Jailer 2 vs Coolie: கூலியை முந்த முடியாத ஜெயிலர் 2 முதல் நாள் வசூல்.. இவ்வளவு வித்தியாசமா?

  • சென்னை: ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகியுள்ள ஜெயிலர் 2 படம் முதல் நாளிலேயே உலகம் முழுவதும் ரூ.125.25 கோடி வசூல் செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ரஜினி ரசிகர்கள் பெரிய எதிர்பார்ப்புடன் காத்திருந்த இந்த படம், வசூலில் நல்ல தொடக்கத்தைப் பெற்றிருந்தாலும், அவரது முந்தைய படமான கூலி படத்தின் முதல் நாள் வசூலை மட்டும் முந்த முடியவில்லை.

    Advertisement

    ஜெயலர் 2 முதல் நாள் வசூல்

    அக்டோபர் 15ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான ஜெயிலர் 2, இந்தியாவில் முதல் நாளில் ரூ.70.25 கோடி மொத்த வசூல் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதில் வரி கழித்த நெட் வசூல் ரூ.59.70 கோடி. வெளிநாடுகளில் மட்டும் ரூ.55 கோடி வசூல் கிடைத்துள்ளதாகவும், இதன் மூலம் உலகளாவிய மொத்த வசூல் ரூ.125.25 கோடியை எட்டியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    Advertisement

    கூலி பட முதல் நாள் வசூல்

    ஆனால், ரஜினிகாந்தின் முந்தைய அதிரடி படமான கூலி முதல் நாளிலேயே உலகம் முழுவதும் ரூ.151.7 கோடி வசூல் செய்ததாகக் கூறப்படுகிறது. அதனுடன ஒப்பிட்டு பார்த்தால், ஜெயிலர் 2 படத்தின் முதல் நாள் வசூல் குறைவாகவே இருக்கிறது. அதாவது, 2 படங்களின் தொடக்க வசூலுக்கு இடையே சுமார் ரூ.26.45 கோடி வித்தியாசம் உள்ளது.

    2 படத்திற்கும் வித்தியாசம்

    இதனால், ஜெயிலர் 2 நல்ல வசூலுடன் தொடங்கியிருந்தாலும், கூலி படத்தின் தொடக்க வசூலை எட்டுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. அதே நேரத்தில், முதல் நாள் வசூலை மட்டும் வைத்து ஒரு படத்தின் முழுமையான வெற்றியைத் தீர்மானித்துவிட முடியாது. அடுத்தடுத்த நாட்களில் கிடைக்கும் வரவேற்பும் வார இறுதி வசூலும் முக்கியமானவை. ஏற்கனவே இந்த படத்திற்கு நல்ல பாசிட்டிவ் ரிவ்யூ வந்து கொண்டே இருப்பதால் இனி வசூல் அதிகரிப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது. அதிலும் நாளையிலிருந்து மொத்தம் 4 நாட்கள் வரிசையாக அரசு விடுமுறை வருவதால் இன்னும் அதிகமாகவே வசூல் எதிர்பார்க்கப்படுகிறது.

    Advertisement

    ரசிகர்கள் எதிர்பார்ப்பு

    ஜெயிலர் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அதன் இரண்டாம் பாகத்துக்கு எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது. நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் மீண்டும் முத்துவேல் பாண்டியனாக நடித்திருப்பதுடன், அனிருத்தின் இசையும் படத்தின் ஸ்பெஷலாக மாறி இருக்கிறது. திரையரங்குகளில் ரசிகர்கள் கொண்டாடும் காட்சிகளும் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றன. இப்போது கவனிக்க வேண்டியது ஒன்றுதான். முதல் நாளில் ரூ.125 கோடிக்கு மேல் வசூல் செய்திருக்கும் ஜெயிலர் 2, அடுத்தடுத்த நாட்களில் எவ்வளவு வசூல் செய்கிறது என்பதுதான். கூலி படத்தின் வசூல் சாதனையை நெருங்குமா? அல்லது அதையும் தாண்டுமா? என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

    English Summary

    Jailer 2 : Reports indicate that the film *Jailer 2*, starring Rajinikanth, has grossed Rs 125.25 crore worldwide on its opening day. Although the film—which Rajini’s fans had been eagerly awaiting—got off to a strong start at the box office, it failed to surpass the opening-day collection of his previous film, *Coolie*.