மன்னிப்பு கேட்டும் ஓயாத சர்ச்சை... ரவி மோகன்க்கு என்ன ஆச்சு? நீதிமன்றத்துக்கு தெரியாதா? பிரபலம் கேள்வி


  • சென்னை: நடிகர் ரவி மோகன் மற்றும் அவரது மனைவி ஆர்த்தி இடையேயான குடும்ப பிரச்சினை கடந்த சில மாதங்களாக தமிழ் சினிமா வட்டாரத்திலும், சமூக வலைதளங்களிலும் அதிகம் பேசப்படும் விஷயமாக மாறியுள்ளது. நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வரும் நிலையில், சமீபத்தில் ரவி மோகன் அளித்த பத்திரிகையாளர் சந்திப்பு, அதற்கு பிறகு அவர் வெளியிட்ட மன்னிப்பு அறிக்கை ஆகியவை புதிய விவாதங்களை கிளப்பியுள்ளன.

    Advertisement

    இந்த சூழலில் பிரபல சினிமா விமர்சகர் அந்தணன் தனது யூடியூப் சேனலில் பேசிய கருத்துகள் தற்போது வைரலாகி வருகின்றன. ரவி மோகன் சமீபத்தில் ஊடகங்களை சந்தித்து பேசிய விதம் குறித்து அவர் கடுமையாக விமர்சித்துள்ளார்.

    Advertisement

    "ரவி மோகன் மீடியாவை சந்திக்க வேண்டிய அவசியமே இல்லை. சந்தித்தாலும் இவ்வளவு ஆக்ரோஷமாக, கத்தி கதறி பேச வேண்டியதில்லை. அவர் அப்படி பேசியபோது ஆரம்பத்தில் எல்லாருமே அவர் சொல்வது உண்மைதான் என்று நம்பினார்கள். ஆனால் அதன் பிறகு அவர் கூறிய பல விஷயங்கள் மீதான சந்தேகங்கள் ஒன்றன்பின் ஒன்றாக வெளிவர ஆரம்பித்துவிட்டன" என்று தெரிவித்துள்ளார்.

    ஒரு நாள் கோபம்

    அவரை அதிகம் ஆச்சரியப்படுத்தியது ரவி மோகனின் அடுத்த கட்ட நடவடிக்கைகள்தான் என்கிறார். "ஒரு நாள் வந்து ஆவேசமாக பேட்டி கொடுக்கிறார். அடுத்த நாளே நீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்கிறார். இதைப் பார்த்தால் அவர் கொஞ்சம் மன அழுத்தத்தில் இருக்கிறாரோ, அல்லது சரியான ஆலோசனை இல்லாமல் செயல்படுகிறாரோ என்ற எண்ணம் வருகிறது" என்று கூறியுள்ளார்.

    Advertisement

    மேலும், நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும் போது பொதுவெளியில் பேசுவது பெரிய தவறு என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

    நீதிமன்ற உத்தரவை மீறிய பேட்டி?

    குறிப்பாக ரவி மோகன் - ஆர்த்தி விவாகரத்து வழக்கு தொடர்பாக பொதுவெளியில் கருத்து தெரிவிக்கக் கூடாது என்று நீதிமன்றம் ஏற்கனவே இருதரப்புக்கும் அறிவுறுத்தியிருந்தது.

    அந்த நிலையில் ரவி மோகன் பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து ஆர்த்தி தரப்பில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகின.

    இதன் பின்னரே தனது பேச்சால் மனவேதனை அடைந்தவர்களிடமும், பாதிக்கப்பட்டவர்களிடமும் மன்னிப்பு கோரி ரவி மோகன் அறிக்கை வெளியிட்டார்.

    Advertisement

    மன்னிப்பு கடிதத்தில் என்ன சொன்னார்?

    சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையில், தனது கருத்துகளால் மனஉளைச்சல் அடைந்த அல்லது பாதிக்கப்பட்ட அனைவரிடமும் மனப்பூர்வமான வருத்தத்தையும் மன்னிப்பையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று ரவி மோகன் குறிப்பிட்டிருந்தார்.

    அந்த அறிக்கை வெளியான பிறகு, "இது நீதிமன்ற உத்தரவின் விளைவா?", "அல்லது உண்மையான வருத்தமா?" என்ற கேள்விகளும் சமூக வலைதளங்களில் எழுந்தன.

    மேலும் அந்தணன் தனது வீடியோவில் மற்றொரு விஷயத்தையும் சுட்டிக்காட்டியுள்ளார். "ஒருபக்கம் ஜீவனாம்சம் கொடுக்க பணம் இல்லை என்று கூறப்படுகிறது. இன்னொரு பக்கம் இனிமேல் நடிக்க மாட்டேன் என்று சொன்னவர் புதிய படங்களில் ஒப்பந்தமாகிறார் என்ற தகவல்கள் வருகின்றன. இவை அனைத்தும் மக்களுக்கும் தெரியும். நீதிமன்றத்துக்கும் தெரியாதா?" என்று கேள்வி எழுப்பியுள்ளார். இந்த கருத்தும் தற்போது சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

    Advertisement

    குடும்பத்தை காப்பாற்ற முயற்சி பண்ணுங்க

    ரவி மோகன் - ஆர்த்தி பிரச்சினைக்கு தீர்வு குறித்து பேசிய அவர், இருவரும் ஈகோவை விட்டு பேச வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். "மனைவியுடன் நேரடியாக பேச முடியவில்லையா? குழந்தைகள் மூலமாக பேசுங்கள். குடும்பத்தை காப்பாற்ற முயற்சி செய்யுங்கள். இந்த யுத்தம் எதற்கு? காலம் பல விஷயங்களை மாற்றும். அமைதியாக உட்கார்ந்து நல்ல முடிவு எடுப்பது முக்கியம்" என்று தெரிவித்துள்ளார்.

    பகிரங்க மன்னிப்பு கேட்ட ரவி மோகன்! சர்ச்சைகளால் சோர்ந்த நடிகரின் உணர்ச்சிபூர்வ அறிவிப்பு

    மெல்ல மாறும் ரசிகர்களின் மனநிலை?

    ஒருகாலத்தில் மிகவும் அமைதியான, சர்ச்சைகளில் சிக்காத நடிகர் என்ற இமேஜ் ரவி மோகனுக்கு இருந்தது. ஆனால் கடந்த சில மாதங்களாக நடந்துவரும் விவாகரத்து சர்ச்சை, கெனிஷாவுடன் தொடர்புபடுத்தப்பட்ட வதந்திகள், பத்திரிகையாளர் சந்திப்பில் அவர் கூறிய குற்றச்சாட்டுகள், அதன் பின்னர் வந்த மன்னிப்பு அறிக்கை போன்றவை அவரது ரசிகர்கள் மத்தியிலும் கலவையான கருத்துகளை உருவாக்கியுள்ளன.

    Advertisement

    சிலர் இன்னும் அவருக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகிறார்கள். "பல ஆண்டுகளாக அமைதியாக இருந்தவர் இப்போது தனது தரப்பை சொல்ல முயற்சி செய்கிறார்" என்கிறார்கள்.

    Khushbu: “ரவி மோகன் பற்றிய கேள்வி”.. குஷ்புவின் ரியாக்ஷன்.. ஒரே வார்த்தையில் பதிலடி

    அடுத்து என்ன?

    ரவி மோகன் - ஆர்த்தி விவகாரம் தற்போது நீதிமன்றத்தில் இருப்பதால், அடுத்தடுத்த சட்ட நடவடிக்கைகள் மற்றும் நீதிமன்ற தீர்ப்புகளே இந்த விவகாரத்தின் திசையை தீர்மானிக்கப் போகின்றன. ஆனால் ஒரு விஷயம் மட்டும் தெளிவாக தெரிகிறது. ஒரு காலத்தில் திரையுலகில் மட்டுமே பேசப்பட்ட ரவி மோகன், இப்போது தனது தனிப்பட்ட வாழ்க்கையைச் சுற்றியுள்ள சர்ச்சைகளால் தினமும் செய்திகளில் இடம்பிடித்து வருகிறார்.

    English Summary

    Actor Ravi Mohan continues to remain at the center of public discussion as the controversy surrounding his ongoing family dispute shows no signs of slowing down. Despite recently issuing a public apology regarding comments made during a press interaction, fresh questions and debates have emerged online.The actor's family issues, legal proceedings, and public statements have become one of the most discussed topics in Tamil cinema circles over the past few months. While the matter remains before the court, Ravi Mohan’s decision to address the media earlier this year triggered widespread reactions from both supporters and critics.Adding to the discussion, film critic Antanan recently shared his views through a YouTube video, questioning the actor’s handling of the situation. According to him, Ravi Mohan did not need to conduct a press meet while the legal proceedings were ongoing. He argued that the emotional nature of the interaction initially generated sympathy, but later raised several doubts among observers.Antanan further suggested that the actor’s actions appeared inconsistent, pointing out that he gave an emotional public statement and later issued an apology following legal developments. According to the critic, this sequence of events has led many people to question the strategy behind Ravi Mohan’s public communication.The controversy intensified because the divorce-related case involving Ravi Mohan and Aarthi was already being heard in court. Reports indicated that both parties had been advised against making public comments regarding the dispute. The subsequent press conference therefore became a subject of legal and public scrutiny.