விஜய் ரெக்கார்டை அடித்து தூக்கிய ரஜினியின் ஜெயிலர் 2.. ரிலீசுக்கு முன்பே செம சம்பவம்

  • சென்னை: ரஜினிகாந்த் ரசிகர்களுக்கு அடுத்தடுத்த அப்டேட் வந்து கொண்டே இருக்கிறது. நெல்சன் இயக்கத்தில் உருவாக்கி வரும் ஜெய்லர் 2 படத்தில் முதல் பாடல் வரும் 21-ஆம் தேதி வெளியாகும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில் இப்போது படத்தின் ஓடிடி உரிமை தொடர்பான தகவல் ஒன்று தமிழ் சினிமாவையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.

    Advertisement

    ரஜினி, நெல்சன் கூட்டணியில் கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியான ஜெய்லர் மிகப்பெரிய வெற்றி பெற்றது. ரம்யா கிருஷ்ணன், விநாயக், வசந்த் ரவி, யோகி பாபு உள்ளிட்டோருடன் மோகன்லால், சிவராஜ்குமார் ஆகியோரின் கேமியோ படத்துக்கு மிகப்பெரிய வரவேற்பை கொடுத்தது. அனிருத் இசையில் பாடல்களும் பட்டையை கிளப்பின. இந்த படம் உலகம் முழுவதும் சுமார் 600 கோடி வரை வசூலித்ததாக தகவல்கள் வெளியான.

    Advertisement

    ஜெயிலர் 2 அப்டேட்

    அந்த வெற்றிக்கு பிறகு ஜெய்லர் 2 அறிவிக்கப்பட்ட போது இயல்பாகவே எதிர்பார்ப்பு எகிறியது. முதல் பாகத்தை இயக்கிய நெல்சனே இரண்டாம் பாகத்தையும் இயக்குகிறார். ரஜினியுடன் பாலிவுட் நடிகர் ஹிருத்திக் ரோஷனும் நடிப்பதாக தகவல் வெளியாகி இருப்பதால் ஜெயிலர் படத்தின் களம் இன்னும் பெரிதாகி இருக்குமா? என்ற எதிர்பார்ப்பும் உருவாகியுள்ளது. இதற்கிடையில் வரும் 21ஆம் தேதி வெளியாக போகும் ஃபர்ஸ்ட் சிங்கிள் எப்படி இருக்கும் என்று எதிர்பார்ப்பும் ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளது.

    அலாபோலேலோ என தொடங்கும் இந்த பாடலில் நடிகை பூர்ணா டான்ஸ் ஆடி இருக்கிறார். இதற்கான ப்ரோமோ வீடியோவும் வெளியாகி கவனம் பெற்று இருக்கிறது. ஜெயிலர் 2 அக்டோபர் 15ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. சுமார் 350 கோடி பட்ஜெட்டில் படம் உருவாகி வருவதாக கூறப்படும் நிலையில் படம் திரைக்கு வருவதற்கு முன்பே அதன் ஓடிடி உரிமை மிகப்பரிய தொகைக்கு விற்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. அதுதான் இப்போது கோலிவுட்டில் ஹாட் டாபிக்.

    Advertisement

    ஜெயிலர் 2 ஓடிடி

    ஜெயிலர் 2 படத்தின் ஓடிடி உரிமை 160 கோடிக்கு விற்கப்பட்டுள்ளதாக பாலிவுட் ஹங்காமா செய்தி வெளியிட்டுள்ளது. இந்த தகவல் உறுதி செய்யப்பட்டால் தமிழ் சினிமாவில் அதிகத் தொகைக்கு விற்கப்பட்ட ஓடிடி உரிமை என்ற புதிய சாதனையை படம் பிடித்து இருக்கும். இதற்கு முன்பு விஜய் நடித்த லியோ படத்தின் ஓடிடி உரிமை சுமார் 120 கோடி வரை சென்றதாக கூறப்பட்டது. அந்த சாதனையை இப்போது ஜெயிலர் 2 முறியடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

    ரஜினிகாந்த் நடிக்கும் ஜெயிலர் 2 ஷூட்டிங்கில் நடந்த விபரீதம்.. இளைஞர் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு!
    அதாவது படம் திரைக்கு வர இன்னும் சில காலம் இருக்கிறது. முதல் பாடலும் இன்னும் வெளியாகவில்லை. ஆனால் அதற்குள்ளே ஓடிடி வியாபாரத்தில் 160 கோடி வசூல் என பேசப்படுகிறது. ஆனால் ஜெயிலர் முதல் பாகத்தின் வெற்றி 2வது பாகத்திலும் தொடருமா? என்பதுதான் அடுத்த பெரிய கேள்வி. அதற்கான பதிலை வரும் 21ஆம் தேதி வெளியாகும் பாடல் கொடுக்கப் போகிறது.

    English Summary

    Rajinikanth fans keep getting updates. While it has already been announced that the first song of Jailer 2, which is being produced by Nelson, will be released on the 21st, now an information regarding the OTT rights of the film has made Tamil cinema look back. Bollywood Hungama has reported that the OTT rights of Jailer 2 have been sold for 160 crores. If this information is confirmed, the film will hold a new record as the highest grossing OTT rights in Tamil cinema. Earlier it was said that the OTT rights of Vijay starrer Leo went up to around 120 crores. Jailer 2 is now reported to have broken that record.