பாலியல் புகார் விவகாரத்தில் மௌனம் கலைத்த பிஆர் சுந்தர்.. செய்தி வாசிப்பாளர் மீது வைத்த குற்றச்சாட்டு!

  • சென்னை: பிரபல முதலீட்டு ஆலோசகரும் தொழில் அதிபருமான பி.ஆர் சுந்தர் மீது பெண் செய்தி வாசிப்பாளர் ஒருவர் பாலியல் தொல்லை மிரட்டல் உள்ளிட்ட குற்றசாட்டுகளை முன்வைத்து புகார் அளித்ததை தொடர்ந்து போலீசார் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விவகாரம் சோசியல் மீடியாவிலும் பெரும் பரபரப்பாக மாறி உள்ள நிலையில் பி ஆர் சுந்தர் தரப்பில் விரிவான அறிக்கை ஒன்றை வெளியிட்டு அனைத்து குற்றச்சாட்டுகளையும் மறுத்திருக்கிறார்கள்.

    பிஆர் சுந்தரின் எக்ஸ் தள பக்கத்தில், திட்டமிட்டு கொடுக்கப்பட்ட புகார்களுக்கும், ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளுக்கும் நான் பலியாகி இருக்கிறேன். இன்னும் கொஞ்சம் நாட்களில் முழு உண்மையும் வெளிவரும் அதுவரை என்னை வெறுப்பவர்களும் ஊடகத்தில் ஒரு குறிப்பிட்ட தரப்பினரும் விரும்பியபடி பேசிக் கொள்ளட்டும் என்று சொல்லி இருக்கிறார்.

    மேலும் வெளியிட்ட அறிக்கையில், சென்னை நுங்கம்பாக்கத்தில் அமைந்துள்ள ஒரு குடியிருப்பு சொத்து‌‌ Mansun Consultancy Pvt. Ltd நிறுவனத்திற்கு சொந்தமானது. அந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராக பிஆர் சுந்தர் உள்ளார். அந்த சொத்தில் தற்போது தமிழ்நாடு காவல்துறையில் காவல் கண்காணிப்பாளர் (SP) தொழில்நுட்ப சேவைகள் பிரிவில் பணியாற்றும் அன்புச்செழியன் வசித்து வருகிறார். அவர் அந்த சொத்தில் சட்டபூர்வமாக அனுமதி இன்றி தங்கி வருகிறார்.

    முன்பகை

    பலமுறை கேட்டும் சொத்தை காலி செய்து ஒப்படைக்க மறுத்து இருக்கிறார். இதன் காரணமாக உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குனர் மற்றும் காவல் ஆணையரிடம் புகார்கள் கொடுக்கப்பட்டன. அந்த புகாருக்கு காவல் ஆணையர் உறுதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று சொல்லி இருந்தார். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதற்கு காரணம் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரியும். இதன் விளைவாகத்தான் தற்போது தன்னைக் குறி வத்து திட்டமிட்ட வேட்டையாடும் இந்த நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது என்று கூறப்பட்டிருக்கிறது.

    சொத்து பிரச்சனை

    இந்த சொத்து தொடர்பான பிரச்சனை நடந்து கொண்டிருந்த காலத்தில் அன்புச் செழியன் பிஆர் சுந்தரின் வீட்டிற்கு வந்து அவரது மனைவியை மிரட்டினார். மேலும் லஞ்ச ஒழிப்புத்துறை பதிவு செய்துள்ள ஒரு எஃப் ஐஆரில் அன்புச் செழியன் பெயர் ஏற்கனவே குற்றம் சாட்டப்பட்டவராக இடம் பிடித்திருக்கிறது. இந்த சொத்து விவகாரம் தொடர்பாக இருதரப்பினரும் சட்ட நோட்டீஸ்களை பரிமாறிக் கொண்டுள்ளனர்.

    அதோடு Mansun Consultancy Pvt. Ltd நிறுவனம் அந்த சொத்தின் உடைமைகளை மீட்பதற்கும் அதனுடைய தொடர்புடைய பிற சட்ட நிர்வாக நிவாரணங்களை பெறுவதற்குரிய சிவில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரும் நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. பிஆர் சுந்தர் இந்த சொத்து பிரச்சனையில் சட்டரீதியாக நடவடிக்கை தொடர்ந்து கொண்டிருக்கிறார் என்பதை தெரிந்து கொண்டதும் அன்புச் செழியன் பழிவாங்கும் நோக்கத்தில் பிளான் பண்ணி இருக்கிறார்.

    குற்றசாட்டுக்கு மறுப்பு

    அதன்படி கல்பனா என்ற தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளர் மூலம் பி ஆர் சுந்தர் நற்பெயருக்கும் சமூகத்தில் அவருக்கு உள்ள மதிப்பிற்கும் களங்கம் ஏற்படுத்தும் ஒரே நோக்கத்துடன் அவர் மீது பொய்யான புகார் கொடுக்க செய்துள்ளார் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. டி ஆர் சுந்தர் தன் மீது சுமத்தப்பட்டுள்ள அனைத்து குற்றச்சாட்டுகளையும் முழுமையாக மறுக்கிறார், அவர் எந்தவித குற்றமும் செய்யவில்லை என்றும் இந்த புகார் முழுமையாக பொய்யானது என்றும் கூறியிருக்கிறது.

    திட்டமிட்ட நோக்கத்துடன் உருவாக்கப்பட்டதாகவும், சொத்து தொடர்பாக அவர் மேற்கொண்டுள்ள சட்ட நடவடிக்கைகளை தடுக்கவும் அவரை அச்சுறுத்தும் நோக்கத்தில் செய்த முயற்சிதான் இது என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. கடைசியாக இந்த சட்டத்தின் மீதும் நீதி துறையின் சுதந்திரத்தின் மீதும் பி ஆர் சுந்தருக்கு முழு நம்பிக்கை இருப்பதாகவும் சட்டப்படி கிடைக்கும் அனைத்து நிவாரணங்களையும் தொடர்ந்து நாடுவார் என்றும் இறுதியில் உண்மை உன்னை நீதிமன்ற நடைமுறைகள் மூலம் வெளிச்சத்திற்கு வரும் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் அந்த அறிக்கை முடிவடைகிறது.

    இதற்கு முன்பு என்ன நடந்தது

    சில நாட்களுக்கு முன்பு பெண் செய்தி வாசிப்பாளர் ஒருவர் வேலை தொடர்பாக ஏற்பட்ட பழக்கத்தை பயன்படுத்தி பி ஆர் சுந்தர் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் அலுவலகத்தில் அடைத்து வைத்து மிரட்டியதாகவும் போலீசில் புகார் கொடுத்திருந்தார். அந்த புகாரின் அடிப்படையில் பாலியல் தொல்லை, பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம், குற்றவியல் மிரட்டல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

    பாலியல் தொந்தரவு செய்த இசையமைப்பாளர்.. பிரியாணிக்கு விலை.. மீண்டும் பாடகி ஸ்வாகதா தாக்கு! யார் அவர்?
    மேலும் இந்த வழக்கில் பி ஆர் சுந்தருக்கு ஆதரவாக செயல்பட்டதாக அவருடைய மனைவி மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த சூழலில் பி ஆர் சுந்தர் தரப்பில் என்ன நடந்தது என்பதை விளக்கும் வகையில் வெளியிட்ட அறிக்கை சோசியல் மீடியாவில் விவாதத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

    English Summary

    PR Sundar: The police have registered a case under various sections and are investigating after a female newsreader filed a complaint against the famous investment consultant and business magnate PR Sundar with allegations of sexual harassment and threats. While this issue has become a big sensation in social media, PR Sundar has issued a detailed statement denying all the allegations.