போலீஸ் போலீஸ் வெப் சீரிஸ் ஜெய்சீலனுக்கு கல்யாணம்.. மணப்பெண் யார் தெரியுமா? குவியும் வாழ்த்து


  • சென்னை: போலீஸ் போலீஸ் வெப் சீரிஸ் மூலம் ரசிகர்களிடம் அதிகமாக பிரபலமான நடிகர் ஜெய்சீலன் சிவராம், தற்போது தனது திருமண செய்தியால் சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகிறார்.

    அச்சு அசலாக சிவகார்த்திகேயன் போலவே இருப்பதால் முதலில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த ஜெய்சீலன், இப்போது தனது நடிப்பால் தனி ரசிகர் வட்டத்தை உருவாக்கியுள்ளார். இந்த நிலையில் நேற்று நடைபெற்ற அவரது திருமண புகைப்படங்களையும், அதனுடன் அவர் போட்ட கலகலப்பான பதிவையும் பார்த்து ரசிகர்கள் உற்சாகமாக கமெண்ட் செய்து வருகின்றனர்.

    நடிகர் ஜெய்சீலன் மனைவி

    நடிகர் ஜெய்சீலன் சிவராம் நேற்று தீப்தி ரமேஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். பாரம்பரிய முறையில் நடைபெற்ற இந்த திருமண விழாவில் குடும்பத்தினர், நெருங்கிய நண்பர்கள் மற்றும் திரையுலகை சேர்ந்த சிலர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தியதாக கூறப்படுகிறது.

    திருமண நிகழ்ச்சியில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை ஜெய்சீலன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதிலும் அவர் போட்டிருந்த caption தான் ரசிகர்களின் கவனத்தை அதிகமாக ஈர்த்துள்ளது.

    அவர் தனது பதிவில், "LIFE AFTER FINDING A 13 LPA WOMAN!! HAD TO SKIP MY RUN TODAY COZ I HAD MY WEDDING SCHEDULED TODAY! PRESENTING THE THUMBNAIL OF OUR NEW CHAPTER" என்று ஜாலியாக பதிவு செய்துள்ளார்.

    அதாவது, "13 LPA சம்பளம் வாங்கும் பெண்ணை கண்டுபிடித்த பிறகான வாழ்க்கை இது. இன்று எனது ஓட்டப்பயிற்சியை தவிர்க்க வேண்டியதாகிவிட்டது. ஏனெனில் இன்று எனது திருமணம் திட்டமிடப்பட்டிருந்தது. எங்களின் புதிய அத்தியாயத்தின் தம்ப்நெயிலை அறிமுகப்படுத்துகிறேன்" என்ற மாதிரி கலகலப்பாக அவர் எழுதியிருப்பது ரசிகர்களை கவர்ந்துள்ளது.

    குவியும் கமெண்ட்ஸ்

    இந்த பதிவுக்கு கீழ் ரசிகர்கள் வாழ்த்துகளை குவித்து வருகின்றனர். சிலர் "Congrats thambi", "Happy married life" என்று வாழ்த்த, சில பெண் ரசிகைகள் "எங்களோட க்ரஷ் போயிட்டாரு", "இதயத்தை உடைச்சிட்டீங்க", "சிவகார்த்திகேயன் லுக் அலைக் கூட கல்யாணம் ஆயிட்டாரே" என்று பீலாக கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.

    ஜெய்சீலன் பற்றி பேசும்போது, முதலில் அவரை ரசிகர்கள் கவனித்ததற்கு முக்கிய காரணம் நடிகர் சிவகார்த்திகேயனுடன் இருக்கும் முக ஒற்றுமைதான். சிரிப்பு, முகபாவனை, உடல் மொழி என பல விஷயங்களில் சிவகார்த்திகேயனை நினைவுபடுத்தும் வகையில் இருப்பதால் சமூக வலைதளங்களில் அவரது புகைப்படங்கள் முன்பே வைரலாகி இருந்தன.

    தனி அடையாளம்

    ஆனால் அந்த அடையாளத்தை தாண்டி தனது நடிப்பின் மூலம் தனி இடத்தை பிடிக்க முயன்றவர் ஜெய்சீலன். நடிகர் அசோக் செல்வனுடன் சபா நாயகன் படத்தில் நடித்திருந்த அவர், பின்னர் டிஜிட்டல் உலகிலும் கவனம் பெற்றார்.

    குறிப்பாக போலீஸ் போலீஸ் வெப் சீரிஸ் அவருக்கு பெரிய அளவில் ரசிகர்களை பெற்றுத்தந்தது. மிர்ச்சி செந்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த இந்த வெப் சீரிஸில் ஜெய்சீலன் இரண்டாவது கதாநாயகனாக நடித்திருந்தார். அவருக்கு ஜோடியாக சீரியல் நடிகை ஷபானா நடித்திருந்தார்.

    இந்த சீரிஸில் ஜெய்சீலனின் இயல்பான நடிப்பு ரசிகர்களை கவர்ந்தது. ஆரம்பத்தில் "சிவகார்த்திகேயன் மாதிரி இருக்காரே" என்று பார்த்தவர்கள், பின்னர் "நடிப்பும் ரொம்ப நல்லா இருக்கு" என்று பாராட்ட தொடங்கினர். அதற்குப் பிறகுதான் அவருக்கு சமூக வலைதளங்களில் ரசிகர் வட்டமும் வேகமாக அதிகரித்தது.

    இப்போது திருமண செய்தியால் மீண்டும் பேசுபொருளாக மாறியிருக்கும் ஜெய்சீலன், தனது வாழ்க்கையின் புதிய அத்தியாயத்தை தொடங்கியுள்ளார். கலகலப்பான caption, அழகான திருமண புகைப்படங்கள், ரசிகர்களின் வாழ்த்துகள்-எல்லாம் சேர்ந்து சமூக வலைதளங்களில் இந்த ஜோடியை டிரெண்டாக்கி வருகிறது.

    English Summary

    Actor Jaiseelan Sivaram, who became popular through the Police Police web series, has entered a new phase in life by marrying Deepthi Ramesh in a traditional wedding ceremony. Jaiseelan, often noticed for his resemblance to actor Sivakarthikeyan, has built a loyal fan base through his natural performances in films and digital content. Sharing wedding pictures on social media, he amused fans with a humorous caption joking about finding a “13 LPA woman,” which quickly went viral. Fans and well-wishers flooded the comments with congratulatory messages, while many jokingly expressed heartbreak over their on-screen crush getting married.