சட்டப்பேரவையில் விஜயின் பேச்சுக்கு பிறகு எஸ்.ஏ.சி போட்ட பதிவு.. மகனை நேரில் சந்தித்து நெகிழ்ச்சி

  • சென்னை: ஒரு அப்பா தன்னுடைய மகனை சந்திப்பது ஒன்றும் புதுசு கிடையாது. ஆனால் அந்த மகன் இன்று இருக்கும் இடத்தையும் அவர் கடந்து வந்த பாதையும் வைத்து பார்த்தால் இந்த சந்திப்பு எஸ்ஏ சந்திரசேகருக்கு நிச்சயம் வேற லெவல் பெருமையான தருணமாகத்தான் இருந்திருக்கும். அதைத்தான் அவருடைய லேட்டஸ்ட் சமூக வலைத்தள பதிவு காட்டுகிறது.

    Advertisement

    சட்டப்பேரவையில் இன்று தமிழகம் முதல்வர் விஜய் பேசிய விதம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது. காவல்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்திற்கு பதில் அளித்த விஜய் எதிர்க்கட்சியினர் கேட்ட பல கேள்விகளுக்கு இன்று விளக்கம் கொடுக்கிறேன் என பழைய விஷயங்களை எல்லாம் பேசி கடுமையாக விமர்சித்து இருந்தார். சுமார் 40 நிமிடங்கள் நீண்ட அவரது உரையில் சட்டம், ஒழுங்கு, ஊழல் உள்ளிட்ட பல விஷயங்களை முன் வைத்து பேசியிருந்தார்.

    Advertisement

    சட்டப்பேரவை சம்பவம்

    இதனால் சட்டப்பேரவையில் ஒரு கட்டத்தில் பரபரப்பானது. விஜய்யின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டு பின்னர் வெளிநடப்பு செய்தனர். இப்படி ஒரு பரபரப்பான நாளில் விஜயை நேரில் சந்தித்திருக்கிறார் அவருடைய தந்தை எஸ் ஏ சந்திரசேகர். அந்த சந்திப்பின்போது எடுத்த புகைப்படங்களை தன்னுடைய சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்திருக்கும் எஸ்.ஏ. சந்திரசேகர் அதனுடன் உணர்வுபூர்வமான ஒரு வரிகளையும் பகிர்ந்து இருக்கிறார்கள்.

    எஸ்ஏ சந்திரசேகர் பதிவு

    அதில், "எத்தனை அழுத்தங்கள் இருந்தாலும் அதை எளிதாக கையாளும் முதல்வரை சந்தித்தது.. ஒரு தந்தையாக பெருமைப்பட்ட நேரம்" என்று அந்த பதிவிலீ அவர் கூறியிருக்கிறார். அதற்குப் பகிர்ந்திருக்கும் புகைப்படத்தை பார்த்தால் அந்த தருணம் எப்படி இருந்திருக்கும் என்பது தெரிகிறது. விஜயை நடுவில் நிற்க அவரது தந்தை எஸ்ஏ சந்திரசேகர் அருகில் இருக்கிறார். மற்றொரு போட்டோவில் விஜயின் அப்பாவும் அம்மாவும் விஜய் பக்கத்தில் நின்று கொண்டிருக்கிறார்கள்.

    Advertisement

    இன்று சட்டப்பேரவையில் தனது மகன் எதிர்க்கட்சியை எதிர்கொண்டு அழுத்தமான அரசியல் சூழலுக்கு நடுவில் நீண்ட நேரம் பேசி இருக்கிறார். அந்த நாளின் நானும் என்னுடைய மகனை சாதாரண ஒரு மனிதனைப் போலவே போய் பார்த்திருக்கிறேன் என்று சொல்லாமல் சொல்கிறாரா? இவர் என்று இந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

    ரசிகர்கள் கருத்து

    பொதுவாக மகனை சந்திப்பது எல்லா அப்பாக்களுக்கும் சந்தோஷம்தான். ஆனால் தான் வளர்த்த மகன் என்று ஒரு மாநிலத்தின் முதல்வராக சட்டப்பேரவையில் நின்று பேசுவதை பார்த்துவிட்டு சந்திப்பது அந்த சந்தோஷத்துக்கு வேறு அர்த்தம் இருக்க தானே செய்யும் என்று ரசிகர்களும் இந்த போட்டோவை ட்ரெண்ட் செய்கிறார்கள்.

    English Summary

    A father meeting his son is nothing new. However, considering the position his son holds today and the journey he has traversed, this meeting must have been a moment of immense pride for S.A. Chandrashekhar—truly a 'next-level' experience. His latest social media post reflects exactly that.