சென்னை: இயக்குநரும், நடிகருமான கே. பாக்யராஜின் திடீர் மறைவு தமிழ் திரையுலகையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. திரைக்கதை மன்னன் என்று ரசிகர்களால் கொண்டாடப்பட்ட அவர் இனி இல்லை என்ற செய்தியை ரசிகர்களால் இன்னும் ஏற்றுக்கொள்ள முடியாமல் தவித்து வருகின்றனர். அவருடைய பழைய பேட்டிகள், மேடைப் பேச்சுகள், குடும்ப வீடியோக்கள் என அனைத்தும் தற்போது சமூக வலைதளங்களில் மீண்டும் வைரலாகி வருகின்றன.
அந்த வகையில், சில மாதங்களுக்கு முன்பு நடிகை பூர்ணிமா தனது கணவர் பாக்யராஜ் குறித்து பகிர்ந்த ஒரு நெகிழ்ச்சியான சம்பவம் தற்போது அனைவரையும் கண்கலங்க வைத்துள்ளது.
பாக்யராஜ் கொடுத்த சர்ப்ரைஸ்
அந்த பேட்டியில் பூர்ணிமா கூறியதாவது: "என்னுடைய பிறந்தநாளை இந்த முறை என் கணவர் மறக்க முடியாத நாளாக மாற்றினார். 'ஒரு கோவிலுக்கு போகலாம்' என்று சொல்லி காரில் ஏற்றினார். அதற்கு முன்பே என் கண்களை துணியால் கட்டிவிட்டார்.
இரவு 12 மணிக்கு எந்த கோவில் திறந்திருக்கும் என்று நான் கேட்டேன். அதற்கு அவர், 'வாயை மூடிட்டு சும்மா வா' என்று சிரித்தபடியே அழைத்துச் சென்றார். கார் எந்த வழியில் போகிறது என்று நான் கணக்குப் போட்டுக்கொண்டே இருந்தேன். ஒரு இடத்தில் கார் நின்றதும், 'இது நகைக்கடையா... துணிக்கடையா...' என்று தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருந்தேன். ஆனால் அவர் எதுவும் சொல்லவில்லை.
கடைசியாக கண்கட்டை அவிழ்த்துப் பார்த்தபோது, என்னுடைய நெருங்கிய நண்பர்கள் அனைவரும் அங்கே காத்திருந்தார்கள். அந்த நிமிடம் எனக்கு வாழ்க்கையில் மறக்க முடியாத சர்ப்ரைஸாக இருந்தது. இதுவரை நான் கொண்டாடிய பிறந்தநாள்களில் இதுதான் மிகவும் ஸ்பெஷல். அந்த நாளை என் வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாது." என்று பூர்ணிமா புன்னகையுடன் பகிர்ந்திருந்தார். அப்போது சிரித்தபடி அந்த அனுபவத்தை பகிர்ந்த பூர்ணிமாவின் பேட்டி, இன்று பாக்யராஜின் மறைவுக்குப் பிறகு சமூக வலைதளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது. அந்த வீடியோவை பார்த்த பலரும், "மனைவியை இவ்வளவு மகிழ்ச்சியாக வைத்திருந்த மனிதர் இவ்வளவு சீக்கிரம் பிரிந்து செல்வார் என்று யாரும் நினைக்கவில்லை" என்று வருத்தத்துடன் பதிவிட்டு வருகின்றனர். சமூக வலைதளங்களில் சிலர் உணர்ச்சிவசப்பட்டு, "ஒருவேளை பாக்யராஜுக்கு தன்னுடைய இறப்பு குறித்து ஏதோ ஒரு உள்ளுணர்வு இருந்ததோ? அதனால்தான் மனைவியின் பிறந்தநாளை வாழ்நாளில் மறக்க முடியாத நினைவாக மாற்றிவிட்டாரோ?" என்று பதிவிட்டு வருகின்றனர்.bஆனால் இதற்கு எந்த ஆதாரமும் இல்லை. இது ரசிகர்களின் உணர்ச்சிப்பூர்வமான கருத்தாக மட்டுமே பார்க்கப்படுகிறது. மற்றொரு தரப்பினர், "பாக்யராஜ் சினிமாவில் மட்டுமல்ல, நிஜ வாழ்க்கையிலும் காதலை வெளிப்படுத்த தெரிந்தவர். மனைவியை மகிழ்ச்சிப்படுத்த சிறிய விஷயத்தைக் கூட பெரிய சர்ப்ரைஸாக மாற்றியிருக்கிறார். அதுதான் இந்த சம்பவம் காட்டுகிறது" என்று நெகிழ்ச்சியுடன் கருத்து தெரிவித்து வருகின்றனர். திரைக்கதைகளில் குடும்ப பாசத்தையும் காதலையும் அழகாக சொல்லிய பாக்யராஜ், தனது சொந்த வாழ்க்கையிலும் அதையே வாழ்ந்து காட்டியவர் என்பதற்கு இந்த பிறந்தநாள் சர்ப்ரைஸ் இன்னொரு அழகான உதாரணமாக இன்று ரசிகர்களால் நினைவுகூரப்படுகிறது.மறக்க முடியாத நினைவு
பாக்யராஜ் உடலை பார்த்து கண்ணீர் விட்ட நாய்.. வட்டமிட்ட கழுகு.. இறுதி ஊர்வலம் வேனில் வைக்கப்பட்டிருந்த வாசகம்!
உணர்ச்சிப்பூர்வமான பதிவுகள்
பாக்யராஜ் இறந்த நாளில் குஷ்பு போட்ட போஸ்ட்.. திட்டி தீர்த்த நெட்டிசன்கள்.. அதிரடி பதிலடி
காதலை செயலில் காட்டிய கணவர்