சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் 2026 ஜூலை 16 முதல் 18ஆம் தேதி வரைக்குமான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் ரசிகர்கள் பல மாதங்களாக எப்போ நடக்கும் என்று எதிர்பார்த்து இருந்த சம்பவம் இப்போ நடக்க தொடங்கி விட்டது.
அதாவது ராஜியின் அப்பாவிற்கு கேன்சர் என்ற உண்மையை இத்தனை நாட்களாக மொத்த குடும்பத்தினருக்கும் கதிர் மறைத்து வைத்திருந்தார். ஆனால் இப்போது எதிர்பாராத சூழலில் அது வெளியே வந்திருக்கிறது. இனி என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் ப்ரோமோ
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலின் கதையை பார்க்கும் போது ஏதோ பக்கத்து வீட்டில் நடக்கும் சம்பவம் போலவே இருக்கும். சில நேரங்களில் சந்தோஷமாக கூடி கொள்வார்கள், சில நேரங்களில் நீயா நானா என்று அடித்துக் கொள்வார்கள். அதே நேரத்தில் இன்னும் சில நேரங்களில் அழுகாட்சி காட்சிகளுக்கும் பஞ்சமே இருக்காது. அது போல தான் இப்போது சில வாரங்களாக கதையில் பெரிதாக உப்புசப்பு இல்லாமல் போய்க்கொண்டிருந்தது.
ஆனால் ஒரு வழியாக செந்தில் லஞ்சம் வாங்கிய விஷயத்தை பாண்டியனுக்கு தெரிய வைத்து விட்டனர். அது கொஞ்சம் விறுவிறுப்பை ஏற்படுத்தியது. அதற்கு பிறகு இப்போது அதைவிட பெரிய ட்விஸ்ட் ஒன்று நடந்து இருக்கிறது. அதாவது ராஜியின் அப்பாவிற்கு சில மாதங்களுக்கு முன்பே புற்றுநோய் பாதிக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது. அதற்கான சிகிச்சைக்காக தான் கதிர் அவரை கூட்டிக்கொண்டு ஹாஸ்பிடல் போயிருந்தார்.
இன்றைய எபிசோடு
அது குறித்து கூட இரண்டு குடும்பத்திற்கும் சண்டை வந்தது. அப்போதுதான் கதிர் நடந்த விஷயத்தை பாண்டியனிடம் சொல்லி இருந்தார். அதற்கு பிறகு பாண்டியனும் தன்னுடைய மகனுக்கு சப்போர்ட் செய்து ராஜியின் அப்பாவிடமும் சென்று ஆறுதலாக பேசியிருந்தார். ஆனால் ராஜி அப்பா தனக்கு புற்றுநோய் என்பதை மட்டும் குடும்பத்தில் சொல்லவே வேண்டாம் அப்படி சொன்னால் எல்லோரும் பயப்பட்டு விடுவார்கள் என்று சொல்லி இருந்தார்.
அதனால் அவருக்கு இதயத்தில் சின்ன பிரச்சனை அதற்காக ஆபரேஷன் என்று கதை விட்டிருந்தார்கள். இப்போது ஒரு வழியாக ரசிகர்கள் எதிர்பார்த்தபடியே ராஜி அப்பாவுக்கு புற்றுநோய் என்ற உண்மை தெரிய வந்திருக்கிறது. அதாவது தற்போது வெளியான ப்ரோமோவில் ராஜி அப்பா சக்திவேல் திடீரென உடம்பு சரியில்லாமல் போகிறது. இதனால் மொத்த குடும்பத்தினரும் பதறிப் போகின்றனர். அந்த நேரத்தில் அவரை ஹாஸ்பிட்டலுக்கு கூட்டிட்டு போவதற்காக சக்திவேல் என் தம்பி முயற்சி செய்கிறார். இதை கேள்விப்பட்டதும் கதிர் ஓடி வந்து நாங்க மாமாவை செக் பண்ணுன டாக்டரிடம் கூட்டிட்டு போறேன் என்று கூட்டிட்டு போகிறார். இதை பார்த்து சக்திவேலின் தம்பி கோபப்படுகிறார். என் அண்ணனை எனக்கு பார்க்க தெரியும்... உன் பையன் சொத்துக்காக எங்க குடும்பத்துல நுழையுறானா? என்று அசிங்கப்படுத்தி பேசுகிறார். மயிலிடம் சரவணன் போட்ட சவால்.. இணையும் குடும்பம்.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2-ல் பரபரப்பு ட்விஸ்ட்! எப்படியும் இனி அடுத்த ரெண்டு வாரம் அழுகாட்சி காட்சிகள் தான் இருக்கும். ஆனாலும் இதில் இருந்து சக்திவேல் மீண்டு வரப் போகிறாரா? அல்லது அடுத்த வாரத்துடன் அவருடைய கதையை முடிக்க போகிறார்களா? என்று பொறுத்திருந்து பார்ப்போம்.சீரியல் அப்டேட்
அதற்கு கடுப்பான பாண்டியன் உங்க அண்ணனுக்கு என்ன பிரச்சனை தெரியுமா? நீங்க நினைக்கிற மாதிரி அவருக்கு ஹார்ட்ல சின்ன பிரச்சனை இல்ல அவருக்கு புற்றுநோய் இருக்கு, அதுவும் காப்பாற்ற முடியாத சூழ்நிலையில் இருக்கிறார் அதற்காகத்தான் அவருக்கு சிகிச்சை எடுத்துக் கொண்டிருக்கிறது என்று சொல்ல, மொத்த குடும்பத்தினரும் கதறி அழுது கொண்டிருக்கின்றனர்.