லட்சுமி மேனனின் திடீர் மாற்றம்.. நடிகர், நடிகைகள் மீது விமர்சனம்! சட்டையை கழட்டிய சல்மான்கான்! சரியான பாடம்

  • சென்னை: பிக் பாஸ் 20 நிகழ்ச்சியில் நடிகர் சல்மான்கான் சட்டையை கழட்டிய விஷயம்தான் சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. இது பலருக்கு பாடம். சமீப காலமாகவே பல நடிகைகள், நடிகர்களில் உடல் மாற்றங்கள் குறித்து அதிகமான விமர்சனங்கள் வருகிறது. அதற்கெல்லாம் பதிலடி கொடுக்கிற மாதிரி தான் சல்மான்கான் இப்போது சட்டையை கழட்டி தன்னுடைய அதிருப்தியை தெரிவித்து இருக்கிறார்.

    Advertisement

    சமீபத்தில் நடிகை லட்சுமிமேனன் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அந்த புகைப்படங்களை பார்த்ததும் ரசிகர்கள் அதிர்ச்சியானார்கள். ஒரு சிலர் உண்மையில் அவருக்கு என்ன ஆனதோ? என்று பரிதாபத்துடன் கேட்டாலும், இன்னும் ஒரு சிலர் அவர் போதைப் பொருளுக்கு அடிமையாகி விட்டார், அதனால் தான் அவர் உடல் எடை கூடிவிட்டது. அவர் ஹார்மோன் இன்ஜெக்ஷன் எடுத்ததால் அவருடைய உடல் இப்படி மாறிவிட்டது என்றெல்லாம் கண்டமேனிக்கு வசைப்பாடி வந்தார்கள்.

    Advertisement

    ட்ரோலில் சிக்கிய நடிகைகள்

    அதேபோல நடிகை கத்ரீனா கைஃப் குழந்தை பிறப்புக்கு பிறகு உடல் எடை கூடியிருந்தார். அவர் குறித்தும் சோசியல் மீடியாவில் அதிகமான விமர்சனங்கள் எழுந்தது. எப்படி இருந்த இவர் இப்படி மாறிவிட்டாரே? என்று ஒரு சிலர் சொல்லி வந்தாலும் இன்னும் ஒரு சிலர் இவர் உடல் எடை கூறிவிட்டார் இனி இவருடைய மார்க்கெட் அவ்வளவுதான், வீட்டில் உட்கார்ந்து நல்லா சாப்பாடு போல என்றெல்லாம் கிண்டல் செய்ய தொடங்கி விட்டார்கள்.

    சட்டையை கழட்டிய சல்மான் கான்

    இதற்கெல்லாம் பதிலடி கொடுக்கிற மாதிரிதான் சல்மான்கான் இப்போது பிக் பாஸ் நிகழ்ச்சியில் சட்டையை கழட்டி தனது வழக்கமான பதிலடி கொடுத்திருக்கிறார். எப்போதுமே இதுபோலத்தான் அவர் திடீரென நிகழ்ச்சிகளில் ஏதாவது ஒரு வித்தியாசமான செயலை செய்து விடுவார். அதுபோல இப்போது அவர் சட்டையை கழட்டிவிட்டு, முதலில் அடுத்தவங்களை பற்றி பேசுவதற்கு முன்னாடி கண்ணாடியில் உங்களுடைய முகத்தை பாருங்க. நீங்க எப்படி இருக்கீங்க? என்று யோசிங்க.

    Advertisement

    உங்களுடைய பெற்றோரை கவனிங்க. உங்களுடைய குடும்பத்தை கவனிங்க. உங்களை கவனிச்சுக்கோங்க. அதை விட்டுவிட்டு அடுத்த நடிகைகள் எப்படி இருக்கிறாங்க? நடிகர்கள் எப்படி இருக்கிறாங்க? என்று நீங்கள் யோசிக்காதீங்க. அதைப்பற்றி மோசமாக ட்ரோல் பண்ணாதீங்க. ஒரு பெண் குழந்தை பெற்ற பிறகு அவருடைய உடலில் பல மாற்றங்கள் ஏற்படும் அது இயல்பானது. ஏன் உங்க வீட்டில் இருக்கிற பெண்களுக்கும் அதே மாற்றம் ஏற்படும்.

    பலர் சந்திக்கும் கேள்விகள்

    அடுத்தவங்க இண்டஸ்ட்ரியில் நடிப்பவர்களின் படத்தை நீங்கள் பணம் செலுத்தி கொடுத்து பார்க்கிறீர்கள் என்பதற்காக இவ்வளவு மோசமாக பேச வேண்டிய அவசியம் இல்லை என்று கடுமையாக திட்டி இருந்தார். இந்த வீடியோக்கள் சோசியல் மீடியாவில் வைரல் ஆகி இது பலருக்கு பாடம் என்று ரசிகர்கள் கருத்து கூறி வருகிறார்கள். பொதுவாக நமக்கு தெரிந்தவர்களை நேரில் பார்க்கும்போது எப்படி இருக்கிறாய் என்று விசாரித்தால் ஓகே. ஏன் உடல் எடை குறைந்து இருக்கு? ஏன் கூடி இருக்கு? ஏன் கருப்பாகி விட்டாய்? எதனால் முடி கொட்டி விட்டது? என்று ஏகப்பட்ட கேள்விகளை பலர் சந்திக்கிறார்கள்.

    Advertisement

    இது பலருக்கு பாடம்

    இதனால் அடுத்தவர்களுக்கு மன வருத்தம் ஏற்படுமே என்று துளியும் நினைப்பதில்லை. நமக்கு வந்தால் ரத்தம் அடுத்தவங்களுக்கு வந்த தக்காளி சட்னி என்பது போலத்தான் சிலர் அடுத்தவர்களை கேள்விகளாலேயே துளைத்தெடுப்பதை பார்க்க முடிகிறது. நமக்கு பிடித்தவர்கள் உடல் எடை கூடி விட்டார்கள், அல்லது குறைந்து விட்டார்கள் என்றால் அக்கறையில் கேட்பவர்கள் ஒரு சிலர் மட்டும்தான்.

    சிலர் கதை பேசுவதற்காகவே கேட்கிறார்கள். இதற்கெல்லாம் தான் இப்போது சல்மான் கான் பதிலடி கொடுத்திருக்கிறார். இதற்கு முன்பு சல்மான் கான் சில நிகழ்ச்சிகளில் செய்யும் செயல்கள் ட்ரோல் செய்யப்பட்டிருக்கிறது. ஆனால் இப்போது அவர் பேசிய விஷயம் பலராலும் பாராட்டப்படுகிறது.

    English Summary

    Salman Khan: The incident where actor Salman Khan took off his shirt on the *Bigg Boss 20* show has gone viral on social media. This serves as a lesson for many. In recent times, there has been a great deal of criticism regarding the physical transformations of various actors and actresses. By removing his shirt now, Salman Khan has effectively hit back at such criticism and expressed his displeasure.