சென்னை: நடிகர்கள் ரசிகர்களை சந்தித்தாலே அடுத்த கேள்வி அரசியல் பற்றி தான் வருகிறது. அதிலும் சமீப காலமாக சினிமாவில் இருந்து அரசியலுக்கு வந்த நடிகர்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கும் நிலையில் ரவி மோகனின் ரசிகர் சந்திப்பு இப்போது அரசியல் பார்வைக்கு உள்ளாகி இருக்கிறது. ரவி மோகன் தனது ரசிகர்களை சந்தித்த நிகழ்ச்சியில் ரசிகர் மன்ற நிர்வாகி ஒருவர் மேடையில் பேசிய வீடியோ சோசியல் மீடியாவில் கவனம் பெற்று வருகிறது.
அதில் அவர் மிகவும் ஆக்ரோஷமாக, அண்ணா குரல் கொடுங்கள்.. தமிழகத்தில் இருந்து அலையாய் வருவோம். கொடியை கொடுங்கள்.. உங்கள் ரசிகர்கள் கோட்டையை பிடிப்போம்! என்று அவர் பேசி இருக்கிறார். ரசிகர் மன்ற நிர்வாகியின் இந்த பேச்சுதான் இப்போ அரசியல் வட்டாரத்திலும் சினிமா ரசிகர்கள் மத்தியில் விவாதமாகி இருக்கிறது. ஆனால் இதற்கு ரவி மோகன் கொடுத்த பதில் இன்னும் சுவாரசியமானது.
நடிகர் ரவி மோகன் பேச்சு
ரசிகர்களை சந்திக்கும் நடிகர்களை உடனே அரசியலுடன் இணைத்து பார்க்கும் வழக்கம் வந்துவிட்டது. நடிகர்கள் ரசிகர்களை சந்தித்தாலே அது அரசியலாக பார்க்கிறார்கள். தற்போது நான் சினிமாவில் மட்டும்தான் இருக்கிறேன். நல்லது செய்ய வேண்டும் என்றால் அரசியலுக்கு வந்து தான் செய்ய வேண்டும் என்று அவசியம் இல்லை. பதவி இருந்தால் தான் நல்லது செய்ய முடியும் என்பதும் கிடையாது. தேவைப்பட்டால் அதை எடுத்துக் கொண்டும் செய்யலாம் என்று அவர் பேசி இருக்கிறார்.
அதாவது அரசியலுக்கு வருகிறேன் என்று சொல்லவில்லை, வரமாட்டேன் என்றும் சொல்லவில்லை. நல்லது செய்வதற்கு அரசியலுக்கு மட்டுமே வழி கிடையாது என்பதைத்தான் ரவி மோகன் தெளிவுபடுத்திருக்கிறார். இதே கருத்தை ஆகஸ்ட் மாதம் ரசிகர் மன்ற நிர்வாகிகள் திருமண நிகழ்ச்சியில் செய்தியாளர்களிடம் பேசும் போதும் தெரிவித்து இருந்தார். இதனால் ரவிமோகனின் அரசியல் என்ட்ரி குறித்த பேச்சு மீண்டும் சூடு பிடித்திருக்கிறது. இந்த சந்திப்பில் அரசியல் பேச்சை தாண்டி ரவி மோகன் சொன்ன இன்னொரு விஷயம் கவனம் பெற்று இருக்கிறது. வாழ்க்கையில் தோல்விகள் தான் நிறைய விஷயங்களை கற்றுக் கொடுக்கும் அதனால் ரிஸ்க் எடுக்க தயங்க கூடாது என்று ரசிகர்களிடம் சொல்லி இருக்கிறார். சமீப காலமாக அவருடைய தனிப்பட்ட வாழ்க்கையில் பல சர்ச்சைகள் வந்து கொண்டே இருக்கிறது. ஆனால் அதையெல்லாம் தள்ளி வைத்துக் கொண்டு இப்போது இவர் ரசிகர்களை சந்திக்க தொடங்கி இருக்கிறார். நடிகர் ரவி மோகனுக்கு ரசிகர் மன்றம் ஒன்றும் இப்போது உருவானது கிடையாது. அவரது முதல் படமான ஜெயம் காலகட்டத்தில் இருந்து தனக்கு ரசிகர் மன்றம் இருப்பதாக ரவி மோகன் தெரிவித்துள்ளார். நான் சின்ன பசங்களாக பார்த்தவர்களுக்கு இப்போது பசங்க இருக்கிறார்கள் என்று ரசிகர்களுடன் நீண்ட கால உறவை நினைவு கூர்ந்து பேசி இருக்கிறார். ரசிகர்களின் குடும்ப நிகழ்ச்சிகளில் எல்லாம் நேரில் கலந்து கொள்ள முடியாமல் போனதற்கு வருத்தம் தெரிவித்த அவர் இனிமேல் ரசிகர் மன்ற நிர்வாகிகளின் சுப நிகழ்ச்சிகளில் முடிந்தவரை கலந்து கொள்வேன் என்றும், தனது பிறந்த நாளை முன்னிட்டு ரசிகர்களை குடும்பத்துடன் சந்திக்க வேண்டும் என்பதற்காகவே இந்த சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டதாகவும் கூறி இருக்கிறார். ஏற்கனவே சினிமாவில் இருந்து அரசியலுக்கு வருபவர்களின் லிஸ்ட் பெருசாகிக்கொண்டே போகிறது. ஆனால் இப்போ ரவி மோகனின் செயல்பாடுகளை பார்க்கும் போது அடுத்தது நானும் இருக்கிறேன் என்று சொல்வது போலத்தான் இருக்கிறது. சரி என்ன நடக்கப்போகிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்.ரசிகர் மன்ற நிர்வாகி பேச்சு
ரவி மோகனின் ரசிகர் மன்றம்
ரசிகர்களுடன் சந்திப்பு