பார்த்திபனுக்கு வந்த ஒரு கேவலமான மெசேஜ்! ராதிகா ஏன் அப்படி பேசினார்? சுகாசினி நிஜமாகவே தள்ளிவிட்டாரா


  • சென்னை: பார்த்திபனுக்கு அந்த மெசேஜ் வந்துள்ளது.. விரக்தியின் வெளிப்பாட்டால் இப்படியொரு மெசேஜ் அனுப்பப்பட்டுள்ளது.. இந்த மாதிரியான விரக்தியடைந்த மனிதர்களின் கருத்துக்களுக்கெல்லாம் நாம் பதில் சொல்லத் தொடங்கினால், நம்மால் வாழ்க்கையை வாழ முடியாது. அதனால் பார்த்திபன் அல்லது ஊடகங்களோ இந்த மாதிரியான நபர்களின் கருத்துக்களைப் பெரிதாக எடுத்துக்கொள்ளாமல், முற்றிலும் இக்னோர் செய்துவிட்டு கடந்து போய்விட வேண்டும்" என்று பிரபல தயாரிப்பாளர் தனஞ்செயன் கருத்து கூறியிருக்கிறார்.

    Advertisement

    Media circle என்ற சேனலுக்கு பேட்டி தந்துள்ள தனஞ்செயன், "பாக்யராஜ் இறுதி சடங்கு நிகழ்வுகளில் ஊடகங்களின் கவரேஜ் குறித்து எனக்கு எந்தவொரு மாற்றுக்கருத்தும் இல்லை. ஏனெனில், மீடியா இல்லாமல் சினிமாவால் தன்னிச்சையாக இயங்க முடியாது. இன்று டெக்னாலஜி எல்லார் கையிலும் ஸ்மார்ட்போன் வந்துவிட்டது, மொபைல் வைத்திருக்கும் ஒவ்வொருவருமே இன்று ஒரு ஊடகமாக மாறிவிட்டார்கள். இதை உங்களால் தடுக்கவோ அல்லது முறைப்படுத்தவோ முடியாது.

    Advertisement

    "பினந்தின்னி கழுகுகள்"

    ஊடகங்களை நோக்கி "பினந்தின்னி கழுகுகள்" என்று விமர்சிப்பதெல்லாம் தீவிரமான கருத்துக்கள், அவர்கள் தங்களின் பணியைத்தான் செய்கிறார்கள். ஊடகங்களுக்கு டிஆர்பி என்பது மிக முக்கியமான ஒன்றாகும்.

    அதனால்தான் விஜய்யின் வீட்டு வாயிலில் 15 கேமராக்கள் காத்துக்கிடக்கின்றன, அவர் காரின் கண்ணாடியைத் திறந்து ஒரு வார்த்தை பேசவில்லை என்றாலும், அவர் காரில் செல்வதையே மக்கள் டிவி ஆர்வமாகப் பார்க்கிறார்கள்.

    ராதிகாவுக்கு வந்த கோபம்

    நடிகை ராதிகா அந்த இடத்தில் மிகுந்த சோகத்தில் இருந்தார். அவருடைய 50 வருட கால ஆழமான நண்பர் இறந்துவிட்டார் என்ற கோபத்தில், 'டிஆர்பி-க்காக எங்களை ஏன் கஷ்டப்படுத்துகிறீர்கள், வேண்டுமானால் உங்களுக்கு ஒரு சீரியல் தயாரித்துத் தருகிறேன்' என்று எமோஷனலாகி சொன்னார்.

    Advertisement

    அவருக்கும் பாக்யராஜ் சாருக்கும் இடையே கிட்டத்தட்ட 50 வருட கால ஆழமான நட்பு உள்ளது. 'இன்று போய் நாளை வா', 'தாவணிக் கனவுகள்' போன்ற எத்தனையோ மாபெரும் வெற்றிப் படங்களை வழங்கிய மிகச்சிறந்த சினிமா ஜோடி அவர்கள்.

    சுஹாசினி தள்ளிவிட்டாரா

    அப்படிப்பட்ட தன் நீண்ட கால நண்பரை இழந்த சோகத்தில் எழும் விரக்தியை நாம் பெரிதாக எடுத்துக்கொள்ளக் கூடாது. நடிகை சுகாசினி அவர்கள் தள்ளிவிட்டதாகக் சொல்லப்படும் காட்சிகளில், உண்மையில் அங்கே ஏற்பட்ட கடுமையான கூட்ட நெரிசல்தான் காரணம். நானும் அங்கே 3 மணி நேரம் இருந்தேன்.

    ஊடகங்கள் வீட்டின் கேட் மீது கேமராக்களை வைத்துப் பதிவு செய்கிறார்கள் என்றால், அதை முறைப்படுத்த வேண்டியது நம்முடைய பொறுப்பாகும். அஜித் குமார் குடும்பத்தில் ஒரு மறைவு ஏற்பட்டபோது, 'இது எங்களது தனிப்பட்ட விஷயம், யாரும் உள்ளே வர வேண்டாம்' என்று கறாராக சொல்லிவிட்டார். அதனால் ஊடகங்களும் உள்ளே செல்லவில்லை.

    Advertisement

    2 பிஆர்ஓக்கள்

    நாமே எல்லாவற்றையும் கவர் செய்ய அனுமதித்துவிட்டு, பிறகு முறைப்படுத்தவில்லை என்று சொல்வதில் அர்த்தமில்லை. அங்கே டைமண்ட் பாபு, ரியாஸ் என 2 லீடிங் பிஆர்ஓக்கள் இருந்தார்கள்.. அவர்கள் ஊடகங்களுக்கென்று ஒரு இடத்தை நிர்ணயம் செய்து, "வேறு யாரும் உள்ளே வரக்கூடாது, மொபைல் போனில் பதிவு செய்யக் கூடாது" என்று பவுன்சர்களை வைத்து மானிட்டர் செய்திருந்தால் அவர்கள் கண்டிப்பாகக் கேட்டு நடந்திருப்பார்கள்.

    பாரதிராஜாவின் இறுதி நிகழ்வின் போது கேமராக்கள் ஃபிக்ஸ் செய்யப்பட்டு, வருபவர்கள் பேசுவதற்கென தனியாக இடம் நேர்த்தியாகத் திட்டமிடப்பட்டிருந்தது, அங்கே யாரும் டிஸ்டர்ப் ஆகவில்லை. அதனால் ஒரு இடத்தில் நடந்த நிர்வாகக் குறைபாட்டிற்காக ஊடகங்களை மட்டும் குறை சொல்வதில் எனக்கு உடன்பாடில்லை.

    Advertisement

    பார்த்திபனுக்கு வந்த மெசேஜ்

    பாக்யராஜின் இறுதிச் சடங்கு காரியங்களை முன்னின்று நடத்திய அவரது சீடரான இயக்குனர் பார்த்திபனுக்கு, இறுதி நிகழ்வுகள் முடிந்ததுமே ஒரு ஷாக் மெசேஜ் வந்துள்ளது.

    அதில், பாக்யராஜ்ஜின் இன்னொரு உதவி இயக்குனர் பார்த்திபனிடம், "நீ யார்? நீ எதுக்கு இதெல்லாம் முன்னே நின்று செய்துட்டு இருக்கே? நீ என்ன அவருடைய மகனா? உனக்கென்ன உரிமை இருக்கு? யாரையுமே கிட்ட நெருங்க விடாமல் எல்லா அட்டென்ஷனையும்) நீயே எடுத்துக்குறியே? உனக்கு சீக்கிரம் சாவு வரும். உன் சாவுக்கு யாருமே வரமாட்டார்கள்" என்றெல்லாம் ரொம்பவே ஹார்ஷான வார்த்தைகளால் சாபமிட்டு அனுப்பியுள்ளார்.

    Advertisement

    இந்த உலகம் பலதரப்பட்ட ஏமாற்றமும் விரக்தியும் அடைந்த மனிதர்கள் நிறைந்த இடம்.. 90 சதவீத மக்கள் ஏதோ ஒரு விஷயத்தில் கடுமையான விரக்தியிலும், மீதமுள்ள 10 சதவீத மக்கள் மட்டுமே வாழ்க்கையை அது இருக்கும்படியே ஏற்றுக்கொண்டு நிம்மதியாகவும் வாழ்கிறார்கள்.

    பாக்யராஜ் இறுதி சடங்கு

    அந்த மெசேஜ் அனுப்பிய நபருக்கு, பாக்யராஜ் சாருடன், தான் 10 வருடங்கள் உதவி இயக்குனராக இருந்தும், இந்த இறுதி நேரத்தில் தனக்குக் கிடைக்க வேண்டிய முக்கியத்துவமும் ஊடகங்களின் கவனமும் கிடைக்கவில்லையே என்றும், தன்னை யாரும் உள்ளே விடவில்லை என்றும் ஏற்பட்ட கடுமையான விரக்தியின் வெளிப்பாடுதான் அது.

    இந்த மாதிரியான விரக்தியடைந்த மனிதர்களின் கருத்துக்களுக்கெல்லாம் நாம் பதில் சொல்லத் தொடங்கினால், நம்மால் வாழ்க்கையை வாழ முடியாது. அதனால் பார்த்திபன் அல்லது ஊடகங்களோ இந்த மாதிரியான நபர்களின் கருத்துக்களைப் பெரிதாக எடுத்துக்கொள்ளாமல், முற்றிலும் இக்னோர் செய்துவிட்டு கடந்து போய்விட வேண்டும்" என்றெல்லாம் தெரிவித்துள்ளார்.

    English Summary

    Parthiban Gets an Abusive Message! Why Did Radhika Say That? Did Suhasini Really Push Him?