சென்னை: "விஜய்யின் பெற்றோரே எந்த கவலையும் இல்லாமல் இயல்பாக இருக்கும் சூழலில், நாம் கவலைப்படுவதில் அர்த்தமில்லை.. சங்கீதா மற்றும் அவரது பிள்ளைகளுக்காக பரிதாபப்படுவதை தவிர நம்மால் வேறு எதுவும் செய்ய முடியாது என்று மூத்த பத்திரிகையாளர் சேகுவேரா கருத்து தெரிவித்துள்ளார்.
Mancholai என்ற சேனலில் பேசியிருக்கும் சேகுவேரா, "சுதந்திர தின விழாவில் முதலமைச்சர் மற்றும் அவரது குடும்பத்தினரின் வருகை தொடர்பாக மீடியாக்களிலும் பொதுமக்களிடையேயும் விவாதங்கள் எழுந்துள்ளன.
சுதந்திர தின விழாவில் முதலமைச்சருடன் அவரது அம்மா, அப்பா மட்டுமே பங்கேற்றுள்ளனர். அதேசமயம், நடிகை திரிஷாவும் அவரது அம்மாவும் கலந்து கொண்டுள்ளனர். முதலமைச்சரின் மனைவி மற்றும் பிள்ளைகள் ஏன் வரவில்லை, மாறாகத் த்ரிஷா ஏன் வந்திருக்கிறார் என்று பலரும் கேள்வி எழுப்புகிறார்கள்.. குடும்பத்தினர் அனைவரும் ஒன்றாக இணைந்து நிகழ்வுகளில் பங்கேற்பார்கள் என்ற நேர்மறையான எதிர்பார்ப்பு அனைவருக்கும் இருந்தது. ஆனால், எதிர்பாராத விதமாக இத்தகைய சூழல் அமைந்திருப்பது அதிர்ச்சியை அளிக்கிறது. எனினும், பிறருடைய குடும்பத்தின் தனிப்பட்ட விவகாரங்களில் பேசுவதற்கு ஒரு குறிப்பிட்ட எல்லை உள்ளது. அதைத் தாண்டி நம்மால் தலையிட முடியாது. முதலமைச்சருக்கும் நமக்கும் எந்தவித ரத்த உறவும் கிடையாது; நாம் சாதாரணக் குடிமக்கள் மட்டுமே. ஆனால், சம்பந்தப்பட்டவர்களே இதைத் தங்கள் சொந்தக் குடும்ப விஷயமாகக் கருதி, சுட்டிக்காட்டும் தவறுகளை தொடர்ந்து செய்யும்போது, நாம் அவர்களின் தனிப்பட்ட விவகாரங்களில் இருந்து விலகி நிற்பதே சரியானது. சுதந்திர தின நிகழ்ச்சியில் வரவேற்பதே திரிஷாதான்.. எஸ்ஏசி, ஷோபாவின் முகத்தில் மகிழ்ச்சி காணப்படுகிறது.. கடுகளவும் அந்த சந்தோஷம் குறையவேயில்லை.. இதுல நாம எதுக்காக மண்டையை போட்டு உடைத்து கொள்ள வேண்டும். சமீபத்தில் ஜேசன் சஞ்சய் ஒரு நேர்காணலில், "எங்கள் அப்பா எங்களுக்கு பெரிய கவுரவத்தை கொடுத்திருக்கிறார், அதை நானும் என் அம்மாவும் பாதுகாப்போம்' என்று சொல்லியிருப்பது அவரது பக்குவத்தை காட்டுகிறது. ஒரு தந்தையாக விஜய் குடும்ப கவுரவத்தைக் காப்பாற்றத் தவறிய சூழலிலும், மகனாக சஞ்சய் இவ்வாறு பேசியிருப்பது அவரது மிகுந்த முதிர்ச்சியையும் பக்குவத்தையும் காட்டுகிறது. அதேசமயம், இத்தகைய சூழலால் வேற்று மாநிலத்தவர்களும் வெளிநாட்டவர்களும் இதை கேலியாக பார்க்கும் நிலை ஏற்படுகிறது. பொதுமக்களும் இணையத்தில் கடுமையான கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர். ஜெயலலிதா உயிருடன் இருந்தவரை வராத உறவினர்கள், அவர் இறந்த பிறகு சொத்துகளை அனுபவிக்க மட்டுமே வந்தார்கள்.. ஜார்ஜ் பெர்னாண்டஸ் கோமாவில் படுக்கையாக இருந்தபோதும், கன்ஷிராம் மாயாவதியின் பிடியில் இருந்தபோதும் அவர்களது சொந்தக் குடும்பத்தினரோ, பிள்ளைகளோ அருகில் வர முடியாமலேயே போய்விட்டது. இத்தகைய வரலாற்றுப் பாடங்கள் நமக்கு முன்னால் இருக்கும் சூழலில், விஜய்யின் பெற்றோர், முன்னின்று பிரிந்த குடும்பத்தை மீண்டும் சேர்த்து வைத்து விடுவார்கள், மனைவி, குழந்தைகளுடன் அனைவரும் சுதந்திர தின விழாவில் ஒன்றாகவே பங்கேற்பார்கள் என்றுதான் எல்லாருமே எதிர்பார்த்தார்கள். ஆனால் பெற்றோரே எந்த கவலையும் இல்லாமல் இயல்பாக இருக்கும் சூழலில், நாம் கவலைப்படுவதில் அர்த்தமில்லை.. சங்கீதா மற்றும் அவரது பிள்ளைகளுக்காக பரிதாபப்படுவதைத் தவிர நம்மால் வேறு எதுவும் செய்ய முடியாது. பொதுமக்களும் ரசிகர்களும் அடுத்தவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி சிந்திப்பதை தவிர்த்து, அவரவர் சொந்த குடும்பத்தைக் கவனிப்பதே நல்லது. ஒரு சகோதரனாக அவர்கள் குடும்பம் ஒன்றுபட வேண்டும் என்றே நானும் விரும்பினேன். அது நடக்காத பட்சத்தில், இந்த விவகாரத்தை முழுமையாக புறக்கணித்துவிட்டு அடுத்த கட்டத்திற்கு செல்வதே இறுதியான முடிவாகும்" என்றெல்லாம் தெரிவித்துள்ளார்.திரிஷா, அம்மா பங்கேற்பு
எஸ்ஏசி, ஷோபாவின் முகத்தில் மகிழ்ச்சி
ஜெயலலிதா, கன்ஷிராம்