சென்னை: நடிகர் ராதிகா சரத்குமார் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கோபமாக வெளியிட்டு இருக்கும் பதிவு சோசியல் மீடியாவில் கவனம் பெற்று வருகிறது. பொதுவாக எந்த விஷயமாக இருந்தாலும் மனதில் பட்டதை ஓபனாக பேசக்கூடிய ராதிகா இந்த முறையும் நடிகை குஷ்பு மற்றும் அவருடைய மகள்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்து இருக்கிறார்.
ராதிகா வெளியிட்ட பதிவில் நான் இதை கோபத்தோடு எழுதுகிறேன் என்று கேப்ஷன் கொடுத்திருக்கிறார். மேலும், அதில் லைக்ஸ் மற்றும் விளம்பரத்திற்காக திரைக்கு பின்னால் ஒளிந்து கொண்டு ஒருவர் செய்த மோசமான கோழைத்தனமான செயலால் கோபத்தில் இதை எழுதுகிறேன் இங்கே அவரது பெயரை நான் சொல்லப்போவதில்லை. ஆனால் அமைதியாக இருந்தால் ஒரு தாயாகவோ, பிரண்டாகவோ, கலைஞராக பொதுவெளியில் குரல் கொடுக்கும் நபராக நான் தவறியவளாகி விடுவேன் என்று கூறியிருக்கிறார்.
மேலும், பேச்சு சுதந்திரம் என்பது ஒருவரை புல்லி செய்வதற்கான சுதந்திரம் கிடையாது. விமர்சனம் என்பது கொடூரமல்ல, காமெடி என்பது அவமானப்படுத்துவது அல்ல. பொது வாழ்க்கையில் இருக்கும் ஒருவருடைய மகள்களை கேலி செய்வது காமெடி கிடையாது அது கோழைத்தனம் கூறியிருக்கிறார். அதைத்தொடர்ந்து தோற்றம் என்பது சாதனையும் கிடையாது, தோல்வியும் கிடையாது. குணம் தான் முக்கியம். பொது வாழ்க்கையில் இருக்கும் ஒருவரின் மகள்கள் என்பதற்காக அவர்களை கேலி செல்வத்தை ரோஸ்டிங் என்று சொல்லிவிட முடியாது. வைரலாக வேண்டும் என்பதற்காக மனித நேயத்தை விலையாக கொடுக்க கூடாது. நான் இந்த விஷயத்தில் குஷ்பு மற்றும் அவருடைய மகள்களுடன் நிற்கிறேன். எந்த நபர் எந்த தளத்தில் இதை செய்திருந்தாலும் இந்த அபத்தமான செயலை நான் கண்டிக்கிறேன் என்று இங்கிலீஷில் சொல்லியிருக்கிறார். மேலும் அவர் தமிழில் அதே பதிவில், ஒரு பெண்ணை விமர்சிக்கலாம். அவளுடைய கருத்துக்களை எதிர்க்கலாம். ஆனால் அவளுடைய குழந்தைகளுக்கு கேலி செய்வது எந்த நாகரிகமும் இல்லை. ஒரு பெண்ணை எதிர்க்க துணிவு இல்லாதவர்கள் அவளுடைய குழந்தைகளை கேலி செய்கிறார்கள். அது விமர்சனம் அல்ல, அது காமெடியும் அல்ல,, அது ஒரு சமுதாயத்தின் ஒழுக்க தோல்வி. நாகரிகம் என்பது பலவீனமானவர்களை காயப்படுத்துவது அல்ல, அவர்களை பாதுகாப்பது தான். இந்த விஷயத்தில் மௌனம் காப்பதும் ஒருவகையில் உடந்தையாக இருப்பது தான். ஒரு தாயின் இதயத்தை காயப்படுத்துவதற்காக குழந்தைகளை ஆயுதமாக பயன்படுத்தும் மனநிலை எந்த நாகரீக சமுதாயத்திற்கும் அவமானம் என்று அந்த பதிவில் சொல்லி இருக்கிறார். ராதிகா இந்த பதிவு வெளியிடுவதற்கு காரணம் குஷ்புவின் மகள்களான அவந்திகா, அனந்திகா மீது சோசியல் மீடியாவில் வைக்கப்பட்ட தனிப்பட்ட விமர்சனங்கள் என்று தகவல் வெளியாகி இருக்கிறது. அதாவது சமீபத்தில் குஷ்புவின் மகள்கள் அவந்திகா மற்றும் அனந்திகாவின் தோற்றத்தை வைத்து சில சோசியல் மீடியாவிலும், யூடியூப் தளங்களிலும் கேலி செய்து வீடியோக்கள் வெளியிட்டிருக்கின்றனர். குறிப்பாக அனந்திகாவின் திருமணத்திற்கு பிறகு இந்த தனிப்பட்ட விமர்சனங்கள் அதிகம் பேசப்பட்ட நிலையில் குஷ்பூ அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் போஸ்ட் போட்டிருந்தார். இப்போது அவருக்கு ஆதரவாக ராதிகாவும் குரல் கொடுத்திருக்கிறார்.நடிகை ராதிகா கோபமான பதிவு
குஷ்பு மகள் கல்யாணத்தில் நெகிழ வைத்த நிமிடங்கள்...
குஷ்பு மகள்களுக்கு சப்போர்ட்
சோசியல் மீடியா புல்லிங்
பாக்யராஜ்க்கு அஞ்சலி செலுத்த வீட்டிற்கு சென்ற குஷ்பூ.. சாந்தனு செய்த செயல்.. கலங்கிய சுந்தர் சி
அம்மாவாக ஆதங்கம்