பாண்டியன் ஸ்டோர் 2 அஞ்சலி இனி இவர்தான்.. சாதிகாக்கு பதில் வந்த புதிய நடிகை.. யார் தெரியுமா?

  • சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் இப்போது ஒரு முக்கியமான மாற்றம் நடந்திருக்கிறது. இதுவரை அஞ்சலி கேரக்டரில் நடித்து வந்த சாதிகாவுக்கு பதிலாக அந்த கேரக்டரில் இனி யாலினி வினோத் நடிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஏற்கனவே சாதிகா பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வந்ததும் இனி அஞ்சலி கேரக்டரை கொஞ்ச நாளைக்கு காட்ட மாட்டார்கள் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் ஆளையே மாற்றி விட்டார்கள்.

    Advertisement

    பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல்

    பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் சரவணனின் முன்னாள் காதலியாக அஞ்சலி அறிமுகமானதுமே சீரியலின் கதை வேகம் எடுக்க தொடங்கிவிட்டது. தங்கமயில் பற்றிய உண்மைகளை தெரிய வந்ததும் சரவணன் இனி தங்கமயிலுடன் வாழவே முடியாது என்று வீட்டை விட்டு அனுப்பி வைத்து விட்டார். அந்த சமயத்தில் சரியாக அஞ்சலியும் சீனுக்குள் வர அப்போ சரவணன் இனி அஞ்சலியை கல்யாணம் பண்ணி விடுவாரா? அப்போ தங்கமயில் நிலைமை என்ன ஆகும்? என்ற கேள்வி எழுந்தது.

    Advertisement

    மீண்டும் வீட்டுக்கு வந்த தங்கமயில்

    இப்போது தங்கமயில் மற்றும் சரவணன் இருவருக்கும் விவாகரத்தும் ஆகிவிட்டது. ஆனால் தங்கமயில் கர்ப்பமாக இருக்கும் சமயத்தில் அவருடைய அம்மா வீட்டை விட்டு துரத்தி விட்டார். இதனால் வீட்டிற்கு பாண்டியன் தங்க மயிலை கூட்டிக்கொண்டு வந்திருக்கிறார். அஞ்சலி கேரக்டரில் நடித்து வந்த நடிகை சாதிகா பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு கிளம்பி போய்விட்டார். இதற்கு முன்பு இதுபோல பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு நடிகைகள் போனால் அந்த கேரக்டர் ஊருக்கு போனது போல, அல்லது அவரைப் பற்றிய கதையை இல்லாமல் வேற பக்கத்தில் கதையை திருப்பி விடுவார்கள். இதுதான் விஜய் டிவியில் நடக்கும் வாடிக்கை.

    Advertisement

    அடுத்து என்ன நடக்கும்

    ஆனால் இந்த முறை சாதிகா பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு போனதும் அவருக்கு பதிலாக புதிய நடிகையை கொண்டு வந்து விட்டனர். ஒருவேளை அவர் நூறு நாட்கள் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருப்பார் என்ற நம்பிக்கை விஜய் டிவிக்கு வந்துவிட்டதோ என்னவோ. அதுபோல யாழினி வினோத் இனி அஞ்சலியாக என்ன செய்யப் போகிறார் என்ற கேள்விகளும் வருகிறது. ஒரு வேலை அஞ்சலி இனி வில்லியாக மாறுவாரா? அல்லது எதிர்பாராத சூழ்நிலையில் சரவணனை கல்யாணம் பண்ணிக் கொள்ளப் போகிறாரா? என்று ரசிகர்கள் எதிர்பார்த்து இருக்கிறார்கள்.

    Advertisement

    English Summary

    Pandian Stores 2 serial: A significant change has taken place in the Vijay TV serial *Pandian Stores 2*. It has been officially announced that Yalini Vinoth will take over the role of Anjali, replacing Sadhika, who had been playing the character until now. Fans had previously anticipated that the character of Anjali might not appear on screen for a while after Sadhika joined the *Bigg Boss* show; however, the makers have decided to replace the actress entirely.