பிரபுதேவா 120 கோடி வியூஸில் சாதனை.. மிரட்டிய டான்ஸ் கலைஞனின் பின்னணி தெரியுமா? பிரபலம் நறுக்

  • சென்னை: பிரீத்தா சஞ்சீவ் பிரபுதேவாவை விமர்சித்து ஒரு வீடியோ வெளியிட, அது திரையுலகில் பரபரப்பை தந்து கொண்டிருக்கிறது.. இந்நிலையில், "120 கோடி பார்வைகளை கடந்த "ரவுடி பேபி'" பாடலின் வெற்றிக்கு பிரபுதேவாவின் நடன அமைப்பே முக்கியக் காரணம் என்றும், அப்படிப்பட்ட மாபெரும் கலைஞரை சமூக வலைத்தளங்களில் தரைக்குறைவாக விமர்சிக்கக் கூடாது என்றும் மூத்த பத்திரிகையாளர்கள் செய்யாறு பாலு கருத்து தெரிவித்துள்ளார்.

    Advertisement

    Cheyyaru Balu என்ற யூடியூப் சேனலில் பேசியுள்ள செய்யாறு பாலு, "பிரபுதேவா தனது குரு உடுப்பி லட்சுமி நாராயணனின் நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்டு பரதநாட்டியம் ஆடினார். அந்த வீடியோவை பார்த்த சிலர், அவருக்கு பரதநாட்டியம் ஆட வரவில்லை என்றும், அவர் ஏதோ சாணி மிதித்தது போல் ஆடியுள்ளார் என்றும் சோஷியல் மீடியாவில் விமர்சனங்களை முன்வைத்து வருகிறார்கள்.

    Advertisement

    பிரீத்தா சஞ்சீவ் விமர்சனம்

    முக்கியமாக, நடிகர் சஞ்சீவின் மனைவி பிரீத்தா ஒரு வீடியோவை வெளியிட்டு, உங்களுக்கு 50 வயதாகிவிட்டது. பரதநாட்டியமே தெரியாமல் இப்படி மேடையில் ஆடி, உங்கள் குருநாதரை ஏன் இழிவுபடுத்துகிறீர்கள்? உங்களுக்கு உடம்பை ரப்பர் போல் வளைத்து ஆடும் மேலைநாட்டு நடனம் மட்டுமே தெரியும்.. நடனப் புயல் என்ற பட்டத்தை வைத்துக்கொண்டு மேடையில் தத்துப்பித்து என்று ஆடியதை ஏற்றுக்கொள்ளவே முடியாது" என்று பிரபுதேவாவை பயங்கரமாக ரோஸ்ட் செய்து கடுமையாக விமர்சித்தார்.

    கொந்தளித்த டான்ஸ் மாஸ்டர்கள்

    உடனே இதைக்கேட்டு பிரபுதேவாவின் சீடர்களும் நடன மாஸ்டர்களும் கொந்தளித்தனர். நடன மாஸ்டர் ராபர்ட் இதற்கு எதிராகக் காட்டமான பதிவொன்றை வெளியிட்டார். அதில், பிரீதாவுக்குப் பரதநாட்டியத்தைப் பற்றி என்ன தெரியும்? பின்னணியில் நின்ற எத்தனையோ குழு நடனக் கலைஞர்களை முதன்மைப்படுத்தி, அவர்களை டான்ஸ் மாஸ்டர்களாக உருவாக்கியவர் பிரபுதேவா? அத்தகைய கலைஞரை பார்த்து கேள்வி கேட்க என்ன தகுதி இருக்கிறது? என்றெல்லாம் எதிர்ப்பு காட்டியிருந்தார்.

    Advertisement

    இன்னொருபக்கம், 90 வயதிலும் மிகக் கச்சிதமான முத்திரைகளுடன் ஆடும் வைஜயந்தி மாலாவுடன் பிரபுதேவாவை ஒப்பிட்டும் விமர்சனங்கள் எழுந்தன. இந்த விமர்சனங்களுக்குப் பிரபுதேவாவே நேர்மையான விளக்கமளித்துள்ளார்.

    வெஸ்டர்ன் நடனம்

    சின்ன வயதில் உடுப்பி லட்சுமி நாராயணன் மற்றும் தர்மராஜ் ஆகியோரிடம் முறைப்படி பரதநாட்டியம் கற்றுக் கொண்டேன், பிற்காலத்தில் வெஸ்டர்ன் நடனத்தில் அதிக கவனம் செலுத்தியதால் பரதநாட்டியத்தின் டச் விட்டு போய்விட்டது. நூற்றாண்டு விழாவிற்காக தொடர்ந்து பயிற்சிகளையும் உடற்பயிற்சிகளையும் மேற்கொண்ட போதிலும், ஆரம்ப நாட்களில் கை கால்கள் மட்டுமே அசைந்தன.. வேகம் வரவில்லை. 5 நாட்கள் தொடர்ந்து முயற்சி செய்து தன்னம்பிக்கை வந்த பிறகே மேடையில் ஆடினேன்" என்று வெளிப்படையாக ஒப்புக் கொண்டுள்ளார்.

    Advertisement

    பாலிவுட்டில் பணிபுரியும்போது அமைதியாக இருந்தால் அலட்சியமாக நினைத்துவிடுவார்கள் என்பதால், பிரபுதேவா அங்கு கொஞ்சம் கம்பீரத்துடனும் கண்டிப்புடனும் நடந்துகொள்வார். இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் இந்தியில் படம் இயக்கியபோது, அவரது தோற்றத்தைப் பார்த்து ஷூட்டிங் ஸ்பாட்டுக்குள் அவரை அனுமதிக்கவில்லை. அப்போது ஒளிப்பதிவாளர் ரவி கே. சந்திரன் தலையிட்டே அவரை உள்ளே அழைத்துச் சென்றார்.

    பிரபுதேவாவை மோசமா பேசாதீங்க

    வடஇந்தியாவில் சுயமரியாதையைக் காப்பாற்றிக் கொள்ளவும், தொழிலில் ஆதிக்கம் செலுத்தவும் கண்டிப்புடன் இருக்க வேண்டும் என்ற அதே உத்தியையே பிரபுதேவாவும் பயன்படுத்தினார். வெளிப்புறத்தில் இது கர்வமாகத் தெரிந்தாலும், அது ஒரு கலைஞனின் சுயமரியாதையைப் பாதுகாக்கும் கவசமே ஆகும்.

    Advertisement

    120 கோடி பார்வைகளை கடந்த "ரவுடி பேபி'" பாடலின் வெற்றிக்கு பிரபுதேவாவின் நடன அமைப்பே முக்கியக் காரணம். அப்படிப்பட்ட மாபெரும் கலைஞரை சமூக வலைத்தளங்களில் தரைக்குறைவாக விமர்சிக்கக் கூடாது..

    ஒரு சிறிய பயிற்சி இடைவெளியை காரணம் காட்டி பிரபுதேவா போன்ற மாபெரும் கலைஞர்களைத் தரைக்குறைவாகவோ அல்லது மோசமாகவோ விமர்சிப்பது நியாயமல்ல.. இதுபோன்ற மாபெரும் கலைஞர்களை நாம் எப்போதும் மதிப்பளிக்க வேண்டும்" என்கிறார்.

    English Summary

    Preetha Sanjeev's Roast Video on Prabhu Deva Sparks Backlash, Celebrity Comes Out in Support