சென்னை: நேற்று நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை வெகு விமர்சனமாக கொண்டாடப்பட்டபோது நடிகரும் பிக் பாஸ் பிரபலமுமான பாலாஜி முருகதாஸ் வீட்டில் திடீரென போதைப் பொருள் தடுப்பு பிரிவினர் சோதனை செய்து இருக்கின்றனர். அவர் வீட்டில் போதைப் பொருள் வைத்திருப்பதாக வந்த ரகசிய தகவலுக்காக சோதனை நடந்ததாக கூறப்படுகிறது. ஆனால் அப்போது என்ன நடந்தது என்பதை பாலாஜி முருகதாஸ் வீடியோ வெளியிட்டு முதல்வர் விஜய்யை விளாசி இருக்கிறார்.
நடிகர் விஜய் ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டில் மாற்றம் உருவாகும் என்று எதிர்பார்த்த பொதுமக்களுக்கு நாளுக்கு நாள் ஏமாற்றம் கிடைத்து வருகிறது என்று பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். நாளுக்கு நாள் கொலையும், போதைப்பொருள் பயன்பாடும் அதிகரித்து வருகிறது. நேற்று தீபாவளி நாளில் மட்டும் தமிழகத்தில் நேற்று இரவு மட்டும் 8 கொலை நடைபெற்றிருக்கிறது என வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு முக்கிய காரணம் போதைப்பொருள் பயன்பாடு என்பதுதான். திரைத்துறையினர் பலரும் முதலில் நடிகர் விஜய்க்கு சப்போர்ட் செய்திருந்தாலும் இப்போது அவருக்கு எதிராகவே பேசி வருகின்றனர். அதிலும் கடந்த திமுக ஆட்சிக்கு எதிராகவே வீடியோ வெளியிட்டு வந்த பாலாஜி முருகதாஸுக்கு இப்போ முதல்வர் விஜய் ஆட்சிக்கு வந்த பிறகு பெரிய ஏமாற்றம் கிடைத்திருக்கிறது என்று அவர் வீடியோ வெளியிட்டு இருக்கிறார். அதாவது நேற்று தீபாவளி நாளில் அவருடைய வீட்டிற்கு 15 போதைப் பொருள் தடுப்பு போலீசார் சோதனை செய்ய போயிருக்கின்றனர். அப்போது அவர்களை பாலாஜி முருகதாஸ் வீடியோ எடுத்திருக்கிறார். எதற்காக வந்திருக்கீங்க சார்? என்று கேட்டுவிட்டு, நீங்க வீட்டிற்குள் போய் தாராளமாக செக் பண்ணுங்க, நான் கூட பரிசோதனைக்கு வர வேண்டும் என்றால் கண்டிப்பாக வருகிறேன். நான் கிளீனாக இருக்கிறேன், போதை பொருள் எதுவுமே நான் பயன்படுத்தவில்லை. ஆனால் என் வீட்டில் போதை பொருள் இருக்கிறது என்று எந்த அடிப்படையில் நீங்கள் விசாரணைக்கு வந்தீங்க என்பதை எனக்கு சொல்லனும் என்று கேட்டு இருக்கிறார். அதுபோல சோதனையில் அவர் வீட்டில் எந்த போதை பொருளும் கிடைக்கவில்லை என்று பாலாஜி முருகதாஸ் சொல்லி இருக்கிறார். மேலும் போலீசார் சோதனை செய்த வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த பாலாஜி முருகதாஸ், நான் நடிகர் விஜய்யிடம் எதற்காக? எந்த அடிப்படையில் என் வீட்டில் போதைப்பொருள் இருக்கிறதா என்று செக் பண்ணுனாங்க? என் மீது புகார் கொடுத்தவர் யார் என்பதை மட்டுமே தெரிந்து கொள்ள விரும்புகிறேன். நான் நடிகர் விஜய்யிடம் பலமுறை கேட்டும் அவர் அதைப் பற்றி எந்த விவரத்தையும் சொல்லவில்லை. உங்கள் காவல்துறையின் செயல்பாடு வெட்கக்கேடானது. 15 போலீசார் என் வீட்டுக்கு வந்தாங்க. அவங்க என் வீட்டில் பார்த்தது 3 பூனையும், ஒரு நாயும் தான். என் மீது தவறு இல்லாததால தாராளமாக என் வீட்டுக்குள் வந்து செக் பண்ணிக்கோங்க என்று அனுமதித்தேன். இருந்தாலும் அவர்கள் இப்படி நடந்து கொண்டதற்காக முறையான விளக்கம் வேண்டும் என்று அந்த பதிவில் அவர் சொல்லி இருக்கிறார். பாலாஜி முருகதாஸ் இப்போது தனியார் தொலைக்காட்சியிலும், சமையல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வருகிறார். ஒரு சில திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். இந்த நிலையில் இவர் வீட்டில் போதைப்பொருள் தடுப்பு போலீசார் விசாரணை செய்தது சினிமா பிரபலங்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது.மக்கள் கருத்து
பாலாஜி முருகதாஸ் வீடியோஸ்
பிக்பாஸ் பிரபலம் வீட்டில் சோதனை
பாலாஜி முருகதாஸ் பதிவு