ரவி மோகனுக்கு கோர்ட்டில் ஆறுதல்.. ஆனால் மாமியார் போட்ட குண்டு.. அந்த மெசேஜ்? சுஜாதா விஜயகுமார் கேள்வி

  • சென்னை: நடிகர் ரவி மோகன் ஆர்த்தி விவாகரத்து வழக்கு மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் நீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவு, அதற்கு பிறகு ஆர்த்தியின் அம்மா கொடுத்த பேட்டியும் சோசியல் மீடியாவில் பெரிய விவாதத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

    Advertisement

    சில நாட்களுக்கு முன்பு சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் ஆர்த்தி கேட்ட 4 லட்சம் இடைக்கால ஜீவனாம்சம் கோரிக்கையை ஏற்காமல் வழக்கு முடியும் வரை மாதம் 3 இலட்சம் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டது. அதே நேரத்தில் ரவி மோகன் தனது இரண்டு மகன்களையும் சந்திக்க எந்த தடையும் இல்லை என்று நீதிமன்றம் கூறி இருந்தது. இந்த உத்தரவால் ரவி மோகன் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்த நிலையில் மற்றொரு பக்கம் ஆர்த்தியின் அம்மா சுஜாதா விஜயகுமார் கொடுத்த பேட்டி வைரல் ஆகி வருகிறது.

    Advertisement

    ரவி மோகன் பற்றிய குற்றச்சாட்டு

    தங்களது பேரன் வெளிநாட்டில் படிக்க வேண்டும் என்று ஆசைப்பட்ட பொழுது கூட அதற்கு பாஸ்போர்ட்டில் ஒரு கையெழுத்து போடுவதற்கு ரவி மோகன் வரவில்லை, எல்லோரும் அவரவர் பிள்ளைகளை அவர்தான் பார்த்துக் கொள்ள வேண்டும். என் மகளை நான் பார்த்துக் கொள்வேன். ஆனால் அவர் பெற்ற பிள்ளைகளை அவர்தான் கவனிக்க வேண்டும். அது ஒரு அப்பாவின் பொறுப்பு.

    குழந்தைகளுக்கான செலவு

    குழந்தைகளின் படிப்பு செலவு, அன்றாட தேவைகள், சாப்பாட்டு செலவு போன்றவற்றை கூட ரவி மோகன் முழுமையாக ஏற்கவில்லை என்றும் குற்றம் சாட்டி இருக்கிறார். அதுபோல ரவி மோகன் போனிலிருந்து என்னுடைய பேரனுக்கு ஒரு மெசேஜ் வந்தது. அதில் நான் உங்களுக்கு ஏடிஎம் மிஷினா? என்ற கேள்வியுடன் இரண்டு பக்கத்திற்கு ஒரு மெசேஜ் அனுப்பி இருந்தார். ஆனால் அது அவர் அனுப்பி இருக்க வாய்ப்பு இல்லை. அவருடைய போனிலிருந்து வேறயாரோ அனுப்பி இருக்கிறாங்க, என்றும் சுஜாதா கூறி இருக்கிறார்.

    Advertisement

    எந்த அம்மாவும் தன்னுடைய பிள்ளை இப்படி கஷ்டப்படுவதை பார்க்க முடியாது. எனக்கு வந்த நிலைமை யாருக்கும் வரக்கூடாது. என்னுடைய மகள் சாதாரணமாக ஒன்றும் வளரவில்லை. அவரிடம் நாங்கள் பணம் வாங்கி தான் வாழ வேண்டும் என்ற கட்டாயமும் இல்லை. என் மகள் ஆர்த்தி பிறக்கும்போதே எவ்வளவு வசதியாக பிறந்தார் என்பது எல்லோருக்கும் தெரியும். இது நான் சொல்லிக் காட்ட வேண்டும் என்பதற்காக கூட இல்லை.

    சுஜாதா விஜயகுமார் பேட்டி

    எங்களுடைய வீட்டில் தான் அன்றைய முதல்வர்கள் முதல் இன்றைய முதல்வர் வரை பலரும் நடித்த படங்கள் சூட்டிங் செய்யப்பட்டது. தமிழில் மட்டுமல்லாமல் பல மொழிகளில் எங்கள் வீட்டில் சூட்டிங் எடுக்கப்பட்டிருக்கிறது. அந்த அளவிற்கு நாங்களும் நல்ல நிலைமையில் தான் இருந்தோம்.

    Advertisement

    கண்கலங்கி பேசிய ரவி மோகன்.. முதல்வர் விஜயை சந்தித்த மாமியார்.. விஷயம் இதுதானா?
    இப்ப கூட நான் என்னுடைய மகளை அவரிடம் இருந்து பிரித்து விட்டேன் என்று சிலர் சொல்றாங்க ஆனால் என்னுடைய மகள் எதுவும் தனியாக வேலை பார்த்து சம்பாத்தியம் செய்யவில்லை, பணத்துக்காக நான் பிரித்து விட்டேன் என்று சொல்வதற்கு.. என்று தன்னைப் பற்றிய வதந்திகளுக்கு எல்லாம் சுஜாதா பதிலடி கொடுத்திருக்கிறார். அதே நேரத்தில் விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நடந்து கொண்டிருக்கும் நிலையில் ரவி மோகன் தரப்பு, ஆர்த்தி குடும்பத்தினரும் மாறி மாறி குற்றச்சாட்டுகளை வைத்து கொண்டிருப்பது குழந்தைகளின் மனநிலையையும் பாதிக்கும் என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

    English Summary

    Ravi Mohan: Actor Ravi Mohan's Aarthi divorce case is once again creating a sensation, the court's interim order, and the interview given by Aarthi's mother after that has created a big debate on social media.