மயிலிடம் சரவணன் போட்ட சவால்.. இணையும் குடும்பம்.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2-ல் பரபரப்பு ட்விஸ்ட்!


  • சென்னை: பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் (Pandian Stores 2 serial today episode) மீண்டும் குடும்ப பிரச்சனை உச்சத்தை எட்டியுள்ளது. இதுவரை அமைதியாக இருந்த சரவணன், நேரடியாக தங்கமயிலை சந்தித்து கடுமையாக மோதும் காட்சி ரசிகர்களிடம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக "குழந்தை பிறந்ததும் நான் எடுத்துப் போய் வளர்ப்பேன்" என அவர் சொன்ன டயலாக், அடுத்த எபிசோடுகள் மீது எதிர்பார்ப்பை பல மடங்கு உயர்த்தியுள்ளது.

    Advertisement

    பாண்டியன் ஸ்டோர்ஸ் அப்டேட்

    முந்தைய எபிசோடில், தங்கமயிலின் உடல்நிலை மற்றும் வயிற்றில் வளரும் குழந்தைக்கான மருத்துவ செலவுக்காக பாண்டியன் பணம் அனுப்பியிருந்தார். கோமதி அந்த பணத்தை கொண்டு தங்கமயில் வீட்டிற்கு சென்றாலும், அவர் அப்போது வீட்டில் இல்லாததால் தாயிடம் பணத்தை கொடுத்துவிட்டு திரும்பி வந்தார். ஆனால் வீட்டிற்கு வந்த தங்கமயில், அந்த பணத்தை நேரடியாக பாண்டியன் வீட்டிற்கே வந்து திருப்பிக் கொடுத்துச் சென்றது குடும்பத்தையே அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

    Advertisement

    இன்றைய எபிசோடு

    இதன் தொடர்ச்சியாக இன்றைய எபிசோடில் சரவணன் நேரடியாக தங்கமயிலை சந்தித்து கேள்வி கேட்கிறார். "எங்க அம்மா கொடுத்த பணத்தை திருப்பிக் கொடுக்க உனக்கு அவ்வளவு திமிரா?" என்று கோபமாக கேட்கும் அவர், அந்த பணம் தங்கமயிலுக்காக அல்ல, வயிற்றில் வளரும் தனது குழந்தைக்காக கொடுத்ததாக கூறுகிறார்.

    ஆனால் அதற்கு தங்கமயில் கொடுத்த பதில்தான் காட்சியை இன்னும் சூடேற்றியது. "இப்போதான் அது உங்க குழந்தைன்னு தெரியுதா? அன்னைக்கு அது யாரோட குழந்தையோனு நீங்களே சொன்னீங்களே?" என்று நேருக்கு நேர் கேள்வி கேட்கிறார். இதற்கு கோபத்தில் அப்படிச் சொன்னேன் என்று சரவணன் சமாளித்தாலும், அடுத்த நொடியே மிகப்பெரிய அதிர்ச்சி ட்விஸ்டை கொடுக்கிறார்.

    Advertisement

    சரவணன் சவால்

    "நீ குழந்தை பெத்த உடனே அதை எங்க வீட்டுக்கு தூக்கிட்டு வந்துடுவேன்.. நான் தான் வளர்ப்பேன்.. உன்னை மாதிரி ஆளிடம் அந்த குழந்தை வளரக் கூடாது" என்று சவால் விட்டுச் செல்கிறார். இந்த காட்சி சீரியல் ரசிகர்களிடையே கடும் விவாதத்தை கிளப்பியுள்ளது.

    இதே எபிசோடில் மற்றொரு பக்கம் கதிர் மற்றும் ராஜி வீட்டின் வெளியே பேசிக்கொண்டிருக்கும் போது காந்திமதி வந்து முத்துவேலுக்காக செய்த உதவிக்கு கதிரிடம் நன்றி தெரிவிக்கிறார். அப்போது "பார்க்க டெரரா இருந்தாலும், ஆஸ்பத்திரிக்கு வந்தா பயப்படுறாரு" என்று அவர் சொல்லும் காட்சி லேசான சிரிப்பை ஏற்படுத்துகிறது. ஆனால் இதை பார்த்த சக்திவேல் முறைத்தபடி வீட்டுக்குள் செல்வது, அடுத்த மோதலுக்கான அறிகுறியாக பார்க்கப்படுகிறது.

    Advertisement

    செந்தில் மீனா சண்டை

    மறுபுறம் செந்தில் - மீனா இடையே குடும்ப செலவு பற்றிய விவாதம் நடக்கிறது. மாத செலவுகளை கணக்கிட்டு பார்த்த செந்தில், கரண்ட் பில் 2 ஆயிரம் ரூபாய் வந்திருப்பதாக சொல்ல, "நீ போற இடமெல்லாம் ஃபேனை போட்டுட்டு போற" என்று மீனா திட்டும் காட்சி குடும்ப பார்வையாளர்களுக்கு ரிலேட்டபிள் மோமென்ட்டாக அமைந்தது.

    அதேபோல் பாண்டியன் கடையில் கார்த்திகேயன் என்ற நபர் சிறுதானிய ஸ்நாக்ஸ் வியாபார டீல் பேசும் காட்சியும் வருகிறது. ஆரம்பத்தில் மறுக்கும் பாண்டியனை மனம் மாற்றி மூன்று நாட்கள் ட்ரயலாக பொருட்களை வைக்க சம்மதிக்க வைக்கிறார். இந்த ட்ராக் அடுத்த எபிசோடுகளில் புதிய திருப்பத்தை கொடுக்குமா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

    Advertisement

    இன்றைய ஹைலைட்

    ஆனால் மொத்தத்தில் இந்த எபிசோடின் ஹைலைட் சரவணன் - தங்கமயில் மோதல்தான். குழந்தையை மையமாக வைத்து குடும்பப் பிரச்சனை இன்னும் தீவிரமாகுமா? சரவணன் உண்மையிலேயே குழந்தையை பிரிக்க முயற்சிப்பாரா? தங்கமயில் இதற்கு என்ன பதிலடி கொடுப்பார்? என்ற கேள்விகளோடு ரசிகர்கள் அடுத்த எபிசோடுக்கு காத்திருக்கின்றனர்.

    English Summary

    The latest episode of Pandian Stores 2 delivers intense family drama as Saravanan directly confronts Thangamayil over returning the money sent for her medical expenses and the unborn baby. In a heated argument, Saravanan reminds her that the money was meant for his child, not for her personally. Thangamayil fires back by questioning his earlier denial about the baby’s identity, making the confrontation even more emotional. The biggest twist comes when Saravanan shockingly declares that once the baby is born, he will take the child home and raise it himself, claiming the baby should not grow up with someone like her. Meanwhile, other family tensions continue, including Senthil and Meena’s argument over household expenses and a possible new business opportunity for Pandian. The dramatic baby-related conflict has now become the central talking point among fans awaiting the next episode.