சென்னை: இசையமைப்பாளர் அனிருத்- காவியா மாறன் கல்யாணம் தொடர்பான செய்திகள் இப்போ பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. ஏற்கனவே இவர்களுடைய திருமண அழைப்பிதழ் வெளியானதில் இருந்து ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. இப்போது கல்யாணத்திற்காக முக்கிய பிரபலங்கள் கிரிஸ் செல்ல தொடங்கி இருப்பது அந்த எதிர்பார்ப்பை இன்னும் அதிகரித்து இருக்கிறது.
இன்று காலை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது குடும்பத்தினருடன் சென்னை விமான நிலையத்தில் இருந்து கிரீஸ் சென்றிருக்கிறார். அதேபோல திமுக தலைவர் மு க ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் மற்றும் குடும்பத்தினரும் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு சென்னை விமான நிலையத்தில் இருந்து கிளம்பி இருக்கின்றனர. இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
அனிருத் காவ்யா மாறன் கல்யாணம் நவம்பர் 10, 11 ஆம் தேதிகளில் கிரிஸில் நடைபெற இருப்பதாக தகவல்கள் ஏற்கனவே கிடைத்திருந்தது. இது வழக்கமாக பெரிய திருமண விழாவாக இல்லாமல் நெருங்கிய குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் மற்றும் கலந்து கொள்வதாகவும் கூறப்படுகிறது. திருமணத்திற்காக விமான பயணம், தங்குமிடம் போன்ற ஏற்பாடுகளை மாறன் குடும்பத்தினர் கவனித்துக் கொள்வதாகவும் கூறப்படுகிறது. 2 நாட்கள் நடைபெற இருக்கிற இந்த கல்யாணத்தில் அனிருத் குடும்பத்தினர், காவ்யா மாறன் குடும்பத்தினர், ரஜினிகாந்த் குடும்பத்தினர் உள்ளிட்ட நெருங்கிய உறவினர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 4 குடும்பங்களின் பயண வசதிக்காக தனித்தனி விமானங்கள் ஏற்பட்டு செய்யப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது. கிரிஸில் கல்யாணத்தை நடத்திவிட்டு நவம்பர் 21ஆம் தேதி சென்னையில் வரவேற்பு நிகழ்ச்சி பெரிதாக நடைபெற போவதாகவும் கூறப்படுகிறது. அந்த நிகழ்ச்சியில் தான் சினிமா, அரசியல், விளையாட்டு என பலதுறையை சார்ந்த முக்கிய பிரபலங்களும் கலந்து கொள்வதாகவும் கூறப்படுகிறது. தமிழ் சினிமாவில் இருந்து ரஜினிகாந்த், கமல்ஹாசன், அஜித்குமார், சிவகார்த்திகேயன், சூர்யா, தனுஷ் உள்ளிட்ட பல நடிகர்களின் பெயர்கள் பேசப்படுகிறது. இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான், இயக்குனர் நெல்சன், தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் உட்பட பல சினிமா பிரபலங்களும் கலந்து கொள்ளப் போவதாகவும் கூறப்படுகிறது. இதில் அதிகமாக எதிர்பார்ப்பது நடிகரும், முதல்வருமான விஜய் தனியாக வருவாரா? அல்லது அவருடைய குடும்பத்தினருடன் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வாரா? அல்லது அவருடைய தோழி திரிஷாவுடன் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வாரா? என்ற எதிர்பார்ப்பும் ஏற்கனவே ரசிகர்களுக்கு இருக்கிறது. 2 வெவ்வேறு துறைகளில் பிரபலமாக இருப்பவர்களின் திருமணம் என்பதால் ஆரம்பத்தில் இருந்து அதிக கவனம் கிடைத்து வருகிறது. இப்போது ரஜினிகாந்த், ஸ்டாலின் குடும்பத்தினர் கிரிஸ் புறப்பட்டு சென்றிருப்பதால் திருமண கொண்டாட்டம் தொடங்கிவிட்டது என்றே சொல்லலாம்.கிரீஸ் செல்லும் ரஜினி, ஸ்டாலின்
அனிருத் வரவேற்பு
பிரபலங்களின் வருகை