சென்னை: தெலுங்கு சினிமாவில் தனக்கென ஒரு மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை வைத்திருக்கும் நடிகர் பவன் கல்யாண் சினிமாவில் மட்டுமல்லாமல் அரசியலிலும் அடிக்கடி பேசப்பட்டு வருகிறார். தற்போது ஆந்திர பிரதேசத்தின் துணை முதல்வராகவும் இருக்கிறார். இப்படி பொது வாழ்க்கையில் எப்போது கவனிக்கப்படும் பவன் கல்யாணின் தனிப்பட்ட வாழ்க்கை இப்போது மீண்டும் பேசும் பொருளாக மாறி இருக்கிறது.
தன்னுடைய 3வது மனைவி அன்னா லெஷ்னேவாவை பிரிவதாக பவன் கல்யாண் அறிவித்திருக்கிறார். இருவரும் இணைந்து வெளியிட்ட அறிக்கையில், பரஸ்பர புரிதலுடன் இந்த முடிவை எடுத்து இருக்கிறோம். திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்தாலும் நல்ல நண்பர்களாகவும், குழந்தைகளுக்கு பொறுப்பான பெற்றோர்களாகவும் இருப்போம் என்று தெரிவித்துள்ளனர். இந்த அறிவிப்பு வெளியான பிறகு பவன் கல்யாணின் 3 திருமணங்கள், அவருடைய 4 குழந்தைகள் பற்றி விவரங்களை பலரும் தேடத் தொடங்கி இருக்கிறார்கள். அதே நேரத்தில் பவன் கல்யாண் பேசிய பழைய பேட்டிகளும் வைரலாகி வருகிறது.
முதல் கல்யாணம்
பவன் கல்யாணின் முதல் கல்யாணம் 1997 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நந்தினி என்பவருடன் நடந்து. இது பெரியவர்கள் பார்த்து ஏற்பாடு செய்த திருமணம். அப்போது பவன் கல்யாண் சினிமாவில் வளர்ந்து கொண்டிருந்த காலகட்டம். ஆனால் அவருடைய முதல் திருமண வாழ்க்கை நீண்ட நாட்கள் நீடிக்கவில்லை. 1999ல் இருவரும் பிரிந்து வாழ தொடங்கினர். இருந்தாலும் 2008 ஆம் ஆண்டில் இருவருக்கும் விவாகரத்து உறுதியானது. முதல் திருமணத்தில் பவன் கல்யாணுக்கு குழந்தைகள் இல்லை.
பவன் கல்யாணின் வாழ்க்கையில் அடுத்ததாக வந்தவர் நடிகையும் மாடலுமான ரேணு தேசாய். இருவரும் 2000 ஆண்டு வெளியான பத்ரி படத்தில் இணைந்து நடித்த போது நட்பாக தொடங்கி பிறகு காதலித்து சில வருடங்கள் ஒன்றாக வாழ்ந்த பிறகு 2009 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிக்கு 2 குழந்தைகள். மகன் அகிரா நந்தன் 2004 ஆம் ஆண்டு பிறந்தார். மகள் ஆதியா 2010 ஆம் ஆண்டு பிறந்தார். அகிரா இப்போது பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் புகைப்படங்கள் கூட சோசியல் மீடியாவில் அடிக்கடி வைரலாகி வருகிறது. ஆனால் ரேணு உடனும் திருமண வாழ்க்கையும் நீண்டகாலம் நீடிக்கவில்லை. இருவரும் கடந்து 2012 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்தனர். நடிகை ரேணுவுடன் விவாகரத்துக்கு பிறகு பவன் கல்யாண் வாழ்க்கையில் வந்தவர் ரஷ்யாவை சேர்ந்த அன்னா லெஷ்னேவா. 2011 ஆம் ஆண்டு வெளியான தீன் மார்க் படத்தில் இருவரும் இணைந்து நடித்த போது இருவருக்கும் காதல் ஏற்பட்டு 2013 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிக்கு 2 குழந்தைகள் இருக்கின்றனர். மகள் போலேனா அஞ்சனா பவனோவா, மகன் மார்க் சங்கர் பவனோவிச். மொத்தத்தில் பவன் கல்யாணுக்கு ரேணு தேசாய் மூலம் 2 குழந்தைகளும், அன்னா மூலம் 2 குழந்தைகள் என மொத்தம் 4 குழந்தைகள் இருக்கின்றனர். இப்போது 3வது திருமணத்திலிருந்தும் பிரிவதாக பவன் கல்யாண் அன்னாவுடன் அறிக்கை வெளியிட்டு இருக்கிறார். அந்த அறிவிப்பில் பிரிவுக்கான காரணம் என்ன என்பதை பற்றி அவர்கள் சொல்லவில்லை. மேலும் சட்ட ரீதியான விவாகரத்து முடிந்து விட்டதாகவும் அந்த அறிக்கையில் சொல்லவில்லை. ஒரு பக்கம் அரசியலில் துணை முதல்வராக பல பொறுப்புகளை கவனித்து வரும் பவன் கல்யாண், மறுபக்கம் தனது தனிப்பட்ட வாழ்க்கை தொடர்பான இந்த அறிவிப்பால் சோசியல் மீடியாவில் பேசப்படுகிறார்.2வது கல்யாணம்
பவன் கல்யாண் 3வது மனைவியை பிரிவதை அறிவிப்பதற்கு முன்பு.. 14 வருஷ வருத்தம் என உருக்கமாக பேசிய 2வது மனைவி
3வது திருமணம்
4 குழந்தைகள்