ராமாயணா படத்திற்கு திங்கட்கிழமையிலும் இப்படி ஒரு வசூலா? கோடிகளை அள்ளி புதிய சாதனை!

  • சென்னை: தீபாவளி விடுமுறையை டார்கெட் செய்து வெளியான ராமாயணா படம் நேற்று திங்கட்கிழமை வந்த பிறகு வசூலை கோடிக்கணக்கில் அள்ளி இருக்கிறது. ரன்பீர் கபூர் நடிப்பில் வெளியாகியிருக்கும் 'ராமாயணா' , வெளியான 5வது நாளான திங்கட்கிழமைதான் இதுவரை இல்லாத அளவுக்கு பெரிய வசூலை பதிவு செய்திருக்கிறது.

    Advertisement

    நிதேஷ் திவாரி இயக்கத்தில் உருவாகியிருக்கும் இந்த படம், இந்தியாவின் மிக பிரபலமான இதிகாசமான ராமாயணத்தை பிரம்மாண்டமான சினிமா அனுபவமாகக் கொடுக்க முயற்சி செய்திருக்கிறது. ராமராக ரன்பீர் கபூர், சீதையாக சாய் பல்லவி, ராவணனாக யஷ் என முக்கியமான கதாபாத்திரங்களில் பிரபல நட்சத்திரங்கள் நடித்திருப்பதும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்தது. அனுமனாக சன்னி தியோலும், லட்சுமணனாக ரவி துபேவும் நடித்துள்ளனர். ஏ.ஆர். ரஹ்மான் மற்றும் ஹான்ஸ் சிம்மர் இணைந்து இசையமைத்திருக்கிறார்கள். இரண்டு பாகங்களாக உருவாகும் இந்த படத்தின் முதல் பாகம் நவம்பர் 5-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது.

    Advertisement

    ராமாயணம் 5வது நாள் வசூல்

    தற்போது வெளியாகியிருக்கும் பாக்ஸ் ஆபீஸ் நிலவரப்படி, படத்தின் 5வது நாளான திங்கட்கிழமை இந்தியாவில் மட்டும் ரூ.107.50 கோடி நெட் வசூல் கிடைத்திருக்கிறது. நேற்று நாடு முழுவதும் 23,911 காட்சிகள் திரையிடப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்திய திரைப்படங்களின் வரலாற்றில் திங்கட்கிழமை ஒரே நாளில் கிடைத்த மிகப்பெரிய வசூல் என்ற சாதனையை ராமாயணா பதிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

    இதற்கு முன்பு ரன்வீர் சிங் நடித்த 'துரந்தர் 2' திரைப்படம் வெளியான முதல் திங்கட்கிழமையில் ரூ.60 கோடி நெட் வசூல் செய்திருந்தது. அந்த வசூலை இப்போது ராமாயணா மிகப்பெரிய வித்தியாசத்தில் முந்தியிருக்கிறது. வார இறுதி முடிந்த பிறகும் ரசிகர்கள் திரையரங்குகளுக்கு வருவது படத்தின் வசூலுக்கு பெரிய பலமாக அமைந்திருக்கிறது. இதற்கு காரணம் தீபாவளி விடுமுறையாக இருந்தாலும் திங்கட்கிழமை வசூல் என்று பார்க்கும் போது இது சாதனை தான்.

    Advertisement

    உலகளாவிய வசூல்

    இந்தியாவில் மட்டும் 5 நாட்களில் படத்தின் நெட் வசூல் ரூ.346.35 கோடியாக உயர்ந்திருக்கிறது. இந்தியாவில் கிடைத்த மொத்த கிராஸ் வசூல் ரூ.413.90 கோடி என கூறப்படுகிறது. வெளிநாடுகளிலும் படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. 5வது நாளில் மட்டும் வெளிநாட்டில் ரூ.25 கோடி வசூல் கிடைத்துள்ளதாகவும், இதன் மூலம் மொத்த வெளிநாட்டு கிராஸ் வசூல் ரூ.250 கோடியாக உயர்ந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    இந்திய கிராஸ் மற்றும் வெளிநாட்டு வசூலை சேர்த்தால் உலகம் முழுவதும் படத்தின் மொத்த வசூல் ரூ.663.90 கோடியை எட்டியிருக்கிறது. அதாவது 5 நாட்களிலேயே ரூ.660 கோடியை தாண்டியிருப்பது படத்தின் வசூல் வேகத்தை காட்டுகிறது.

    Advertisement

    துரந்தர் 2, ஜெயிலர் 2 படங்களுடன் போட்டி

    2026-ம் ஆண்டில் வெளியான இந்திய படங்களின் உலகளாவிய வசூல் பட்டியலிலும் ராமாயணா வேகமாக முன்னேறி வருகிறது. வெளியான வசூல் கணக்குகளின்படி பார்த்தால், ரூ.1,852 கோடியுடன் துரந்தர் முதலிடத்திலும், ரூ.821 கோடியுடன் ஜெயிலர் 2 இரண்டாவது இடத்திலும் இருக்கின்றன. தற்போது ரூ.663.90 கோடியை தாண்டியிருக்கும் ராமாயணா மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது. இன்னும் திரையரங்குகளில் படம் ஓடிக்கொண்டிருப்பதால் இந்த வசூல் மேலும் அதிகரிக்க வாய்ப்பிருக்கிறது. குறிப்பாக திங்கட்கிழமை வசூல் இவ்வளவு பெரிய அளவில் இருப்பது அடுத்தடுத்த நாட்களிலும் படத்தின் வசூல் எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

    Advertisement

    ராமாயணா திரைப்படம் குறித்து அதிகம் பேசப்படும் இன்னொரு விஷயம் அதன் பிரம்மாண்டமான பட்ஜெட். இரண்டு பாகங்களையும் சேர்த்து பட்ஜெட் சுமார் ரூ.4,000 கோடி என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. அதனால் இந்த படத்தின் வசூல் சாதனை மட்டுமல்லாமல், முதலீட்டைத் தாண்டி எவ்வளவு வருவாய் ஈட்டப்போகிறது என்பதையும் திரையுலகம் உன்னிப்பாகக் கவனித்து வருகிறது. அதே நேரத்தில் இந்த படத்தின் இரண்டாவது பாகம் எப்படி? எப்போது? வரும் என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்களுக்கு வருகிறது.

    English Summary

    Ramayana: Targeting the Diwali holiday, the film *Ramayana* has raked in crores in box office collections, with a significant surge recorded yesterday, Monday. Starring Ranbir Kapoor, *Ramayana* saw its highest single-day collection to date on Monday, its fifth day of release.