மும்பையில் 1000 கோடி பங்களா.. வாரிசு இல்லாத தனிமை! பாலிவுட் ராணி ரேகா சொத்துக்கு சொந்தக்காரர் யார்


  • சென்னை: இந்தி நடிகை ரேகா, 1990ம் ஆண்டு முகேஷ் அகர்வால் என்ற மும்பையைச் சேர்ந்த பிரபல தொழிலதிபரை திருமணம் செய்தார். ஆனால், 7 மாதங்களில் கருத்து வேறுபாடுகள் வெடித்தன. ஒரு கட்டத்தில் முகேஷ் அகர்வால், ரேகாவின் துப்பட்டாவை பயன்படுத்தி தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவத்துக்கு பிறகு, ரேகா மீது நிறைய பழிகள் சுமத்தப்பட்டன. வில்லி, சூனியக்காரி, ராட்சசி என்றெல்லாம் ஊடகங்கள் சித்தரித்தன" என்று பிரபல தயாரிப்பாளர் பாலாஜி பிரபு தெரிவித்துள்ளார்.

    Advertisement

    aramnaadu சேனலுக்கு பேட்டி தந்துள்ள தயாரிப்பாளர் பாலாஜி பிரபு, "பாலிவுட் கொடிகட்டிப் பறந்த பழம்பெரும் நடிகை ரேகாவின் உண்மையான பெயர் பானுரேகா கணேசன் ஆகும். இவர் ஜெமினி கணேசனின் மகள்.. ஆனால், இவருடைய ஆரம்பகால வாழ்க்கை பல்வேறு மனவேதனைகளும் சவால்களும் நிறைந்ததாகவே இருந்தது.

    Advertisement

    ஜெமினி கணேசன் அம்சவல்லி மகள் ரேகா

    ஜெமினி கணேசனுக்கு மொத்தம் 4 மனைவிகள் என்று கூறப்படும் நிலையில், அம்சவல்லிக்கு மட்டும் முறையான அங்கீகாரம் வழங்கவில்லை. இதனால், பள்ளியில் சேர்ப்பது முதல் முதல் ஆரம்பகால சினிமா அடையாள சான்றுகள் வரை எதிலுமே தன்னுடைய அப்பாவின் பெயரை சேர்ப்பதில் ரேகாவுக்குப் பல சிக்கல்களும் மனவருத்தங்களும் ஏற்பட்டன.

    ஒரு பேட்டியில் அப்பாவை பற்றி கேட்டதற்கு, "அவரை பற்றி பேசவே நான் விரும்பவில்லை" என்றார் ரேகா.. அந்த அளவிற்குத் தனது அம்மாவுக்கு அநீதி இழைக்கப்பட்டதால் அப்பா மீது அவருக்குக் கோபமும் வருத்தமும் இருந்தது.

    Advertisement

    ஒரு கட்டத்தில் அம்சவல்லியின் சினிமா வாய்ப்புகள் சரிந்து, குடும்பம் கடுமையான கடன் சுமைக்கு ஆளானது. இதனால் குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டிய கட்டாயத்தில் ரேகா தனது 12ம் வயதிலேயே ஒரு தெலுங்குத் படத்தில் குழந்தை நட்சத்திரத்தில் நடிக்க தொடங்கினார். தமிழ். தெலுங்கில் போதிய வாய்ப்புகள் கிடைக்காததால், ரேகா மும்பைக்கு சென்றார்.

    பிரவுன் டோன்

    ஆனால் மும்பையில் ரேகாவுக்கு பல அவமானங்கள் காத்திருந்தன. அன்றைய பாலிவுட் நடிகைகள் எல்லாரும் சிவப்பாக இருந்தனர். தென்னிந்திய நிறம் அதாவது பிரவுன் டோன் கொண்டிருந்த ரேகாவின் நிறத்தைக் குறித்துப் பல விமர்சனங்கள் எழுந்தன. அதுமட்டுமல்லாமல் அவருக்கு ஆரம்பத்தில் இந்தி பேசத் தெரியாது.. அதனால் இந்தி மொழியைக் கற்றுக்கொண்டு, அதன்பிறகு முன்னணி நட்சத்திரமாக உயர்ந்தார்.

    Advertisement

    பாலிவுட்டில் அவரது கால்ஷீட்டிற்காக தயாரிப்பாளர்கள் வரிசையில் நின்றனர். நடிகை ஸ்ரீதேவி போன்றவர்கள் பாலிவுட்டிற்கு செல்வதற்கு முன்பே, ரேகா அங்கு அசைக்க முடியாத உச்ச நட்சத்திரமாகத் திகழ்ந்தார்.

    செருப்பை எடுத்து தந்த ஷாருக்கான்

    பாலிவுட்டில் ரேகாவுக்கு இன்றும் பெரிய மரியாதை உள்ளது. சமீபத்தில் ஒரு சினிமா விழாவில் ஷாருக்கானும் ரேகாவும் மேடை ஏறும்போது, ரேகாவின் செருப்பு கழன்றுவிட்டது.. உடனே பாலிவுட்டின் முன்னணி சூப்பர் ஸ்டாரான ஷாருக்கான் கீழே குனிந்து அந்த செருப்பை எடுத்து ரேகாவுக்கு மாட்டி விட்டார்.

    ஷாருக்கான், சல்மான் கான் போன்றவர்கள் ரேகாவை பார்த்து வளர்ந்த தலைமுறையினர் ஆவர். சல்மான் கான் தன்னுடைய சின்ன வயதில், அதிகாலையில் ரேகா உடற்பயிற்சி செய்வதை தன் வீட்டு ஜன்னல் வழியே பார்ப்பாராம்..

    Advertisement

    பரவிய காதல் கிசுகிசு

    அமிதாப் பச்சனுக்கும் ரேகாவுக்குமான காதல் பாலிவுட்டில் அப்போது பரபரப்பாக பேசப்பட்டது. அதாவது அமிதாப் பச்சனுக்கு கல்யாணமாகியும், ரேகாவுடன் அவர் தொடர்பில் இருப்பதாக கிசுகிசுக்கப்பட்டது. |

    1990ம் ஆண்டு முகேஷ் அகர்வால் என்ற மும்பையைச் சேர்ந்த பிரபல தொழிலதிபரை ரேகா திருமணம் செய்தார். ஆனால், 7 மாதங்களில் கருத்து வேறுபாடுகள் வெடித்தன. ஒரு கட்டத்தில் முகேஷ் அகர்வால், ரேகாவின் துப்பட்டாவை பயன்படுத்தி தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவத்துக்கு பிறகு, ரேகா மீது நிறைய பழிகள் சுமத்தப்பட்டன. வில்லி, சூனியக்காரி, ராட்சசி என்றெல்லாம் ஊடகங்கள் சித்தரித்தன. இதிலிருந்து மீண்டு வர அவருக்குப் பல ஆண்டுகள் ஆயின.

    Advertisement

    ரேகாவின் சொத்து மதிப்பு

    ரேகாவின் சொத்து மதிப்பு சுமார் 500 முதல் 1000 கோடி ரூபாய் வரை இருக்கும் என்கிறார்கள்.. மும்பையின் பேண்ட்ஸ்டாண்ட் பகுதியில் ஒரு பிரம்மாண்ட பங்களாவில் அவர் வசித்து வருகிறார். இதைத்தவிர இந்தியா முழுவதும் பல மலைப்பிரதேசங்களில் கெஸ்ட் ஹவுஸ்களும், துபாயில் ஒரு ஆடம்பர வீடும், பல சொகுசு கார்களும் உள்ளன. கணவரின் மறைவிற்கு பிறகு ரேகா மறுமணம் செய்யவில்லை.. அவருக்கு வாரிசுகளும் இல்லை.

    1000 கோடி யாருக்கு

    வாரிசுகள் இல்லாததால், ரேகா தனது 1000 கோடி மதிப்பிலான சொத்துக்களைத் தான் நடத்தி வரும் அறக்கட்டளைக்கு உயில் எழுதி வைப்பார் என்றும், அதில் ஒரு பகுதியைத் தன்னை நிழல் போல பார்த்துக்கொள்ளும் தோழி ஃபர்சானாவிற்கு வழங்குவார் என்றும் மும்பை ஊடகங்கள் சொல்கின்றன.. . இந்த அறக்கட்டளை மூலம் ஆதரவற்ற குழந்தைகளின் கல்வி, மருத்துவ செலவுகளுக்காக ரேகா ஏற்கனவே பல உதவிகளை செய்து வருகிறார்

    ரேகாவுக்குப் புற்றுநோய் போன்ற கொடிய நோய் இருப்பதாக ஒரு காலத்தில் வதந்திகள் பரவின. ஆனால், அவை முற்றிலும் உண்மையற்றவை. தற்போது 70 வயதைக் கடந்த நிலையிலும், அவர் மிகுந்த ஆரோக்கியத்துடன் இருக்கிறார். மகிழ்ச்சியான, நிம்மதியான வாழ்க்கையை அவர் வாழ்ந்து வருகிறார்" என்றெல்லாம் தெரிவித்துள்ளார்.

    English Summary

    Producer Balaji Prabhu sheds light on the tumultuous journey of legendary actress Rekha. From overcoming childhood abandonment and systemic racism in Bollywood to dealing with marriage tragedy and building a 1000-crore empire, this narrative uncovers the resilience of an icon who rose above immense personal pain to claim her place in cinema history.