சென்னை: தயாரிப்பாளர் கண்ணன் ரவி மகன் தீபக் ரவியின் நிச்சயதார்த்த புகைப்படங்கள் வெளியான பிறகு சோசியல் மீடியாவில் பழைய பட காட்சிகளை எல்லாம் தூசி தட்டி எடுத்து நெட்டிசன்கள் கேள்வி கேட்க ஆரம்பித்து விட்டார்கள். அதற்கு காரணம் தீபக் ரவிக்கு நிச்சயம் செய்யப்பட்டிருப்பது முன்னாள் அமைச்சர் மற்றும் திமுக பொதுச்செயலாளர் துரை முருகனின் பேத்தியும், வேலூர் எம்பி கதிர் ஆனந்தின் மகளுமான செந்தாமரை என்பதுதான்.
கண்ணன் ரவி மகன் நிச்சயதார்த்தம்
தொழிலதிபராக இருந்து சினிமா தயாரிப்பாளராக மாறியவர் தான் கண்ணன் ரவி. சாந்தனு நடித்த ராவணக்கூட்டம் படத்தை தொடர்ந்து தமிழ் படங்களை தயாரித்து வருகிறார். இந்த வருஷம் நடிகர் ஜீவா நடித்த தலைவர் தம்பி தலைமையில் படம் கண்ணன் ரவிக்கு பெரிய அளவில் வெற்றியை கொடுத்தது. அதேபோல நட்டி நடராஜ் நடித்த தநா 2026 தங்க நட்சத்திரம் (TN 2026) படத்தையும் தயாரித்து இருந்தார்.
அந்த படம் வெளியான நேரத்திலேயே பெரிய விவாதமே நடந்தது. அந்த படத்தில் விஜய்யை விமர்சிப்பது போல காட்சிகள் இருக்கிறது என்று விஜய் ரசிகர்கள் திட்டி தீர்த்து வந்தனர். இப்போது கண்ணன் ரவியின் மகன் தீபக் ரவிக்கும் துரைமுருகனின் பேத்தி செந்தாமரைக்கும் நிச்சயதார்த்தம் நடந்திருக்கிறது. காட்பாடியில் நடைபெற்ற இந்த விழாவின் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வெளியானதும் சினிமாவை தாண்டி அரசியல் வட்டாரத்திலும் கவனம் பெற்று இருக்கிறது. இந்த நிலையில் தான் இப்போது நெட்டிசன்கள் கண்ணன் ரவியை டேக் செய்து சில கேள்விகளை எழுப்பி வருகின்றனர். அதாவது சமீபத்தில் விஷ்ணு விஷால் நடித்த கட்டா குஸ்தி 2 திரைப்படத்திலும் கில்லி பட பாடல்கள் மற்றும் சில காட்சிகள் கூட ட்ரோல் செய்வது போல பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அதேபோல தநா 2026 படத்திலும் விஜய்யை கிண்டல் செய்வது போலவே காட்சிகள் இருந்தது. இதற்கெல்லாம் காரணம் துரைமுருகன் குடும்பத்துடன் கண்ணன் ரவி மகன் திருமணம் செய்யப் போவதால் தான் இப்படி கலாய்த்தார்களா? என்று கேள்வி எழுப்புகிறார்கள். இதனால் கண்ணன் ரவி தரப்பில் இருந்து இதற்கு விளக்கம் வருமா? என்றும் ரசிகர்கள் எதிர்பார்த்து இருக்கின்றனர்.துரைமுருகன் பேத்தி நிச்சயதார்த்தம்
ரசிகர்கள் கேள்வி