கே பாலச்சந்தரின் பேரன் நான் என்பதை சொல்ல விரும்பல.. காரணம் இதுதான்! ரிசார்ட் சீரிஸ் நடிகர் ஓபன்

  • சென்னை: தமிழ் சினிமாவில் "நெப்போட்டிசம்" என்ற பேச்சு எப்போதுமே ஓய்ந்ததே இல்லை. சினிமா குடும்பத்தில் பிறந்தவர்களுக்கு வாய்ப்பு எளிதாக கிடைக்கிறது என்று சிலர் குறை சொல்கிறார்கள். அதே நேரத்தில், அந்த குடும்பத்தின் பெயருக்கு ஏற்ற மாதிரி ஒவ்வொரு படத்திலும் தங்களை நிரூபிக்க வேண்டிய அழுத்தம் அவர்களுக்குத்தான் அதிகம் என்று அதனால் பாதிக்கப்படுபவர்கள் சொல்கிறார்கள்.

    Advertisement

    இயக்குனர் கே பாலச்சந்தர் பேரன்

    இந்த பஞ்சாயத்து ஒரு பக்கம் இருக்க இப்போது கே. பாலச்சந்தரின் பேரன் சமீபத்தில் அளித்த பேட்டி இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது ஜியோ ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகி வரும் 'ரிசார்ட்' வெப் சீரிஸில் விக்கி கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருபவர் தான்விஷ்ணு பாலா. அவருடைய நடிப்பை பார்த்து பலரும் திட்டியும் பாராட்டியும் வந்த நிலையில், இவர் இயக்குநர் இமயம் கே. பாலச்சந்தரின் பேரன் என்பது இப்போதுதான் பலருக்கும் தெரிய வந்திருக்கிறது.

    Advertisement

    ரெசார்ட் வெப் சீரிஸ் நடிகர்

    சமீபத்தில் ஒரு பேட்டியில் இதுபற்றி கேட்டபோது, "நான் கே.பாலச்சந்தர் பேரன் என்று சொல்லிக்கிட்டு சினிமாவுக்கு வர விரும்பல. அந்த பெயரை பயன்படுத்தினா எனக்கே ஒரு பிரஷர் வந்துடும். என்னை என் திறமையை பார்த்துதான் ஏற்றுக்கணும். அதுதான் என் ஆசை" என்று சொல்கிறார்.

    இந்த ஒரு பதில்தான் இப்போது சமூக வலைதளங்களில் அதிகமாக பேசப்பட்டு வருகிறது. அதே பேட்டியில் ரிசார்ட் சீரிஸில் நடித்த அனுபவம் பற்றியும் மனம் திறந்து பேசுகிறார். "அந்த சீரிஸை பார்த்துவிட்டு என்னை நிறைய பேர் திட்டுறாங்க. ஆனா அதுல எனக்கு வருத்தமே இல்லை. மக்கள் அந்த கதாபாத்திரத்தை வெறுக்கிறாங்கன்னா, நான் நடித்தது அவர்களுக்கு நம்பிக்கை கொடுத்திருக்கு என்பதுதான் அர்த்தம்" என்று சிரித்தபடியே சொல்கிறார்.

    Advertisement

    படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பு பத்து நாட்கள் ஆக்டிங் ஒர்க்ஷாப்பில் கலந்து கொண்டது, தலைவாசல் விஜய்யுடன் நடித்த அனுபவம், சமையல் காட்சிகளுக்காக எடுத்த பயிற்சி என பல விஷயங்களையும் அந்த பேட்டியில் சொல்கிறார்.

    இந்த பேட்டி வெளியான பிறகுதான், "அட... இவ்வளவு நாள் ரிசார்ட் பார்த்துட்டு இருந்தோம். இவர் கே.பாலச்சந்தர் பேரன்னு இப்போதான் தெரியுது" என்று ரசிகர்கள் ஆச்சரியமாக கமெண்ட் போட்டு வருகிறார்கள்.

    ரசிகர்கள் கருத்து

    இதோடு நெப்போட்டிசம் பற்றிய விவாதமும் மீண்டும் சூடு பிடித்திருக்கிறது. "பலர் சினிமா குடும்பத்தின் பெயரை முதல் நாளே முன்னிலைப்படுத்தி வாய்ப்பு வாங்குகிறார்கள். ஆனால், கே.பாலச்சந்தர் மாதிரி ஒரு ஜாம்பவானின் பேரனாக இருந்தும் அதை வெளியே சொல்லாமல் நடித்திருக்கிறார் என்றால் அது பாராட்ட வேண்டிய விஷயம்" என்று ரசிகர்கள் சொல்கிறார்கள்.

    Advertisement

    இன்னும் சிலர், "சினிமா குடும்பத்தில் பிறந்தவர்களுக்கு கதவு திறப்பது உண்மைதான். ஆனால் அந்த கதவுக்குள் நின்று நிலைத்து நிற்பது திறமையால்தான் முடியும். விஷ்ணுவும் அதைத்தான் செய்ய நினைக்கிறார்" என்று கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

    ரெசார்ட் வெப் சீரிஸ் பிரச்சனை.. நடந்தது இதுதான்! நடிகை அனுகிரஹா பற்றி எருமை சாணி விஜய் ஆதங்கம்
    ஆனால் அந்த எல்லா விவாதங்களுக்கும் நடுவே, "என் தாத்தா பெயர் வேண்டாம்... என் திறமைதான் எனக்கு அடையாளம்" என்று விஷ்ணு பாலா சொன்ன ஒரு வரி மட்டும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. ரிசார்ட் சீரிஸில் வில்லனாக ரசிகர்களை கோபப்படுத்திய விஷ்ணு, நிஜ வாழ்க்கையில் சொன்ன இந்த பதிலால் பலரது மரியாதையையும் சம்பாதித்திருக்கிறார்.

    English Summary

    Resort Web Series Actor Vishnu: Resort web series actor Vishnu Bala has surprised fans by revealing that he is the grandson of legendary filmmaker K. Balachander. Speaking in a recent interview, Vishnu said he deliberately chose not to use his grandfather's name because he wanted to build his career through his own talent rather than family recognition.