சென்னை: தமிழ் சின்னத்திரை உலகில், நாட்டின் முன்னணி ஒளிபரப்பு நிறுவனமான சோனி பிக்சர்ஸ் நெட்வொர்க்ஸ் இந்தியா தனது புதிய தமிழ் தொலைக்காட்சியான "சோனி விழா" (Sony VIZHA) சேனலை வரும் அக்டோபர் மாதம் முதல் தொடங்க போகிறது. இதை சிறப்பிக்கும் வகையில், சர்வதேச அளவில் புகழ்பெற்ற "செலிபிரிட்டி மாஸ்டர்ஃபெஃப் தமிழ்" சமையல் ரியாலிட்டி நிகழ்ச்சியை அறிவித்து மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது...!
தமிழ் சின்னத்திரை ரசிகர்களுக்கு பிரம்மாண்ட பொழுதுபோக்கு விருந்து அளிக்க நாட்டின் முன்னணி ஒளிபரப்பு நிறுவனமான சோனி பிக்சர்ஸ் நெட்வொர்க்ஸ் இந்தியா (SPNI) தயாராகிவிட்டது. ஆம்.. தமிழ் பொழுதுபோக்கு துறையில் முதன்முறையாக நேரடியாகக் காலடி வைக்கும் சோனி நிறுவனம், தன்னுடைய புதிய தமிழ் தொலைக்காட்சியின் பெயரை "சோனி விழா" Sony VIZHA) என அறிவித்து ஒட்டுமொத்த சின்னத்திரை உலகையும் தன் பக்கம் திருப்பியுள்ளது. பல்லாவரம் பொண்ணு சமந்தா இந்த புதிய சேனலின் தொடக்க விழாவை மேலும் சிறப்பிக்கும் வகையில், சர்வதேச அளவில் பெரும் வரவேற்பைப் பெற்ற சமையல் போட்டியான மாஸ்டர்ஃபெஃப் தொடரின் தமிழ் பதிப்பை அறிவித்துள்ளது. "செலிபிரிட்டி மாஸ்டர்ஃபெஃப் தமிழ்" (Celebrity MasterChef Tamil) என்ற பெயரில் உருவாகும் இந்த மாஸான ரியாலிட்டி நிகழ்ச்சியை தென்னிந்தியாவின் முன்னணி நடிகையும், நம்ம ஊர் பல்லாவரம் பொண்ணுமான சமந்தா ரூத் பிரபு தொகுத்து வழங்கப் போகிறார். தமிழ்நாட்டின் முன்னணி மற்றும் நம்பிக்கையான சமையல் எண்ணெய் பிராண்டான "கோல்ட் வின்னர்" (Gold Winner) நிறுவனம் இந்த நிகழ்ச்சியை இணைந்து வழங்குகிறது (Co-Presented by). அதேபோல, சர்வதேச அளவில் தரம் வாய்ந்த நிகழ்ச்சிகளைத் தயாரிக்கும் "பனிஜே ஆசியா" (Banijay Asia) நிறுவனம் இதனைப் பிரம்மாண்டமான முறையில் தயாரித்து வருகிறது. இதில் சிறப்பு என்னவென்றால், வரும் அக்டோபர் மாதம் முதல் ஒளிபரப்பாகவுள்ள இந்தச் சமையல் திருவிழா, "சோனி விழா தொலைக்காட்சி மற்றும் "சோனி லிவ்" (Sony LIV) ஓடிடி தளத்தில் ஒரே நேரத்தில் ஒளிபரப்பப்பட உள்ளது. மா இன்டி பங்காரம் தமிழ்நாட்டின் பாரம்பரிய சுவைகள், மண் சார்ந்த உணவுகள் மற்றும் தமிழ் ரசிகர்களுக்குப் பிடித்த முன்னணி நட்சத்திரங்களின் சுவாரஸ்யமான போட்டியோடு இந்த நிகழ்ச்சி மிகவும் வித்தியாசமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இது குறித்துப் பேசிய நடிகை சமந்தா, "இதுவரை நான் செய்யாத ஒரு புதிய முயற்சியாக இது இருக்கும். உணவும் மனிதர்களும் இணையும் இந்த மேடையில் தமிழ் பிரபலங்கள் சமையலறைக்குள் இறங்கி சவால்களை எதிர்கொள்வதை பார்க்க நான் மிகவும் ஆர்வமாக உள்ளேன்" என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்... சமீபத்தில் வெளியாகி வெற்றி பெற்ற "மா இன்டி பங்காரம்" படத்திற்குப் பிறகு, சமந்தா சின்னத்திரையில் அடியெடுத்து வைப்பது அவரது ரசிகர்களிடையே மிகப்பெரிய உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. சோனி விழா விரைவில் "விழா" என்ற சொல் தமிழர்களின் கொண்டாட்டத்தை குறிப்பதாகும். அதற்கேற்ப தமிழ் கதைகள், திறமைகள் மற்றும் பொழுதுபோக்கை ஒரே கூரையின் கீழ் கொண்டாடும் விதமாக இந்தச் சேனல் அமைய போவது ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுததி வருகிறது. எனவே, "கோல்ட் வின்னர் நிறுவனத்தின் பங்களிப்போடு, சர்வதேச தயாரிப்புத் தரத்தில் உருவாகும் "செலிபிரிட்டி மாஸ்டர்ஃபெஃப்" தமிழ்' நிகழ்ச்சி, "சோனி விழா" சேனலுக்கு மிகப்பெரிய தொடக்கத்தை அளிக்கும் என்பதில் சந்தேகமில்லை..!!