கீழே விழுந்தவரை உதைப்பது! பவன் கல்யாண் 3வது மனைவியை பிரிவதை அறிவித்ததும் 2வது மனைவி போஸ்ட்

  • சென்னை: பவன் கல்யாண் 3வது மனைவி அன்னா லெஷ்னேவாவை பிரிவதாக அறிவித்ததை தொடர்ந்து அவருடைய முன்னாள் மனைவி நடிகை ரேணு தேசாய் வெளியிட்ட பதிவு இணையத்தில் கவனம் ஈர்த்து வருகிறது. ஒருவருடைய கடினமான சூழலை பயன்படுத்தி அவரை மேலும் விமர்சிப்பது சரியல்ல என்று பவன் கல்யாணத்துக்கு சப்போர்ட் பண்ணுவது போல அவர் அந்த பதிவை வெளியிட்டு இருக்கிறார். அதே நேரத்தில் இந்த பதிவு யாரைப்பற்றியது என்று ரசிகர்கள் யூகிக்க வேண்டாம் என்றும் அவர் கேட்டுக் கொண்டிருக்கிறார்.

    Advertisement

    தெலுங்கு சினிமாவில் நேற்று முன்தினம் பவன் கல்யாண் தனது மனைவியை பிரிவதை அறிவித்தது தான் பெரிதாக பேசப்பட்டு வருகிறது. பவன் கல்யாண்- அன்னா லெஷ்னேவா இருவரும் பிரிவதாக அறிக்கை வெளியிட்டு இருந்தனர். அதனால் அவர்களுடைய தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பல்வேறு விவாதங்கள் கிளம்பி வருகிறது. எதற்காக இந்த தம்பதி திடீரென விவாகரத்து செய்கிறார்கள்? சில மாதங்களுக்கு முன்பு கூட பவன் கல்யாணுக்காக அன்னா திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்திருந்தாரே! வெளிநாட்டு பெண்ணாக இருந்தாலும் கணவருக்காக முடி காணிக்கை செலுத்தி அன்னதானமெல்லாம் செய்திருந்தார். அப்படி இருக்கும்போது இப்போ திடீரென்று ஏன் பிரிகிறார்கள் என்று பல்வேறு கேள்விகளும் விவாதங்களும் எழுந்து வருகிறது.

    Advertisement

    பவன் கல்யாண் முன்னாள் மனைவி பதிவு

    இந்த நிலையில் தான் பவன் கல்யாணின் முன்னாள் மனைவியான நடிகை ரேணு தேசாய் சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்துள்ள பதிவு கவனம் ஈர்த்து வருகிறது. அதில் அவர் யாருடைய பெயரையும் குறிப்பிடவில்லை. ஆனால் ஒருவர் ஏற்கனவே வாழ்க்கையில் கடினமான சூழலை சந்தித்துக் கொண்டிருக்கும் போது அவரை மேலும் விமர்சிப்பது எந்த வகையிலும் சரியான அணுகுமுறை கிடையாது. கீழே விழுந்து கிடப்பவரை மீண்டும் எட்டி உதைப்பது மனிதாபிமானமற்ற செயல். எந்த நிலையில் இருந்தாலும் அவர்களும் மனிதர்கள் தான் என்பதை மறந்து விடக்கூடாது என்றும் குறிப்பிட்டு இருக்கிறார்.

    Advertisement

    மேலும் அந்த பதிவில், ஒருவரை விமர்சிப்பதற்கு முன்பு நம்முடைய வாழ்க்கையும் கொஞ்சம் திரும்பி பார்க்க வேண்டும். நம்மிடமே குறைகள் இருக்கும்போது மற்றவர்களின் வாழ்க்கையை மட்டும் குறை சொல்லிக் கொண்டிருப்பது சரியல்ல. மனிதராக இருப்பதற்கு பரிவும், கருணையும் மிகவும் அவசியம் என்று சொல்லி இருக்கும் ரேணு அந்த பதிவில் இன்னொரு விஷயத்தையும் தெளிவுபடுத்திருக்கிறார்.

    அறிக்கைக்கு பிறகு வெளியான பதிவு

    தான் இப்படி ஒரு கருத்தை பகிர்ந்து இருப்பதை வைத்து தேவையில்லாத யூகங்களை உருவாக்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டிருக்கிறார். ஒரு சமூகமாக நாம் இன்னும் சிறப்பாகவும், மற்றவர்களிடம் கருணையுடனும் நடந்து கொள்ள முடியும் என்ற நம்பிக்கையில் தான் இந்த பதிவை எழுதி இருக்கிறேன் என்று அவர் சொல்லி இருக்கிறார். பவன் கல்யாண் பிரிவு அறிவித்த பிறகு இந்த பதிவு வெளியாகியிருப்பதால் ரசிகர்கள் இதை அந்த சம்பவத்தோடு தொடர்பு படுத்தி பேச தொடங்கி இருக்கின்றனர்.

    Advertisement

    மூன்று திருமணம்

    பவன் கல்யாண் ரேணு தேசாய்க்கும் இடையில் பழைய உறவு மீண்டும் பேசப்பட்டு வருகிறது. இருவரும் 2009 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிக்கு 2 குழந்தைகள் இருக்கின்றனர். பின்னர் இருவரும் பிரிந்த நிலையில் பவன் கல்யாண் 2013 ஆம் ஆண்டில் ரஷ்ய பெண்ணான அன்னாவை திருமணம் செய்து கொண்டார். தற்போது அன்னாவுடன் 13 ஆண்டுகள் திருமண வாழ்க்கையை முடித்துக் கொள்வதாக பவன் கல்யாணும் அன்னாவும் அறிக்கை வெளியிட்டு இருக்கிறார்கள்‌ ஏற்கனவே பவன் கல்யாணுக்கு 3 திருமணம் முடிந்திருக்கிறது என்ற விமர்சனம் ஒரு பக்கம் இருக்க, இப்ப 3வது திருமணமும் விவாகரத்தில் முடிந்து விட்டதே என்று சிலர் விமர்சித்து வருகிறார்கள்.

    English Summary

    Pawan Kalyan: Following Pawan Kalyan’s announcement that he is separating from his third wife, Anna Lezhneva, a post shared by his ex-wife, actress Renu Desai, has garnered significant attention online. In what appears to be a gesture of support for Pawan Kalyan, she stated that it is not right to further criticize someone who isalready going through a difficult situation. At the same time, she has requested that fans refrain from speculating about whom the post might be referring to.