நான் துரோகம் செய்ய மாட்டேன்.. மண்டியிட்டு மன்னிப்பு கேட்ட ரவி மோகன்.. நெகிழ வைத்த வார்த்தை


  • சென்னை: நடிகர் ரவி மோகனின் வாழ்க்கையில் சில மாதங்களாகவே பெரிய புயலே வீசிக் கொண்டிருக்கிறது. பொதுவாக ஒரு நடிகரின் வாழ்க்கையில் வெற்றியும் இருக்கும், தோல்வியும் இருக்கும் ஆனால் சில நேரங்களில் திரையில் நடப்பதை விட அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்கள் தான் ரசிகர்களை அதிகம் பாதித்துவிடும். அதுதான் கடந்த சில மாதங்களாக ரவி மோகன் வாழ்க்கையிலும் நடந்து கொண்டிருக்கிறது.

    Advertisement

    மனைவி ஆர்த்தியுடன் ஏற்பட்ட பிரிவு, விவாகரத்து வழக்கு, அதன் பிறகு கெனிஷாவுடன் பேசப்பட்ட சர்ச்சை, சமூக வலைத்தள விமர்சனங்கள் என்று பல பிரச்சனைகளை தொடர்ந்து சந்தித்தார். அந்த நேரத்தில் விவாகரத்து முடியும் வரை என்னுடைய படங்கள் வெளியாகாது, நானும் நடிக்க மாட்டேன் என்று அவர் கூறியிருந்தது பெரிய அளவில் ரசிகர்களுக்கு அதிர்ச்சியைக் கொடுத்தது.

    Advertisement

    ரவி மோகன் பேச்சு

    ஆனால் அந்த முடிவு நீண்ட நாட்கள் நீடிக்கவில்லை. சமீபத்தில் நடந்த விருது வழங்கும் விழாவில் ரவி மோகன் இதுவரைக்கும் இல்லாத வகையில் எமோஷனலாக பேசியிருக்கிறார். அந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அதில் அவர் பேசும்போது, எனக்கு இந்த வருடம் 46 வயது ஆகிறது. இதில் 23 வருடங்கள் சினிமாவுக்காகவே வாழ்ந்திருக்கிறேன்.

    மன்னிப்பு கேட்டும் ஓயாத சர்ச்சை... ரவி மோகனுக்கு என்ன ஆச்சு? நீதிமன்றத்துக்கு தெரியாதா? பிரபலம் கேள்வி

    தற்போதைய நிலை

    என் வாழ்க்கையின் பாதியை இந்த துறைக்காக கொடுத்திருக்கிறேன். நான் செய்த ஒரு சின்ன தவறு உங்களை காயப்படுத்தி இருந்தால் அதற்காக மனப்பூர்வமாக மன்னிப்புக் கேட்கிறேன் என்று அவர் பேச்சை தொடங்கியதும், ரசிகர்கள் அமைதியாக அதை கேட்டுக் கொண்டிருந்தனர். பிறகு அவர் பேசும் போது சினிமாவை விட்டு நான் போக போகிறேன் என்று சொன்னதும்.., அதை மட்டும் சொல்லாதே என்று இந்த துறையில் இருக்கும் பலர் என்னிடம் சொன்னார்கள். அந்த வார்த்தையை நான் வேதவாக்காக எடுத்துக் கொண்டேன்.

    Advertisement

    மண்டியிட்டு மன்னிப்பு

    உங்கள் முன்னிலையில் மண்டியிட்டு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். சினிமாவுக்கும் என்னை நம்பிய ரசிகர்களுக்கும் நான் ஒருபோதும் துரோகம் செய்ய மாட்டேன் என்று உருக்கமாக பேசினார். மேலும் நான் திரும்பி வருவேன்... கராத்தே பாபுவாக திரும்பி வருவேன். இன்று நான் மீண்டும் சிரிக்கிறேன் என்றால் அதற்கு காரணம் ரசிகர்கள் தான் என்று அவர் சொன்னதும் அங்கிருந்த ரசிகர்கள் அனைவரும் கைத்தட்டி தங்களுடைய ஆதரவை தெரிவித்தனர்.

    அடடே.. ரவி மோகனின் மாமியார் தான் அந்த வில்லியா? நடிகை கஸ்தூரி உடைத்த ரகசியம்! ரசிகர்களுக்கு செம ஷாக்
    மேலும் அவர் நான் சமீபத்தில் செய்தியாளர்கள் முன்பு வெளிப்படையாக பேசிய பிறகு நிறைய பேர் மனநல பிரச்சனைகள் பற்றி பேச ஆரம்பித்தார்கள். உங்களால் நாங்களும் மனம் திறந்து பேசுகிறோம் என்று என்னிடம் சொன்னார்கள். அதை கேட்கும் போது சந்தோஷமாக இருக்கிறது என்று மகிழ்ச்சியுடன் பேசினார். கடந்த சில மாதங்களாகவே ரவி மோகனின் பெயர் பெரும்பாலும் சர்ச்சையாகவே தலைப்புகளில் இடம் பிடித்துக் கொண்டிருக்கிறது. ஆனால் இந்த முறை அவர் மோட்டிவேஷனாக பேசியது பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது.

    English Summary

    Ravi Mohan: Ravi Mohan gave an emotional speech like never before at the recent award function. The video is going viral on the internet. In which he speaks, I am 46 years old this year. I have lived for cinema for 23 years. I kneel before you and beg for forgiveness. He spoke fervently that I will never betray the cinema and the fans who believed in me. And I'll be back...back as Karate Babu. When he said that if I am smiling again today, it is because of the fans and all the fans there clapped their hands and showed their support.