கதறி அழுத சமந்தா.. கர்ப்பமாக இருக்கும் சமயத்தில் என்ன ஆச்சு? ரசிகர்களை பதற வைத்த பதிவு

  • சென்னை: கர்ப்ப காலம் என்பது ஒவ்வொரு பெண்ணின் வாழ்க்கையில் மிகவும் எமோஷனலான கட்டமாக இருக்கிறது. அந்த நேரத்தில் மகிழ்ச்சியாகவும் மன அமைதியுடனே இருக்க வேண்டும் என்பதை அனைவரின் விருப்பம். இப்படிப்பட்ட சூழலில் நடிகை சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த ஒரு வீடியோ ரசிகர்களை கவலையிலும் குழப்பத்திலும் ஆழ்த்தி இருக்கிறது.

    Advertisement

    நடிகை சமந்தா பதிவு

    சோசியல் மீடியாவில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் சமந்தா ஆகஸ்ட் எனர்ஜி என்ற கேப்ஷன் உடன் நண்பர்களுடன் எடுத்த புகைப்படங்கள், செல்ஃபிகள், கர்ப்பமாக இருக்கும் போது எடுத்த ஒர்க்கவுட் வீடியோக்கள் உள்ளிட்ட பல தருணங்களை பகிர்ந்திருக்கிறார். ஆனால் அந்த பதிவில் இடம் பெற்றிருந்த ஒரு சின்ன வீடியோ தான் தற்போது இணைய முழுவதும் பேசப்படும் விஷயமாக மாறி இருக்கிறது.

    Advertisement

    கதறி அழுத சமந்தா

    அந்த வீடியோவில் காருக்குள் அமர்ந்திருக்கும் சமந்தா தனது கைகளால் முகத்தை மூடிக்கொண்டு கதறி அழுவது போன்று காட்சி இருக்கிறது. அந்த கண்ணீர் ஆனந்தத்தின் வெளிப்பாடா? உணர்ச்சிவசப்பட்ட தருணமா? அல்லது மனவேதனையால் வந்த அழுகையா என புரியாமல் ரசிகர்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.

    ஏற்கனவே சமந்தாவின் முதல் திருமண வாழ்க்கை சில வருடங்களிலே முடிவுக்கு வந்துவிட்டது. அதற்குப் பிறகு கடந்த வருடத்தில் தான் அவர் திருமணமும் செய்திருந்தார். திருமணம் முடிந்த சில மாதங்களிலேயே அவர் கர்ப்பமாகவும் இருந்தார். அதை அதிகாரப்பூர்வமாக அவர் தன்னுடைய திரைப்படத்தின் வெற்றி விழாவின் அறிவித்திருந்தார்.

    Advertisement

    சமந்தா படத்தின் வெற்றி

    சில வருடங்களாக இந்த சமந்தாவின் படங்கள் பெரிதாக வெற்றி பெறாமல் இருந்த நிலையில் அவர் திருமணத்திற்கு பிறகு நடித்த எங்கள் தங்கம் திரைப்படம் பெரிய அளவில் வெற்றி பெற்று 100 கோடி வசூல் செய்தது. அந்த தருணத்தில் கூட எமோஷனலாக வீடியோக்கள் வெளியிட்டிருந்தார். இப்படி இருக்கும் சமயத்தில் கர்ப்பமாக இருக்கும் சமந்தா அழுது இருப்பது எதற்காக? என்ற கேள்விகள் அனைவரது மனதிலும் விழுகிறது.

    ரசிகர்கள் அட்வைஸ்

    பலரும் அவருக்கு அட்வைஸ் கொடுக்கின்றனர். மன அழுத்தம் வேண்டாம், நீங்கள் சந்தோசமாக இருக்க வேண்டும். உங்களுக்கும் குழந்தைக்கும் எதுவும் ஆகக்கூடாது என பலர் தங்களுடைய அக்கறை கலந்த பதிவுகள் கொடுத்து வருகிறார்கள். தற்போது சமந்தாவின் இந்த எமோஷனலான வீடியோ வைரலாகி வருகிறது.

    English Summary

    Samantha: Pregnancy is a very emotional phase in every woman's life. Everyone's desire is to be happy and at peace at that time. In such an environment, a video shared by actress Samantha on her Instagram page has left fans worried and confused.