விஜய் மகனை இழுத்து பேசிய ரவி மோகனின் மாமியார்.. 15 நாள் முன்பு நடந்தது தெரியுமா? சுஜாதா ஆதங்கம்

  • சென்னை: நடிகர் ரவி மோகன்- ஆர்த்தி விவாகரத்து விவாகரம் கடந்த சில மாதங்களாகவே சோசியல் மீடியாவில் அதிகம் பேசப்படும் விஷயமாக இருந்து வருகிறது. நீதிமன்ற உத்தரவுகள், ஜீவானாம்சம், குழந்தைகளை சந்திக்க உரிமை, பாடகி கெனிஷா பிரான்சிஸ் தொடர்பான சர்ச்சை என இந்த விவகாரம் நாளுக்கு நாள் புதிய திருப்பத்தை சந்தித்து வருகிறது.

    Advertisement

    இந்த நிலையில் ஆர்த்தியின் அம்மாவும் தயாரிப்பாளருமான சுஜாதா விஜயகுமார் கொடுத்த பேட்டி இணையத்தில் புதிய விவாதத்தை ஏற்படுத்தியிருக்கிறது. குறிப்பாக அந்த பேட்டியில் அவர் திடீரென விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் பற்றி எடுத்துக்காட்டாக கூறியிருப்பது பலரின் கவனத்தை ஈர்த்திருக்கிறது.

    Advertisement

    சஞ்சய் பேட்டியை பார்த்து அழுகை

    அந்த பேட்டியில் சுஜாதா விஜயகுமார் பேசும்போது, சமீபத்தில் முதலமைச்சர் விஜய்யின் மகன் சஞ்சய் கொடுத்த பேட்டி பார்த்தேன். அவர் தன்னுடைய அப்பாவை பற்றி எவ்வளவு பெருமையாக பேசுகிறார்? அதைப் பார்த்ததும் எனக்கு அழுகையே வந்துடுச்சு. கணவன் மனைவிக்குள் ஆயிரம் பிரச்சனைகள் இருந்தாலும் பிள்ளைகள் அப்பா மீது இப்படித்தான் பாசமாக இருக்க வேண்டும்.

    15 நாள் முன்பு நடந்த விஷயம்

    ஆனால் என்னுடைய பேரன்கள் விஷயத்தில் என்ன நடந்தது தெரியுமா? கடந்த 15 நாட்களுக்கு முன்பு என்னுடைய பேரன் வெளிநாட்டில் ஒரு கோஸில் சேர வேண்டும் அதற்காக பாஸ்போர்ட் தொடர்பான ஆவணங்களில் ரவி கையெழுத்து தேவைப்பட்டது. அதற்காக அவரை அழைத்ததும் முதலில் வருகிறேன் என்று சொன்னார். ஆனால் கொஞ்ச நேரத்தில் அவருடைய போனிலிருந்து ஒரு மெசேஜ் வந்தது. அதில் நான் ஏன் உதவ? வேண்டும்? நான் என்ன ஏடிஎம் மிஷினா? என்ற விதத்தில் பக்கம் பக்கமாக நீண்ட ஒரு பதிவு அனுப்பி இருந்தது.

    Advertisement

    கெனிஷா பற்றி குற்றச்சாட்டு

    அந்த மெசேஜ் ரவி மோகன் அனுப்பி இருப்பார் என்று நான் நம்பவில்லை. அவருடன் இருப்பவர்கள் தான் அதை அனுப்பி இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். இப்போதும் பாடகி கெனிஷா அவருடன் தான் இருந்து வருகிறார். ஒரு ஹீலரை பக்கத்திலேயே வைத்துக்கொண்டு குழந்தைகளை சந்திக்க வேண்டும் என்று சொல்கிறார். அந்த குழந்தைகள் எப்படி போகும்? அதோடு கெனிஷாவும் ரவி மோகனும் பிரிந்து விட்டார்கள் என்று வெளியே ஒரு தோற்றம் உருவாக்கி இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் இன்னும் ஒன்றாகத்தான் இருக்கிறார்கள் என்று புதிய குற்ற சாட்டையும் சுஜாதா பேசியிருக்கிறார்.

    Advertisement

    நான் துரோகம் செய்ய மாட்டேன்.. மண்டியிட்டு மன்னிப்பு கேட்ட ரவி மோகன்.. நெகிழ வைத்த வார்த்தை
    ஏற்கனவே ரவி மோகன் ஆர்த்தி பிரச்சனையில் கெனிஷா பெயர் பலமுறை பேசப்பட்டது. அதற்கு கெனிஷா மறுப்பு தெரிவித்து இருந்தார். அதோடு தான் ரவி மோகனை விட்டு பிரிய போவதாகவும், மீடியாவில் இருந்து விலகுவதாகவும் அறிவித்திருந்தார். இந்த சூழலில் சுஜாதா விஜயகுமார் மீண்டும் கெனிஷா குறித்து பேசியது விவாதத்தை ஏற்படுத்தி இருக்கிறது. மொத்தத்தில் ரவி மோகன் ஆர்த்தி விவாகரத்து முடிவுக்கு வராத நிலையில் சுஜாதா விஜயகுமார் அளித்த இந்த பேட்டி குறிப்பாக விஜய் குடும்பத்தை எடுத்துக்காட்டாக சொன்னது சோசியல் மீடியாவில் அதிகமாக பேசப்படுகிறது.

    English Summary

    Ravi Mohan: The actor Ravi Mohan-Aarthi divorce has been a hot topic on social media for the past few months. Court orders, alimony, visitation rights, singer Kenisha Francis controversy, the matter is taking a new turn every day. In this situation, the interview given by Aarthi's mother and producer Sujatha Vijayakumar has created a new debate on the internet. Especially in that interview, he suddenly mentioned Vijay's son Jason Sanjay as an example, which has attracted the attention of many people.