் நடித்து வரும் நடிகை சத்யா சாய் கிருஷ்ணா தனது ரசிகர்களுக்கு அழகான ஒரு குட் நியூஸ் பகிர்ந்து இருக்கிறார். திருமணமாகி 8 வருஷங்கள் கடந்த நிலையில் தாங்கள் வாழ்க்கையில் ஒரு புதிய அத்தியாயம் தொடங்கப் போவதாக சத்யா வெளியிட்டிருக்கும் பதிவு தற்போது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து இருக்கிறது.

    Advertisement

    சத்யா தனது இன்ஸ்டாகிராம் பதிவில், தன்னுடைய கணவருடன் எடுத்து அழகான புகைப்படங்களை பகிர்ந்து இருக்கிறார். அதில், எங்கள் கதை ஒரு கடற்கரையில் முதல் சந்திப்பில் தொடங்கியது. ஒவ்வொரு வருடமும் எங்கள் காதல் என்னும் வலுவானது. 8 வருட திருமண வாழ்க்கை எங்களுக்கு பொறுமை, வலிமை, ஒருவரை ஒருவர் விட்டுக் கொடுக்காமல் இருப்பதன் அர்த்தம் ஆகியவற்றை கற்றுக் கொடுத்தது. நாங்கள் நம்பினோம், பிரார்த்தனை செய்தோம், காத்திருந்தோம். இறுதியாக எங்கள் 2 இதயங்கள் மூன்றாக மாறப் போகின்றன. நாங்கள் காத்திருந்த அந்த சின்ன அதிசயம் வரப்போகிறது என்று கர்ப்பமாக இருக்கும் செய்தியை ரசிகர்களிடம் பகிர்ந்து இருக்கிறார்.

    Advertisement

    கர்ப்பத்தை அறிவித்த பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை

    அதாவது சத்யா கிருஷ்ணா அம்மாவாக போகிறார். அந்த அறிவிப்பை பார்த்ததும் ரசிகர்களும் சீரியல் பிரபலங்களும் அவருக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். காதல் தொடங்கிய இடமும் ரொம்ப ஸ்பெஷல். சத்யாவின் இந்த பதிவில் இன்னொரு விஷயமும் கவனிக்க வைத்திருக்கிறது. அதாவது கடற்கரையில் தொடங்கிய காதல் 8 வருட திருமண வாழ்க்கையை கடந்து இப்போது ஒரு குழந்தையை வரவேற்க அதே இடத்திற்கு வந்திருக்கிறோம் என்று சொல்லி இருக்கிறார்.

    சீரியல் நடிகை கர்ப்பம்

    இது வரும் பிரேக்ணன்சி அனவுன்ஸ்மென்ட் ஆக இல்லாமல் தங்களுடைய எட்டு வருட காதல் வாழ்க்கையை ஒரு சின்ன கதையாக சொல்லி இருக்கிறார். பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் அரசி என்று மட்டுமே சத்யாவை தெரிந்து கொண்டவர்களுக்கு அவருடைய சினிமா மற்றும் சின்னத்திரை பயணம் கொஞ்சம் பழகியது. சின்ன வயதிலிருந்து பல்வேறு போட்டிகள், கலை நிகழ்ச்சிகளில் ஆர்வமாக கலந்து கொண்ட சத்யா பிறகு மாடலிங் மற்றும் நடிப்பிலும் கவனம் செலுத்த ஆரம்பித்தார்.

    Advertisement

    நடிகை சத்யா சாய் குடும்பம்

    காலேஜ் படித்து கொண்டிருக்கும் சமயத்தில் அவருடைய திறமையை பார்த்து அவரிடம் பேச தொடங்கியவர்தான் அவருடைய கணவர். ஆனால் அவர் கல்லூரி நண்பர் கிடையாது. கல்லூரி பேராசிரியராக அப்போது இருந்திருக்கிறார். காலேஜ் ஸ்டுடென்ட் ப்ரொபசர் என்ற ரீதியில் இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. சத்யாவின் கணவர் இன்னொரு காலேஜில் ப்ரொபஷனராக வேலை பார்த்துக் கொண்டு வந்திருக்கிறார். அவர் சத்யா படித்த காலேஜுக்கு தன்னுடைய ஸ்டூடண்ட்ஸை ஒரு நிகழ்ச்சிக்காக கூட்டிக்கொண்டு வந்த சமயத்தில் சத்யாவின் பெர்பார்மன்ஸ் பார்த்து அவருக்கு பிடித்து போக இருவரும் பேச தொடங்கி இருக்கிறார்கள்.

    Advertisement

    காதல் திருமணம்

    பிறகு அவர்களுடைய காதல் குடும்பத்தினரின் சம்பந்தத்துடன் திருமணத்தில் முடிந்திருக்கிறது. தனது மனைவி திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து அவருடைய கனவுகளை நிறைவேற்றுவதற்கு கணவனாக முழு சப்போர்ட்டை அவருடைய கணவர் கொடுத்து வருகிறார். அதுபோல அடிக்கடி இந்த தம்பதி ரீல்ஸ் வீடியோக்களையும் வெளியிட்டு வருவார்கள்.

    பாண்டியன் ஸ்டோர் சீரியல் அரசிக்கு முறை பையனாக இருக்கும் குமாருக்கும் அரசிக்கும் அடிக்கடி சண்டை வந்து கொண்டிருந்தாலும் சூட்டிங் ஸ்பாட்டில் இருவரும் ரீல்ஸ் வீடியோக்கள் எடுத்து வெளியிடுவார்கள். அந்த வீடியோக்களுக்கு கூட சத்யாவின் கணவர் ஜாலியாக கமெண்ட்ஸ் கொடுத்து இருப்பார். பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலின் கதைப்படி இப்போது அரசிக்கு கல்யாணம் நடக்கிறதுக்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கிறது. ஆனால் நிஜ வாழ்க்கையில் ஒரு புதிய கதை ஆரம்பமாக போகிறது. அரசு வீட்டுக்கு குட்டி அரசி வரப்போகிறாரா? அல்லது அரசன் வரப்போகிறாரா? என்பது தான் அடுத்த எதிர்பார்ப்பு.

    English Summary

    Pandian Stores 2 serial: Actress Sathya Sai Krishna, who plays the character 'Arasi' in the ongoing Vijay TV serial *Pandian Stores 2*, has shared some wonderful news with her fans. A post she released, announcing that she and her husband are about to begin a new chapter in their lives after eight years of marriage, has now captured the attention of her fans.