ஆபரேஷன் தியேட்டரில் ரத்தக் கத்தியுடன் ரஜினிகாந்த்.. தர்மன் போஸ்டரில் சூப்பர் ஸ்டாரை கவனிச்சீங்களா?


  • சென்னை: ரஜினிகாந்த் நடிப்பில், கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க, அனிருத் இசையமைப்பில் வெளியாகும் தர்மன் படத்தின் போஸ்டர் இன்று வெளியாகி உள்ளது.. சில மாதங்களுக்கு முன்பு, தலைவர் 173 என்ற பெயரில் தற்காலிக பெயரில் துவங்கப்பட்ட இப்படத்துக்கு, இப்போது தர்மன் என்று அதிகாரப்பூர்வமாக டைட்டில் சூட்டப்பட்டுள்ளது. இந்த படம் ஆரம்பமான தினத்திலிருந்தே பலவிதமான சர்ச்சை, சலசலப்புகளை தாங்கி வந்துள்ள நிலையில், இன்று அதன் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி ரஜினி ரசிகர்களுக்கு குஷியை தந்து வருகிறது.

    Advertisement

    ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் நேற்று வெளியிட்ட அறிவிப்புப் போஸ்டர் சமூக வலைதளங்களில் பெரும் வைரலாகி வந்த நிலையில், ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்தபடியே இன்று காலை 10 மணிக்கு தர்மன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் அதிகாரப்பூர்வமாக வெளியாகி உள்ளது.

    Advertisement

    இந்த போஸ்டரில், மருத்துவமனையின் ஆபரேஷன் தியேட்டரில் நீல நிற சட்டை, பேண்ட், கையில் கத்தி, அந்த கத்தி முழுவதும் ரத்தம், கைகளிலும், கிளவுஸிலும் ரத்தம் வழிய தனக்கே உரிய ஸ்டைலில் செம மாஸாக நிற்கிறார் ரஜினிகாந்த்..

    தலைவர் 173 படம்

    இதன் மூலம் இந்த படத்தில் அவர் ஒரு டாக்டர் கேரக்டரில் நடிக்கிறார் என்பது தெளிவாகத் தெரிவதோடு, போஸ்டரில் இடம் பெற்றுள்ள 'டெட்லி ஸ்லோகன்' (Deadly Slogan) என்ற வாசகமும் ரசிகர்களின் ஆர்வத்தை எக்கச்சக்கமாக கிளப்பி விட்டுள்ளது.

    'ஓ மை கடவுளே' மற்றும் பிரதீப் ரங்கநாதனின் 'டிராகன்' ஆகிய படங்களின் மூலம் இளைஞர்களைக் கவர்ந்து 'ஜென் ஜி' (Gen Z) இயக்குநராக முத்திரை பதித்த அஷ்வத் மாரிமுத்து இந்த திரைப்படத்தை இயக்குகிறார்.. விரைவில் ஷூட்டிங் துவங்குவதாகவும் கூறப்படுகிறது. இந்த தகவல் ரஜினி ரசிகர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை தந்து வருகிறது. எனினும் இந்த படம் துவங்கியதில் இருந்தே பலவித சலசலப்புகளை சந்தித்ததை மறக்க முடியாது.

    Advertisement

    தர்மன் - ரஜினிகாந்த், கமல்ஹாசன்

    'தலைவர் 173' என்ற பெயருடன்தான் இந்த படம் ஆரம்பமானது. கடந்த வருடம் நவம்பரில், இப்படத்தை முதலில் இயக்க சுந்தர்.சி ஒப்பந்தமாகி, ரஜினி மற்றும் கமலுடன் இருக்கும் போட்டோக்கள் வெளியாகியிருந்தன.. ஆனால், கதையில் திருப்தி இல்லாததால் ஒரே வாரத்தில் சுந்தர் சி விலகினார்.. இந்த விலகலின்போது, சுந்தர்சி பதிவிட்ட ட்வீட், பிறகு குஷ்பு பதிவிட்ட ட்வீட், அதை உடனே டெலிட் செய்தது, அதற்கான காரணங்கள் என அடுத்தடுத்து வெளியாகி சினிமா வட்டாரத்தையே கிறுகிறுக்க வைத்தது.

    சுந்தர் சி விலகிவிட்டதால் இந்த படத்தை யார் இயக்க போகிறார்கள்? என்ற அடுத்த டவுட் கிளம்பியது.. பிறகு 'டான்' பட இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இயக்குவதாக அறிவிக்கப்பட்டு, ப்ரோமோக்கள் வெளியாகி ரஜினியின் கேரக்டர் குறித்தும் தகவல்கள் குபீரென பரவின. ஆனால் சில மாதங்களில் அந்த டைரக்டரும் விலகியதால் படம் கைவிடப்பட்டதாகப் பேச்சு எழுந்தது.

    Advertisement

    அந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில்தான், இப்போது அஷ்வத் மாரிமுத்து இயக்குநராக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

    போஸ்டர் பார்த்தீங்களா

    அத்துடன் தலைவர் 173 படத்தின் டைட்டிலும் 'தர்மன்' என்று மாற்றம் செய்யப்பட்டு, ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியாகி விட்டது.. ஆனால், இந்த போஸ்டரிலும் ஒரு சலசலப்பு கிளம்பி உள்ளது.. அதாவது ரஜினியின் உடலுக்கும் தலைக்கும் சம்பந்தமே இல்லாதது போல் இருப்பதாக சில நெட்டிசன்கள் விமர்சித்து வருகிறார்கள்..

    இது பிரதீப் ரங்கநாதனா அல்லது ரஜினியா? இது நிஜமாகவே ஃபர்ஸ்ட் லுக் படமா? அல்லது ஏஐ மூலம் உருவாக்கப்பட்டதா, உடம்பெல்லாம் மெல்லியதாகவும், தலை மட்டும் பெரியதாகவும் இருப்பதாக சில ரசிகர்கள் கேள்வி எழுப்ப துவங்கி விட்டார்களாம்.. இதனால் இந்த போஸ்டரும் இணையத்தில் படுவேகமாக பரவி கொண்டிருக்கிறது..!!

    English Summary

    Rajinikanth With a Blood-Stained Scalpel in an Operation Theatre.. Did You Notice the Superstar in the Dharman Poster?