மல்லிகைப்பூ மாலை.. காதலனுடன் பிரியா பவானி சங்கருக்கு திருமணமா? தீபாவளி போட்டோவில் இருக்கும் ரகசியம்

  • சென்னை: நடிகை பிரியா பவானி சங்கர் தீபாவளியை முன்னிட்டு தனது நீண்டகால காதலர் ராஜ்வேலுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்திருக்கிறார். வழக்கமாக பண்டிகை நாட்களில் ரசிகர்களுக்கு வாழ்த்து சொல்லும் பிரியா, இந்த முறை வெளியிட்டிருக்கும் புகைப்படங்கள் மட்டும் கொஞ்சம் ஸ்பெஷலாக அமைந்துவிட்டன. காரணம், அந்த படங்களில் இருக்கும் சில விஷயங்களை பார்த்த ரசிகர்கள், பிரியாவுக்கு திருமணம் நடக்க போகிறதா என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.

    Advertisement

    குறிப்பாக ஒரு போட்டோவில் பிரியா பவானி சங்கரும் அவருடைய காதலர் ராஜ்வேலும் கழுத்தில் மல்லிகைப்பூ மாலை அணிந்திருக்கிறார்கள். இன்னொரு புகைப்படத்தில் பிரியா கைகளில் மருதாணி வைத்துக்கொண்டு மகிழ்ச்சியாக போஸ் கொடுத்திருக்கிறார். ட்ரெடிஷனல் உடையில் இருவரும் ஜோடியாக இருக்கும் இந்த போட்டோவை பார்த்தால் திருமணத்துக்கு முந்தைய சடங்குகள் நடப்பது போன்ற தோற்றம் இருப்பதாக ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

    Advertisement

    அதோடு பிரியா தனது பதிவில், "This Diwali is extra special" என்று குறிப்பிட்டிருக்கிறார். அதாவது, இந்த தீபாவளி தனக்கு கூடுதல் ஸ்பெஷலானது என்று அவர் சொல்லியிருப்பது ரசிகர்களின் ஆர்வத்தை இன்னும் அதிகமாக்கியிருக்கிறது. தீபாவளி வாழ்த்துடன் காதலருடன் இருக்கும் புகைப்படங்களையும் பகிர்ந்திருப்பதால், இந்த முறை அவர்களுடைய வாழ்க்கையில் ஏதோ ஒரு முக்கியமான நிகழ்வு நடந்திருக்கிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது.

    ரகசியமாக நிச்சயதார்த்தம்

    இந்த புகைப்படங்கள் வெளியானதைத் தொடர்ந்து பிரியா பவானி சங்கருக்கும் ராஜ்வேலுக்கும் குடும்பத்தினர் முன்னிலையில் திருமண நிச்சயதார்த்தம் அல்லது திருமணத்துக்கு முந்தைய சடங்குகள் நடைபெற்றிருக்கலாம் என்று தகவல்கள் பரவி வருகின்றன. சில தெலுங்கு ஊடகங்களும் இருவரது திருமண ஏற்பாடுகள் தொடங்கியிருப்பதாக செய்தி வெளியிட்டுள்ளன. ஆனால், திருமண தேதி, இடம் அல்லது நிச்சயதார்த்தம் குறித்த எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் பிரியா இதுவரை வெளியிடவில்லை.

    Advertisement

    அதனால் புகைப்படங்களை மட்டும் வைத்து திருமணம் முடிந்துவிட்டது என்றோ, நிச்சயதார்த்தம் உறுதியாகிவிட்டது என்றோ சொல்ல முடியாது. இருந்தாலும் மல்லிகைப்பூ மாலை, மருதாணி, இருவருடைய மகிழ்ச்சியான தோற்றம் என அனைத்தும் சேர்ந்து ரசிகர்களுக்கு திருமண எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

    டார்கெட் செய்யப்படும் பிரியா! அவருடன் நீங்க கூட நிற்க முடியாதா! திமுக தலைமை மீது பாயும் கட்சி தலைகள்

    10 ஆண்டுகளுக்கும் மேலான காதல்

    பிரியா பவானி சங்கர் தனது கல்லூரிக் காலத்திலிருந்தே ராஜ்வேலை காதலித்து வருகிறார். சினிமாவில் பிரபலமான பிறகும் தனது காதலை மறைத்து வைக்காமல் அவ்வப்போது இருவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்து வந்திருக்கிறார். இருவரும் தங்களுக்குப் பிடித்த வாழ்க்கையை அமைத்துக்கொள்ள வேண்டும் என்ற ஆசையில் 2022-ம் ஆண்டிலேயே கடலை ஒட்டிய பகுதியில் ஒரு வீட்டையும் இணைந்து வாங்கினர். அந்த வீட்டுக்குள் நுழைந்த புகைப்படங்களை பகிர்ந்தபோது, ரசிகர்கள் பலரும் திருமண வாழ்த்துகளைச் சொல்லத் தொடங்கிவிட்டனர். ஆனால் அப்போது பிரியா விளக்கம் கொடுத்திருந்தார். அது திருமணம் கிடையாது, தங்களுடைய கனவு வீட்டின் புதுமனை புகுவிழா மட்டும்தான் என்றும், திருமண வாழ்த்துகளை எதிர்காலத்துக்காக வைத்துக்கொள்ளலாம் என்றும் கிண்டலாக சொல்லியிருந்தார்.

    Advertisement

    அதன்பிறகும் இருவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படங்களைப் பகிர்ந்து வந்தனர். பிரேக்கப் வதந்திகள் எழுந்தபோதெல்லாம் அவர்களுடைய புகைப்படங்கள் அதற்கு பதிலாக அமைந்தன. இப்போது மீண்டும் திருமணம் குறித்த பேச்சு கிளம்பியிருக்கிறது.

    அரிசி, பருப்பு டப்பாலாம் காலியா இருக்கு! இதுல அண்ணன் சீராம்! யாரு கேட்டா? மேயர் பிரியா அட்டாக்

    கடந்த 2024-ம் ஆண்டு ஒரு பேட்டியில் பேசிய பிரியா பவானி சங்கர், ராஜ்வேலுடன் நீண்டகாலமாகக் காதலில் இருப்பதையும், 2025-ம் ஆண்டு திருமணம் செய்துகொள்ளத் திட்டமிட்டிருப்பதையும் தெரிவித்திருந்தார். சினிமாவில் தனக்கான வேலைகளை முடித்துக்கொண்டு அடுத்த கட்ட வாழ்க்கைக்குச் செல்ல வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்ததாகவும் அப்போது சொல்லி இருந்தார்.

    Advertisement

    செய்தி வாசிப்பாளராக இருந்தபோது பார்த்த பிரியா பவானி சங்கர், இப்போது சினிமாவில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்திருக்கிறார். அதேபோல், கல்லூரிக் காலத்தில் தொடங்கிய காதலும் இத்தனை ஆண்டுகளாக தொடர்கிறது. இப்போது தீபாவளி புகைப்படங்கள் மூலம் மீண்டும் திருமண பேச்சு கிளம்பியிருப்பதால், ரசிகர்கள் அவருடைய அடுத்த அறிவிப்புக்காகக் காத்திருக்கிறார்கள். இந்த தீபாவளி உண்மையிலேயே பிரியாவின் வாழ்க்கையில் மறக்க முடியாத நாளாக மாறியிருக்கிறதா என்பது விரைவில் தெரியவரும்.

    English Summary

    Actress Priya Bhavani Shankar has shared photos on Instagram taken with her long-time boyfriend, Rajvel, on the occasion of Diwali. While Priya typically extends festive greetings to her fans, the photos she shared this time are a bit more special. This is because certain details in the images have led fans to wonder if Priya is getting married.