நரசிம்ம ராவ் பற்றி இப்படித்தானே பேசுனாங்க.. விஜய்க்கு சப்போட்டாக ரங்கராஜ் பாண்டே பிடித்த பாய்ண்ட்


  • சென்னை: விஜய் அரசியலுக்கு வந்த நாளிலிருந்து அவரை கடுமையாக விமர்சித்து வந்தவர்களில் முக்கியமானவர் ரங்கராஜ் பாண்டே. ஒரு கட்டத்தில், "விஜய் ஜெயிக்கவே மாட்டார்... அவர் ஜெயித்தால் நான் அரசியல் பேசுவதையே விட்டு விடுகிறேன்" என்று வெளிப்படையாக பேசியிருந்த அவரே, இப்போது விஜயின் ஆட்சியை ஆதரிக்கும் வகையில் பேசியிருப்பது சமூக வலைதளங்களில் பெரிய பேசுபொருளாக மாறியுள்ளது.

    Advertisement

    ரங்கராஜ் பாண்டே பேட்டி

    சமீபத்தில் விஜய் பற்றி பேசிய ரங்கராஜ் பாண்டே, எதிர்க்கட்சிகள் தொடர்ந்து முன்வைக்கும் "வாயை திறக்காத சிஎம்" என்ற விமர்சனத்துக்கே நேரடியாக பதில் கொடுத்துள்ளார். அதில் அவர், "நரசிம்மராவ் பிரதமராக இருந்தபோதும் இதே மாதிரி பேசினாங்க. ஆனா இந்திய பொருளாதாரத்தை புரட்டி போட்ட ஆட்சிதான் அது. ஒரு முதலமைச்சரிடம் இருந்து பேச்சை எதிர்பார்க்க வேண்டிய அவசியம் இல்லை; செயல்தான் முக்கியம்" என்று கூறியிருக்கிறார்.

    Advertisement

    அதோடு, "காவிரி விவகாரத்தில் தீர்மானம் கொண்டு வந்தது யார்? எதிர்க்கட்சித் தலைவர் சொன்ன கருத்தை அரசின் பதிவில் சேர்த்தது யார்? பேசாமலேயே இவ்வளவு செய்திருக்கும்போது, ஆட்சி வேலை செய்யணுமே தவிர தினமும் பேசிக்கொண்டே இருக்க வேண்டிய அவசியமில்லை" என்ற ரீதியிலும் அவர் விஜய் அரசை ஆதரித்து பேசியிருக்கிறார்.

    விஜய் முதல்வர் ஆகுவார் என்று அவரே நம்பல.. எல்லா இடத்திலும் இந்த அமைதி செட் ஆகாது! நடிகர் ராதாரவி ஓபன்

    பெரிய விஷயமாக மாறியுள்ளது?

    விஜய் முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு, அவரைச் சுற்றி ஓடும் மிகப்பெரிய விமர்சனங்களில் ஒன்று - "அவர் நேரடியாக அதிகமாக பேசுவதில்லை, பத்திரிகையாளர்களை சந்திப்பதில்லை" என்பதுதான். அதையே எதிர்க்கட்சிகள் தொடர்ந்து தாக்கி வருகின்றன. அந்த நேரத்தில், முன்பு விஜயை தோற்கடிக்க முடியாத அளவுக்கு விமர்சித்த ரங்கராஜ் பாண்டேவே இப்போது "சிஎம் பேசணும் என்பதில்லை; வேலை செய்யணும்" என்று சொல்லி இருப்பது அரசியல் வட்டாரத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது.

    Advertisement

    இதைத்தான் இப்போது சமூக வலைதளங்களில் பலரும் கேட்கிறார்கள். விஜய் ஜெயிப்பதே கடினம் என்று நினைத்தவர்கள் பலர், அவர் முதல்வராகி விட்ட பிறகு தங்கள் தொனியை மாற்றியிருக்கிறார்கள் என்ற விமர்சனமும் எழுந்துள்ளது. அதே நேரத்தில், "எதிர்க்கட்சிகள் தினமும் பேச்சை மட்டும் கேட்கிறார்கள்; ஆனால் ஆட்சியின் ஆரம்ப முடிவுகளை வைத்து மதிப்பிட வேண்டும் என்பதைத்தான் பாண்டே சொல்கிறார்" என்று அவருக்கு ஆதரவாக பேசுபவர்களும் இருக்கிறார்கள்.

    ஜீ தமிழ் நிகழ்ச்சியில் கண்ணீர் விட்டு அழுத திருநங்கை.. முதலமைச்சர் விஜய் சார்பாக கிடைத்த மறக்க முடியாத கிஃப்ட்

    மொத்தத்தில்... ஒருகாலத்தில் "விஜய் ஜெயித்தால் அரசியல் பேசுவதை விட்டுவிடுவேன்" என்ற அளவுக்கு விமர்சித்த ரங்கராஜ் பாண்டே, இன்று "முதல்வரிடம் இருந்து பேச்சை அல்ல, செயலையே எதிர்பார்க்க வேண்டும்" என்று விஜயை ஆதரிக்கும் தொனியில் பேசியிருப்பது தான் இப்போது அரசியல் வட்டாரத்தில் ஹாட் டாப்பிக்காக மாறியுள்ளது.

    Advertisement

    விஜய் அரசு மீது எதிர்க்கட்சிகள் அழுத்தம் கூட்டிக் கொண்டிருக்கும் நேரத்தில், பாண்டேவின் இந்த பேச்சு ஒரு புதிய கேள்வியை எழுப்பியுள்ளது. "விஜய் உண்மையிலேயே விமர்சகர்களின் மனநிலையை மாற்ற ஆரம்பித்துவிட்டாரா?" என்பது தான்.

    English Summary

    Rangaraj Pandey: In a surprising political turn, journalist and commentator Rangaraj Pandey, who had once been one of the loudest critics of Vijay’s political journey, has now made remarks that are being widely interpreted as support for Chief Minister Vijay and his style of governance.Pandey, who had earlier openly doubted Vijay’s chances in politics and even made strong statements about his political future, has now responded to one of the biggest criticisms aimed at the new Chief Minister — that he does not speak enough in public or directly engage with the press.