5 ஸ்டார் லீலா பேலஸில் 5 டிரஸ் மாற்றிய பப்ளிசிட்டி பார்த்திபன்? உலுக்கிய சாப மெசேஜ்


  • சென்னை: "கதையைத் திருடும் பெரிய டைரக்டர்கள், தயாரிப்பாளர்களுக்கு எதிராக நின்று, பாதிக்கப்பட்ட சாதாரண உதவி இயக்குநர்கள், கதை ஆசிரியர்களின் பக்கம் பாக்யராஜ் எப்போதும் துணை நின்றார். பலருக்கு பஞ்சாயத்து செய்து நஷ்டஈடு தொகையையும் வாங்கித் தந்துள்ளார். அதனால்தான் எளிய கலைஞர்கள் மத்தியில் அவருக்குப் பெரிய மதிப்பு இருந்தது" என்கிறார் மூத்த பத்திரிகையாளர் வெங்கடேசன்.

    Advertisement

    Media circle என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள திண்டுக்கல் வெங்கடேசன், "பாக்யராஜ் இறுதிச் சடங்கின் போது, பார்த்தினுக்கு ஒரு வாட்ஸ்அப் மெசேஜ் அனுப்பியதாக தெரிகிறது. இதை பார்த்திபன் ஒரு நேர்காணலில் குறிப்பிட்டுள்ளார். "நீ சாகும்போது உன் கூட யாருமே இருக்க மாட்டாங்க, அனாதையாகத்தான் சாவாய்" என்று சாபம் விடுவது போல் அந்த மெசேஜ் இருந்ததாக அவர் சொல்லி உள்ளார்.

    Advertisement

    பப்ளிசிட்டி தேடும் பார்த்திபன்

    கோபத்திலோ அல்லது போதையிலோ யாரோ ஒரு நபர் அனுப்பிய இந்தத் தனிப்பட்ட மெசேஜை பார்த்திபன் வெளியில் பொதுவெளியில் சொல்லி இருக்க வேண்டிய அவசியமில்லை. இதன் மூலம் தன் மீது ஒரு தேவையற்ற அனுதாபத்தை ஏற்படுத்த பார்த்திபன் முயல்கிறாரோ என்றுதான் தோன்றுகிறது. பார்த்திபன்

    அவருக்கு எப்போதுமே விளம்பரம் தேடிக் கொள்வதில் அதிக விருப்பம் உண்டு. பாக்யராஜ் மறைந்த 2, 3 நாட்களிலேயே லீலா பேலஸ் ஃபைவ் ஸ்டார் ஹோட்டலில் மீடியாக்களை வரவழைத்து பார்த்திபன் பேட்டி அளித்துள்ளார். அதற்காக 5 முறை டிரஸ்ஸை மாற்றி விளம்பரப்படுத்திக் கொண்டதாகவும் ஒரு சர்ச்சை எழுந்துள்ளது. துக்க வீட்டிலும் கூட இப்படி ஒரு பப்ளிசிட்டி தேவையா என்ற கேள்வி எழுகிறது.

    Advertisement

    5 ஸ்டார் ஹோட்டல்

    ஒட்டுமொத்த ஊடகங்களையும் ஒரே இடத்தில் கூட்டிப் பேட்டி அளிப்பதற்குப் பதிலாக, குறிப்பிட்ட சில ஊடகங்களை மட்டும் தேர்வு செய்து இப்படிச் செய்தது தன்னைத் தனிப்பட்டு விளம்பரப்படுத்திக் கொள்வதற்கான ஒரு செயலாகவே தெரிகிறது.

    பாக்யராஜ் உடல்நிலை மற்றும் குடும்ப வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சியாகவும் ஆரோக்கியமாகவும் இருந்தது. அவரது மனைவி பூர்ணிமா குடும்பப் பொறுப்புகளைக் கவனித்துக் கொள்ள, பாக்யராஜ் மிகவும் சுதந்திரமாகச் சங்க வேலைகளையும் சினிமா நிகழ்வுகளையும் கவனித்து வந்தார். தன் மகன் சாந்தனுவை பெரிய இடத்திற்குக் கொண்டு வர வேண்டும் என்ற ஒரு சின்ன ஏக்கம் மட்டும் அவருக்குள் இருந்தது.

    Advertisement

    எழுத்தாளர் சங்கம்

    உண்மையில், பாக்யராஜ் மறைவுக்கு அவரது உடல்நலக் குறைவை விட, எழுத்தாளர் சங்கத்தில் நிலவிய கடுமையான பிரச்சனைகளே முக்கியக் காரணமாகும். கவிஞர் சினேகன், பா. விஜய் உள்ளிட்ட பலரும் இது குறித்துப் பேசியுள்ளனர். பாக்யராஜ் மறைவதற்கு முந்தைய நாள் இரவு கூட, சங்கத்தில் தேர்தல் நடத்தக் கூடாது என்றும், அவரைத் தலைவர் பதவியிலிருந்து எப்படியாவது இறக்க வேண்டும் என்றும் ஒரு குறிப்பிட்ட குழுவினர் சதி வேலைகளில் ஈடுபட்டு வந்தனர்.

    கதையைத் திருடும் பெரிய டைரக்டர்கள், தயாரிப்பாளர்களுக்கு எதிராக நின்று, பாதிக்கப்பட்ட சாதாரண உதவி இயக்குநர்கள், கதை ஆசிரியர்களின் பக்கம் பாக்யராஜ் எப்போதும் துணை நின்றார். பலருக்கு பஞ்சாயத்து செய்து நஷ்டஈடு தொகையையும் வாங்கித் தந்துள்ளார். அதனால்தான் எளிய கலைஞர்கள் மத்தியில் அவருக்குப் பெரிய மதிப்பு இருந்தது" என்றெல்லாம் தெரிவித்துள்ளார்.

    English Summary

    Parthiban's 5 Outfits at Leela Palace and the Curse Message That Stirred Debate