கவிப்பேரரசுக்கு அகவை 73.. முத்து முத்தாக பாடல் வரிகள் வந்து விழுகிறதே.. மாயாஜாலம்


  • சென்னை: பொதுவாக காதல் வந்தால் எல்லோருமே கவிஞர்கள் தான் என்று சொல்வார்கள். ஆனால் காதலிக்காதவர்களையும் ஒரு பாடலைக் கேட்டு காதலிக்க வைத்தவர்கள் சிலர்தான். அந்த வரிசையில் கவிஞர் வைரமுத்துவுக்கு தமிழ் சினிமாவில் தனி இடம் உண்டு. இன்று தனது 73 வது பிறந்த நாளை கொண்டாடும் வைரமுத்துவின் பாடல்களை திரும்பிப் பார்த்தால் ஒரு விஷயம் மட்டும் நமக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தும். கவிஞருக்கு வயசாகிவிட்டது ஆனால் அவர் எழுதிய காதல் வரிகளுக்கு மட்டும் இன்னும் வயசே ஆகவில்லையே என்று கேட்கத் தோன்றும்.

    Advertisement

    80ஸ் காலத்துக்கு காதலாக இருந்தாலும் சரி, 90ஸ் இளைஞர்களின் காதலாக இருந்தாலும் சரி, 2கே கிட்ஸ்களின் ப்ளே லிஸ்டாக இருந்தாலும் சரி எங்காவது ஒரு இடத்தில் வைரமுத்துவின் பாடல் நிச்சயம் இருக்கும். இப்போ ஒருவரை பிடித்து விட்டால் ஐ லவ் யூ என்று ஒரு மெசேஜ் அனுப்பி காதலை சொல்லி விடுகிறார்கள். ஆனால் ஒரு காலத்தில் காதலை சொல்ல முடியாமல் தவித்தவர்களுக்கு சினிமா பாடல்கள் தான் தூதுவன். அதிலும் வைரமுத்துவின் பாடல்கள் பல காதலர்களுக்கு சொல்ல முடியாததை சொல்லிக் கொடுத்திருக்கின்றன.

    Advertisement

    வைரமுத்து பாடல்கள்

    அந்தி மழை பொழிகிறது, வெண்ணிலவே வெண்ணிலவே என பல ஹிட் பாடல்கள் எப்போதும் ரசிகர்களை முணுமுணுக்க வைக்கும். அதிலும் இயற்கையோடு கலந்த காதல் வர்ணனைகளை வைரமுத்து தன்னுடைய வார்த்தைகளால் மாயம் செய்திருப்பார். உதாரணமாக மலரே மௌனமா, பூங்காற்று திரும்புமா போன்ற பாடல்களில் காற்று, மலர், நதி போன்ற இயற்கைகளை தூதாக பயன்படுத்தி இருப்பார்.

    அதுபோல நறுமுகையே நறுமுகையே பாடல் யாயும் ஞாயும் யாராகிரோ என்ற குறுந்தொகை பாடலின் தாக்கத்தில் உருவாகியது. 90ஸ் கிட்ஸ்களுக்கு ரொம்ப பிடித்த சுட்டும் விழி சுடரே, சிநேகிதனே சிநேகிதனே, காற்றே என் வாசல் படி வந்தாய், நெஞ்சே நெஞ்சே என ஒவ்வொரு பாடலிலும் காதலை ஒரே மாதிரியாக அவர் எழுதியதில்லை. ஒரு இடத்தில் ஏக்கம் இருக்கும், இன்னொரு இடத்தில் பிரிவின் வலி, இன்னொரு பாடலில் காதலியின் அழகை ரசிக்கும் மனதிற்கும். இதனால் தான் பல வருடங்கள் கழித்தும் அந்த பாடல்கள் நமக்கு நெருக்கமானதாக இருக்கிறது.

    Advertisement

    காதல் பாடல்கள்

    இப்போதும் பலர் காதல் வந்தால் ஒரு பாடல், தோல்வி வந்தால் ஒரு பாடல், ஒரு தலை காதலுக்கு ஒரு பாடல், காதலி பேசாமல் போனால் வேறு ஒரு பாடல்... இப்படி வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ்களில் தங்களுடைய மனதை வெளிப்படுத்தலாம். ஆனால் அதில் வைரமுத்துவின் பாடல்கள் இல்லாமல் இருக்க வாய்ப்பு குறைவு.

    மூச்சை நிறுத்திக்கொண்டதா மும்பைக் குயில்? போய் வா பாட்டரசி! ஆஷா போஸ்லேவுக்கு வைரமுத்து இரங்கல்
    ஆரம்பத்தில் இளையராஜா வைரமுத்து கூட்டணி அவ்வளவு பெரிய வெற்றிகளை பெற்றுக் கொண்டிருந்தது. அந்த சமயத்தில் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிவு வந்தது. அதற்கு பிறகு இனி வைரமுத்துவின் நிலைமை அவ்வளவுதான் என்று பலர் சொல்லி வந்தனர். ஆனால் திறமை இருந்தால் எப்போதும் வெற்றி தான் என்று வைரமுத்து மீண்டும் நிரூபித்திருக்கிறார்.

    Advertisement

    வைரமுத்து - ஏஆர் ரகுமான் கூட்டணி

    ஏ ஆர் ரகுமான் கூட்டணியில் அவர் இணைந்த பிறகு பம்பாய், உயிரே, மின்சார கனவு, அலைபாயுதே, கன்னத்தில் முத்தமிட்டால் என இந்த கூட்டணி கொடுத்த பாடல்களின் பட்டியல் ரொம்பவே நீளம். குறிப்பாக ஏ ஆர் ரகுமானின் புதுவிதமான இசையில் தமிழை எளிமையாகவும் அதே நேரத்தில் அழகாகவும் கொண்டு சென்றதில் வைரமுத்துவின் வரிகளுக்கு முக்கிய பங்கு இருக்கிறது.

    அதுமட்டுமல்லாமல் வைரமுத்து சிறந்த பாடல் ஆசிரியருக்கான தேசிய விருதை ஏழு முறை வென்றிருக்கிறார். முதல் மரியாதை, ரோஜா, கருத்தம்மா, சங்கமம், கன்னத்தில் முத்தமிட்டால், தென்மேற்கு பருவக்காற்று, தர்மதுரை ஆகிய படங்களுக்காக அவருக்கு தேசிய விருதுகள் கிடைத்தன.

    Advertisement

    ஏ.ஆர் ரஹ்மான் தலைகனம் இல்லாதவர்.. ஆனால் இளையராஜா! வெங்கடேஷ் பட் பேசிய வார்த்தை! வந்தாச்சு பஞ்சாயத்து
    வைரமுத்துவுக்கு இன்று 73 வயது. ஆனால் அவர் எழுதிய பல காதல் பாடல்கள் கேட்டால் இன்னும் 20 வயது காதலனின் மனம் போலவே இருக்கிறது. கவிஞருக்கு வயது 73 ஆகிவிட்டது. ஆனால் அவர் எழுதிய பாடல்களுக்கு மட்டும் இன்னும் வயசே ஆகவில்லை. அதுதான் வைரமுத்துவின் பல வருடத்திறை பயணத்திற்கு காலம் கொடுத்திருக்கும் பதில்.

    English Summary

    Vairamuthu: When we look back at poet Vairamuthu's songs as he celebrates his 73rd birthday today, only one thing surprises us. It seems to ask that the poet is old but the love lines he wrote are not old yet.