சென்னை: இசையமைப்பாளர் தேவாவின் மறைவு தமிழ் திரையுலகையே சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது. இத்தனை ஆண்டுகளாக ரசிகர்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்த பாடல்களை இசையமைத்தவர், இன்று நம்முடன் இல்லை என்பதைப் பலராலும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. தேவாவின் மறைவு செய்தி வெளியானதிலிருந்து திரையுலகைச் சேர்ந்த பலரும் தங்களுடைய இரங்கல்களைத் தெரிவித்து வரும் நிலையில், நடிகர் ரஜினிகாந்த் நேரில் சென்று அஞ்சலி செலுத்திய சம்பவம் பலரையும் நெகிழ வைத்திருக்கிறது.
ரஜினிகாந்த் தேவாவின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்த வந்தபோது, அவருடைய குடும்பத்தினரிடம் என்ன நடந்தது என்று விசாரித்திருக்கிறார். அதன் பிறகு தேவாவின் உடலை பார்த்த அவர், சிறிது நேரம் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் அங்கேயே நின்று முகத்தை பார்த்து கொண்டு நின்றிருக்கிறார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு சென்றிருக்கிறார். திரையில் எப்போதும் சுறுசுறுப்பாகவும் உற்சாகமாகவும் பார்க்கும் ரஜினி, தனக்கு நன்கு அறிமுகமான ஒரு கலைஞரின் மறைவுக்கு இப்படி அஞ்சலி செலுத்தியிருப்பது ரசிகர்களையும் கலங்க வைத்திருக்கிறது.
ரஜினிக்கும் தேவாவுக்கும் இடையிலான திரைப்பயணத்தை நினைத்துப் பார்த்தால், இந்தச் சந்திப்பு இன்னும் முக்கியமானதாகத் தெரிகிறது. ரஜினியின் படங்களுக்கு தேவா இசையமைத்த காலத்தில் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்ற பல பாடல்கள் உருவாகின. குறிப்பாக அண்ணாமலை, பாட்ஷா, அருணாச்சலம் போன்ற பல படங்களில் தேவாவின் இசை ரஜினியின் திரை அடையாளத்தோடு கலந்து விட்டது. இன்றைக்கும் அந்த பாடல்களைக் கேட்டால் அந்த காலத்து ரஜினி நினைவுக்கு வந்துவிடுவார். அதுபோல தேவா உடலுக்கு அஞ்சலி செலுத்திய சத்யராஜ் செய்தியாளர்களிடம் பேசும்போது, இப்படி நடக்கும்னு நான் எதிர்பார்க்கவே இல்லை. இன்னைக்கு காலையில் நான் வேறு ஒரு இடத்திற்கு போக வேண்டியது. திடீர்னு இந்த செய்தியை கேள்விப்பட்டதும் உடனே வந்துவிட்டேன். எனக்கு தனி பாடல் கொடுத்ததே தேவாதான். தகடுன்னா தமிழ்நாட்டுக்கே தெரியும்.. என்று எனக்காக ஒரு பாடலை கொடுத்தாரு. எப்போதும் யாரிடமும் கடிந்து பேச மாட்டார். ரொம்பவும் ஜாலியான மனிதர். வருத்தமாக இருக்கிறது என்று உருக்கமாக பேசியிருக்கிறார். அதுபோல முன்னாள் முதல்வர் மு க ஸ்டாலின் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் இருவரும் நேரில் சென்று தேவா உடலுக்கு அஞ்சலி செலுத்தி விட்டு, உறவினர்களுக்கு ஆறுதல் கூறியிருக்கிறார்கள். கங்கை அமரன், நாசர் உட்பட பல சினிமா பிரபலங்கள், பாடகர்கள், பாடகிகள் என பலரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.அஞ்சலி செலுத்திய ரஜினிகாந்த்
சத்யராஜ் உறுக்கம்
நேரில் அஞ்சலி
தேனிசை தென்றல் தேவா இனி இல்லையா? மருத்துவமனை வாசலிலேயே கதறி அழுத பாடகி அனுராதா