சென்னை: நடிகர் ரவி மோகன் வீட்டைச் சுற்றி புதிய சர்ச்சை ஒன்று கிளம்பியுள்ளது. சென்னை நீலாங்கரையில் உள்ள அவரது வீட்டில் வேலை பார்த்து வந்த இரு பணிப்பெண்கள் சிறைபிடிக்கப்பட்டதாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் சென்றதையடுத்து, அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த தகவலின் அடிப்படையில் காவல்துறை சம்பவம் குறித்து விசாரணையை தொடங்கியுள்ளது.
இந்த விவகாரத்தில் இன்னொரு அதிர்ச்சி திருப்பமாக, ரவி மோகன் தரப்பும் பணிப்பெண்கள் மீது குற்றச்சாட்டு வைத்துள்ளது. அதாவது, அந்த இரு பெண்களும் வீட்டில் திருட்டில் ஈடுபட்டதாக ரவி மோகன் தரப்பில் போலீசாரிடம் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால், "சிறைபிடிப்பு புகார் உண்மை? அல்லது திருட்டு விவகாரமா பின்னணி?" என்ற கேள்வி எழுந்துள்ளது.
இரு தரப்பிலிருந்தும் குற்றச்சாட்டுகள் வந்துள்ளதால், நீலாங்கரை காவல்துறையினர் இரண்டு புகார்களையும் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வீட்டில் என்ன நடந்தது, பணிப்பெண்கள் எந்த சூழலில் இருந்தனர், திருட்டு குற்றச்சாட்டுக்கு ஆதாரங்கள் உள்ளதா, கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் சென்றதற்கான பின்னணி என்ன என்பதெல்லாம் தற்போது போலீஸ் விசாரணையின் முக்கிய புள்ளிகளாக மாறியுள்ளது. இந்த சம்பவம் திரையுலக வட்டாரத்திலும் பேசுபொருளாகியுள்ளது. ஒருபக்கம் பணிப்பெண்கள் சிறைபிடிக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழ, மறுபக்கம் அவர்கள்மீதே திருட்டு புகார் வந்திருப்பது இந்த வழக்கை இன்னும் பரபரப்பாக்கியுள்ளது. விசாரணை முடிவில் தான் உண்மை நிலை வெளிவரும் என போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.திருட்டு புகார்
மன்னிப்பு கேட்டும் ஓயாத சர்ச்சை... ரவி மோகனுக்கு என்ன ஆச்சு? நீதிமன்றத்துக்கு தெரியாதா? பிரபலம் கேள்வி
மீண்டும் ரவி மோகனுக்கு பிரச்சனை