பசங்க பட சிறுமியை நினைவு இருக்கா? 7 வருடத்துக்கு பிறகு இப்படி ஒரு கம்பேக் எதிர்பார்க்கலையே!


  • சென்னை: ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் பள்ளி வாழ்க்கையை அவ்வளவு இயல்பாக திரையில் காட்டிய படம் என்றால் பலருக்கும் முதலில் நினைவுக்கு வருவது 'பசங்க' தான். இயக்குநர் பாண்டிராஜின் முதல் படமாக வெளியான இந்த திரைப்படம், வெறும் குழந்தைகள் படம் இல்லை; பள்ளி நாட்களின் குறும்பு, நட்பு, சண்டை, காதல் உணர்வுகள் என 90ஸ் கிட்ஸ்களுக்கு மறக்க முடியாத நினைவுகளை கொடுத்த படம்.

    Advertisement

    பசங்க பட மனோன்மணி

    அந்த படத்தில் நடித்த ஒவ்வொரு குழந்தை நட்சத்திரங்களுமே ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தனர். குறிப்பாக மனோன்மணி கதாபாத்திரத்தில் நடித்த அந்த கியூட் சிறுமியை யாராலும் மறக்க முடியாது. குறும்பான முகம், இயல்பான நடிப்பு, குழந்தைத்தனமான ரியாக்ஷன்களால் பலரின் ஃபேவரைட்டாக மாறியவர் தாரணி.

    Advertisement

    பசங்க பட சிறுமி

    இப்போது அதே தாரணி பற்றிய ஒரு செய்திதான் இணையத்தில் வைரலாகி வருகிறது. சமீபத்தில் இயக்குநர் பாண்டிராஜின் பரிமளா அண்ட் கோ பட நிகழ்ச்சியில் கலந்துகொண்ட தாரணி, "7 வருடங்களுக்கு பிறகு மீண்டும் கம்பேக் கொடுக்கிறேன். கல்யாணம் ஆகிவிட்டது. தற்போது ஹவுஸ்வைஃபாக ஜாலியாக இருக்கிறேன்" என்று பேசிய வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

    இதைக் கண்ட ரசிகர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்திருக்கிறார்கள். குறிப்பாக 90ஸ் மற்றும் 96 கிட்ஸ் கமெண்ட்ஸ்தான் இணையத்தில் வைரலாகி வருகிறது.

    "நாங்க பத்தாம் வகுப்பு படிக்கும்போது இந்த படம் வந்துச்சு... அப்போ குழந்தையா இருந்த நீ இப்போ கல்யாணம் முடிஞ்சு ஹவுஸ்வைஃப்னு சொல்றியா?" "எங்களுக்கு இன்னும் கல்யாணம் ஆகல... பசங்க பட சிறுமி குடும்ப வாழ்க்கையில் செட்டில் ஆயிட்டாங்க!", "டைம் இவ்வளவு வேகமா போயிடுச்சா?" என்று பலர் ஃபீல் பண்ணி வருகிறார்கள்.

    Advertisement

    பசங்க பட அனுபவம்

    பசங்க படம் 2009-ல் வெளியானது. அந்த படத்தை பள்ளி படிக்கும் வயதில் பார்த்தவர்கள் இன்று வேலை, குடும்பம், வாழ்க்கை போராட்டங்களில் இருக்கும் நிலையில், அப்போது குழந்தை நட்சத்திரமாக இருந்த ஒருவர் இப்போது "ஹவுஸ்வைஃப்" என்று சொல்லும் தருணம் அவர்களுக்கு நேரம் எவ்வளவு வேகமாக ஓடிவிட்டது என்பதை நினைவூட்டியுள்ளது.

    தாரணி 'பசங்க' படத்திற்குப் பிறகு கொம்பன் உள்ளிட்ட சில படங்களில் நடித்திருந்தாலும், அதன் பிறகு சினிமாவிலிருந்து விலகி இருந்தார். இப்போது மீண்டும் அதே பாண்டிராஜ் படத்தின் மூலம் comeback கொடுக்க இருப்பது ரசிகர்களுக்கு double surprise ஆகியுள்ளது.

    Advertisement

    ஒருகாலத்தில் திரையில் குழந்தையாக பார்த்த முகம், இன்று குடும்ப வாழ்க்கையில் செட்டில் ஆகி மீண்டும் கம்பேக் கொடுக்கிறார் என்ற செய்தி, ரசிகர்களுக்கு நெகிழ்ச்சியையும் ஆச்சரியத்தையும் கொடுத்திருக்கிறது.

    ஒரு சினிமா செய்தியை விட, இது பலருக்கு "நம்ம வயசு இவ்வளவு ஆகிடுச்சா?" என்ற reality check ஆக மாறியிருக்கிறது.

    English Summary

    Tamil cinema fans are in for a nostalgic surprise as Pasanga child artist Dharani, who won hearts as Manonmani, is making a comeback after seven years. Speaking at a recent event for director Pandiraj’s upcoming film, Dharani revealed that she is now married and happily living as a housewife, leaving many 90s and 96 kids stunned at how quickly time has passed. Having appeared in a few films after Pasanga, including Komban, she later stepped away from cinema. Her return through a Pandiraj project has now sparked excitement and a wave of nostalgic reactions online.