கண்கலங்க வைத்த ரவி மோகன் பேச்சு... பின்னால் நடந்த சீக்ரெட் மீட்டிங்! நடிகர் கார்த்தி சொன்னது என்ன? இப்போ நல்ல முடிவு


  • சென்னை: நடிகர் ரவி மோகனின் சமீபத்திய செய்தியாளர் சந்திப்பு ரசிகர்களிடையே பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. பொதுவாக அமைதியாகவும் அளவான பேச்சுக்குப் பெயர் பெற்ற ரவி மோகன், இந்த முறை கண்கலங்கியபடி தனது மனவேதனைகளை வெளிப்படையாக பகிர்ந்துகொண்டது பலரையும் கவலையடைய வைத்தது.

    Advertisement

    ரவி மோகன் பேட்டி

    தனது தனிப்பட்ட வாழ்க்கையில் நீண்டகாலமாக பிரச்சனைகள் நீடித்து வருவதாக கூறிய அவர், விவாகரத்து விவகாரம் முடிவுக்கு வரும் வரை சினிமாவில் நடிக்கப் போவதில்லை என்று அறிவித்து இருந்தார். அதோடு, தன்னைச் சுற்றி சிலர் திட்டமிட்டு சதி செய்து வருவதாகவும், தன்னுடைய குடும்ப வாழ்க்கையையும் சினிமா பயணத்தையும் பாதிக்க முயற்சி நடப்பதாகவும் வேதனையுடன் பேசியதாக தகவல்கள் வெளியாகின.

    Advertisement

    பிளாக் மேஜிக்

    மேலும், தனது நெருங்கிய தோழி குறித்தும் தேவையற்ற அவதூறுகள் பரப்பப்பட்டதாகவும், அதன் மூலம் உறவுகளை உடைக்க முயற்சிகள் நடந்ததாகவும் அவர் பேசியிருந்தார். தொடர்ந்து மன அழுத்தத்தில் இருப்பதாகவும், தான் திருமண வாழ்க்கையில் இருக்கும் போது அவர்களுக்கு அடிமையாக இருப்பதற்காக சில பிளாக் மேஜிக் செய்து வைக்கப்பட்டது, இப்போதும் தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறார்கள் அதனால் நான் ரத்த வாந்தி எடுத்துக் கொண்டிருக்கிறேன் என்று சில அதிர்ச்சிகரமான குற்றச்சாட்டுகளையும் சொல்லியிருந்தார்.

    ரசிகர்கள் வருத்தம்

    ஏற்கனவே தனிப்பட்ட பிரச்சனைகளால் மன உளைச்சலில் இருக்கும் ரவி மோகன், சினிமாவிலிருந்தும் முழுமையாக விலகிவிட்டால் அது அவருக்கு இன்னும் அதிகமான மன அழுத்தத்தை ஏற்படுத்தும் என ரசிகர்களும், திரையுலக நண்பர்களும் கவலை தெரிவித்தனர். "வேலைதான் அவருக்கு மீண்டும் மன உறுதியை தரும்" என்ற கருத்தும் சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டது.

    Advertisement

    நடிகர் கார்த்தி எடுத்த முடிவு

    அந்த நிலையில், ரவி மோகனின் நெருங்கிய நண்பரான நடிகர் கார்த்தி முக்கிய பங்கு வகித்திருப்பதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. சமீபத்தில் கார்த்தி நேரில் சந்தித்து ரவி மோகனிடம் நீண்ட நேரம் பேசி ஆறுதல் கூறியதாக கூறப்படுகிறது. நண்பனாக அவர் கொடுத்த அந்த மன ஆதரவு, ரவி மோகனின் மனநிலைக்கு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கலாம் என சினிமா வட்டாரங்கள் பேசுகின்றன.

    ரவி மோகனின் மாற்றம்

    அதன் பின்னர் ரவி மோகன் மீண்டும் திரைப்படப் பணிகளில் கவனம் செலுத்த முடிவு செய்திருப்பதாக தகவல் பரவி வருகிறது. குறிப்பாக, அவருடைய தயாரிப்பில் உருவாகி வந்த 'ப்ரோ கோடு' திரைப்படப் பணிகளை முதலில் மீண்டும் தொடங்கி, அதை முழுமையாக முடிக்க திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது.

    Advertisement

    ஒரு கட்டத்தில் "இனி நடிப்பே வேண்டாம்" என்ற மனநிலைக்கு சென்ற நடிகர், நண்பர்களின் ஆறுதலால் மீண்டும் கம்பேக் முடிவெடுத்திருக்கிறார் என்ற தகவல் ரசிகர்களுக்கு நிம்மதியை கொடுத்துள்ளது. தனிப்பட்ட புயல்களை கடந்து ரவி மோகன் மீண்டும் பழைய உற்சாகத்துடன் திரைக்கு திரும்புவாரா என்பது தான் இப்போது ரசிகர்களின் பெரிய எதிர்பார்ப்பாக உள்ளது.

    English Summary

    Actor Ravi Mohan’s recent emotional press interaction deeply moved fans after he openly spoke about personal struggles and even suggested stepping away from acting until his divorce proceedings are resolved. The emotional nature of his statements sparked widespread concern among fans and industry insiders, many of whom felt that distancing himself from cinema could worsen his emotional state. Now, reports suggest that actor Karthi, said to be a close friend, privately met Ravi Mohan and offered emotional support during this difficult phase. Following that reported conversation, buzz suggests Ravi Mohan may be reconsidering his earlier decision and could return focus to his film commitments, starting with his production venture Bro Code. While there has been no official confirmation, fans are hopeful this marks a positive turning point in his comeback journey.