சென்னை: உதயநிதி ஸ்டாலின் நேற்று தஞ்சாவூரில் பேசியதுதான் சோசியல் மீடியாவில் பெரும் சர்ச்சையை கிளப்பி வரும் நிலையில் இசை அமைப்பாளரும் தொகுப்பாளருமான ஜேம்ஸ் வசந்தன் வெளியிட்டுள்ள நீண்ட பதிவு தற்போது சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. உதயநிதி கைது செய்யப்பட்டதை வரவேற்றதுடன் அதற்கான காரணத்தையும் விரிவாக விளக்கி இருப்பது தற்போது விவாதமாக மாறி இருக்கிறது.
ஜேம்ஸ் வசந்தன் பதிவு
ஜேம்ஸ் வசந்தன் தனது பதிவில், உதயநிதி கைது நல்லது.. திமுக கற்றுக்கொள்ள வேண்டிய அடிப்படை பாடம் என்று தொடங்கியுள்ளார். மேலும், கரூர் நெரிசலில் 41 பேர் உயிரிழந்த வழக்கில் எல்லா முகாந்திரங்களும் இருந்தும் முக்கியமானவர்கள் யாரையும் கைது செய்யாமல் விட்டதும், அவர்கள் பெயரை கூட சேர்க்காமல் விட்டதும் என எல்லாவித அடிப்படை சட்டம் ஒழுங்கு பிழைகளையும் செய்தால் இப்படித்தான் இவர்கள் கற்றுக் கொள்ள முடியும்.
கிடைத்த ஒரு சின்ன இடைவெளியில் ஒரு வார்த்தையை திரித்து உதயநிதியை கைது செய்ய இவர்கள் இப்படி மனக்கெடுவது, அவர்கள் ஆதரவாளர்கள் இன்று கொண்டாடுவதற்கு வேண்டுமானால் உதவும். ஆனால் அவர்களுக்கு எதிராகத்தான் அது காலப்போக்கில் திரும்பும். இதில் கைதுக்கு அவசியம் இல்லை. வழக்கு தொடுத்து நீதிமன்றத்தில் குற்றத்தை நிரூபித்தாலே அதற்கான தண்டனை இவருக்கு இயல்பாக கிடைத்துவிடும்.
அதனால் இருவகையிலும் திமுகவுக்கு நல்லது தான். பெரிய பாடங்களை கொஞ்சம் அதிக விலை கொடுத்து தான் கற்க முடியும் என்றும் குறிப்பிட்டு இருக்கிறார். மேலும் அந்த பதிவில் நான் உதயநிதி பேசிய அந்த பகுதியை கேட்டேன். இவர்கள் சொல்லிக் கொண்டிருப்பது போல அவ்வளவு அசிங்கமாக அவர் அப்படி பேசியிருக்க வாய்ப்பில்லை என நான் நினைக்கிறேன். அவருடைய Track Record-ஐ வைத்து தான் இதை சொல்கிறேன். வார்த்தைகளில் பக்குவமும் நிதானமும் அவரிடம் எல்லா தருணங்களிலும் இருந்து வந்திருக்கிறது. காவிரியில் தண்ணீர் வரவில்லை என்றாலும் இவர் தண்ணி அடிக்கப் போய்விடுவார் என்பது தானே அவருடைய நையாண்டி. எங்கிருந்து பெண்ணை இழுத்தீர்கள் என்று கேள்வி எழுப்பியுள்ளார். அதன் பிறகு கூகுளில் Dictatorship என்ற வார்த்தைக்கான விளக்கத்தையும் பகிர்ந்த ஜேம்ஸ் வசந்தன், சர்வாதிகாரம் என்பது ஒரு தனிநபரோ அல்லது ஒரு குழுவோ முழுமையான அதிகாரத்தை கொண்டிருக்கும் ஆட்சி முறையாகும். ஜனநாயகத்தை போல் இன்றி போராட்டம் நடத்துதல், வாக்களித்தல் அல்லது சுதந்திரமாக பேசுதல் போன்ற அடிப்படை உரிமைகளை கட்டுப்படுத்துவதன் மூலம் தங்கள் அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்கிறார்கள் என்ற விளக்கத்தையும் அந்த பதிவில் சேர்த்துள்ளார். இந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது. காவிரி உரிமை தொடர்பான நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய உதயநிதி ஸ்டாலின் முதலமைச்சர் விஜய்யை விமர்சித்துக் கொண்டிருந்தபோது கூட்டத்தில் இருந்து திரிஷா திரிஷா என்ற முழக்கங்கள் எழுந்தது. அதற்கு அவர் கூறிய பதில் சமூக வலைத்தளங்கள் வேகமாக பரவி திரிஷாவை மறைமுகமாக குறிப்பிட்டு டபுள் மீனிங் பேச்சு என பல்வேறு தரப்பினரும் குற்றம் சாட்டினர். ஆனால் நான் அதுபோல எந்த ஆபாசமான வார்த்தைகளையும் பேசவே இல்லை, அது எடிட்டிங்கில் கட் பண்ணி அந்த வீடியோவை பரப்பி இருக்கிறார்கள் என்று உதயநிதி ஸ்டாலின் மறுப்பு தெரிவித்திருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.திமுகவிற்கு கிடைத்த பாடம்
உதயநிதியின் பேச்சின் அர்த்தம்
சர்ச்சைக்கு காரணம்