“பெப்ஸி உமாவுக்கு என்ன ஆச்சு?” வெளியான லேட்டஸ்ட் புகைப்படம்… பரிதவிக்கும் ரசிகர்கள்!


  • சென்னை: தமிழ் சின்னத்திரை உலகில் ஒருகாலத்தில் தனியாக ஒரு ரசிகர் பட்டாளத்தை வைத்திருந்த பெயர் என்றால் அது பெப்ஸி உமாதான். சன் டிவியில் ஒளிபரப்பான 'பெப்ஸி உங்கள் சாய்ஸ்' நிகழ்ச்சியின் மூலம் வீடு தோறும் சென்று சேர்ந்த அவர், ஒரு நிகழ்ச்சி தொகுப்பாளினி மட்டுமல்ல; 90களும் 2000களின் தொடக்க காலமும் சேர்ந்த தமிழ் டிவி ரசிகர்களுக்கு ஒரு தனி ஃபீலிங்.

    Advertisement

    பெப்சி உமாவின் லேட்டஸ்ட் போட்டோஸ்

    பல வருடங்களாக பொதுவெளியில் பெரிதாகக் காணப்படாமல் இருந்த பெப்ஸி உமாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இப்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றன. ஆனால் அந்த புகைப்படங்களைப் பார்த்த ரசிகர்கள் சந்தோஷப்படுவதற்கும் மேலாக அதிர்ச்சியுடனும் கவலையுடனும் ரியாக்ட் செய்து வருகிறார்கள்.

    Advertisement

    "இது நம்ம பெப்ஸி உமாவா?", "இவ்வளவு மெலிஞ்சுட்டாரே?", "அவருக்கு என்ன ஆச்சு?" - இப்படி பல கேள்விகள் கமெண்ட் பாக்ஸில் குவிந்து வருகின்றன. காரணம், ரசிகர்கள் மனதில் பதிந்திருந்த பெப்ஸி உமாவின் உருவம் வேறொன்று. முழு முகம், பெரிய பொட்டு, பளிச்சென்ற சிரிப்பு, புஷ்டியான தோற்றம், அந்த தனி குரல் - இதுதான் பலரின் நினைவில் இன்னும் அப்படியே இருக்கிறது.

    ஆனால் இப்போது வெளியாகியுள்ள புகைப்படங்களில் அவர் மிகவும் மெலிந்த தோற்றத்தில் காணப்படுவது ரசிகர்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சியோடு சேர்ந்து கவலையையும் கொடுத்திருக்கிறது.

    Advertisement

    பெப்சி உமாவின் சிறப்பு

    பெப்ஸி உமா என்ற பெயர் எப்படி இவ்வளவு பெரிய பிராண்டானது என்பதை இன்றைய தலைமுறையினர் புரிந்து கொள்ளவேண்டும். எம்பிஏ படித்த உமா மகேஸ்வரி, 'வாருங்கள் வாழ்த்துவோம்' நிகழ்ச்சியின் மூலம் தொகுப்பாளராக அறிமுகமானாலும், அவரை தமிழகமெங்கும் புகழின் உச்சிக்குக் கொண்டு சென்றது 'பெப்ஸி உங்கள் சாய்ஸ்' தான். இப்போது ஒரு டிவி நிகழ்ச்சி 100 எபிசோடு கடக்கவே பெரிய விஷயமாக இருக்கும் சூழலில், அந்த நிகழ்ச்சி தொடர்ந்து 15 ஆண்டுகள் ஓடியது என்பது சாதாரண சாதனை அல்ல. அந்த நிகழ்ச்சியின் வெற்றிக்கு முக்கிய காரணம் உமாவின் குரல், பேச்சு, முகபாவனை, ரசிகர்களை ஈர்த்த தனி ஈர்ப்பு - இவையே என்று சொல்ல வேண்டும்.

    Advertisement

    அந்தக் காலத்தில் சின்னத்திரை தொகுப்பாளர்களுக்குள் கூட பெப்ஸி உமாவுக்கு இருந்த ஸ்டார் ஸ்டேட்டஸ் வேற லெவல். நடிகை குஷ்புவுக்கு கோயில் கட்டிய ரசிகர்கள் இருந்த காலத்தில், சின்னத்திரை தொகுப்பாளினியாக இருந்த உமாவுக்கும் அதே அளவுக்கு ரசிகர்கள் இருந்தனர். அவருக்காக விரலை வெட்டி பரிசளிக்க முயன்ற ரசிகர்கள் வரை இருந்ததாக பல ஆண்டுகளாக பேசப்பட்டு வந்தது.

    சினிமாவுக்கு மறுப்பு

    சின்னத்திரையில் கிடைத்த அந்த அளவிலான புகழ், அவரை வெள்ளித்திரைக்கும் அழைத்துச் சென்றது. ரஜினிகாந்த் முதல் ஷாருக்கான் வரை பலருடன் நடிக்க வாய்ப்புகள் வந்ததாகக் கூறப்பட்டாலும், அவர் அவற்றை ஏற்காமல் விலகி நின்றார். பின்னர் திருமணம் செய்து கொண்டு குடும்ப வாழ்க்கையில் கவனம் செலுத்தினார்.

    Advertisement

    அதற்குப் பிறகு, பொதுவெளியில் அவர் தோன்றுவது மிகவும் அரிதான விஷயமாக மாறிவிட்டது. சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு யூடியூப் நிகழ்ச்சியில் மட்டும் கலந்துகொண்டு ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்தார். அதற்குப் பிறகு மீண்டும் அவர் பெரிதாக எங்கும் தெரியவில்லை. அந்த காரணத்தால்தான் இப்போது வெளியான இந்த லேட்டஸ்ட் புகைப்படங்கள் ரசிகர்களுக்கு இன்னும் பெரிய ஆச்சரியத்தை கொடுத்திருக்கின்றன.

    ரியாஸ்கானுக்கு விருது கொடுக்கல.. நந்தினி சீரியலுக்காக பட்ட கஷ்டம்! உமா ரியாஸ்கான் வருத்தம்

    ரசிகர்கள் வருத்தம்

    பெப்சி உமா "எங்கே இருக்கிறார்?", "எப்படி இருக்கிறார்?" என்று பல வருடங்களாக தேடி வந்தவர்களுக்கு, இந்தப் புகைப்படங்கள் ஒரு வகையில் மகிழ்ச்சியையும், இன்னொரு வகையில் பதட்டத்தையும் கொடுத்துவிட்டன.

    Advertisement

    சமூக வலைதளங்களில் ரசிகர்கள் போடும் கமெண்ட்ஸைப் பார்த்தாலே அது புரியும். சிலர், "பெப்ஸி உமாவை இவ்வளவு நாளைக்கு பிறகு பார்க்கிறதே சந்தோஷம்" என்று எழுத, இன்னும் சிலர் "மிகவும் மெலிந்துபோயிருக்கிறார்... உடல்நலப் பிரச்சினையா?" என்று கவலை தெரிவிக்கிறார்கள்.

    பெப்சி உமாவின் மாற்றம்

    ஆனால் வயது, வாழ்க்கை முறை, உடல் அமைப்பு, உடல்நல கவனம், உணவு பழக்கம் - இவை எல்லாம் ஒருவரின் தோற்றத்தை காலப்போக்கில் மாற்றுவது இயல்பான விஷயம்தான். பெப்ஸி உமாவுக்கும் அப்படியான மாற்றங்கள் ஏற்பட்டிருக்கலாம். ஆனாலும், ரசிகர்கள் மனதில் பதிந்திருந்த பழைய உமாவை இவ்வளவு வேறுபட்ட தோற்றத்தில் ஏற்றுக்கொள்ள கொஞ்சம் நேரம் எடுப்பது உண்மை.

    அதே நேரத்தில், இந்தப் புகைப்படங்களில் ஒரு விஷயம் மட்டும் மாறவே இல்லை என்று ரசிகர்கள் சொல்கிறார்கள் - அது அவருடைய நெற்றி பொட்டு, சிரிப்பு, கண்களின் ஈர்ப்பு. உடல் மெலிந்திருந்தாலும், அந்த முகபாவனை, அந்த பழைய இனிமை இன்னும் அப்படியே இருக்கிறது என்பதே பலரின் கருத்து. அதனால்தான், "பெப்ஸி உமா மாறிவிட்டார்" என்ற அதிர்ச்சியோடு கூட, "அந்த சிரிப்பு இன்னும் அதே மாதிரி இருக்கே" என்ற பாசமான ரியாக்ஷன்களும் இணையத்தில் குவிகின்றன.

    English Summary

    Pepsi Uma: Former Tamil television icon Pepsi Uma is back in the spotlight after her latest photos surfaced online and quickly went viral. Once one of the most loved faces on Sun TV through the hugely popular show Pepsi Ungal Choice, Uma had stayed away from the public eye for many years, making these new pictures an emotional moment for her fans.