சங்கீதா வழக்கை தான் வாபஸ் வாங்கிருக்காங்க! பிரச்சனை முடியல! திரிஷாவால் மீண்டும் சர்ச்சை! - பிஸ்மி

  • சென்னை: கடந்த சில வாரங்களுக்கு முன்பு முதல்வர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து வழக்கை வாபஸ் வாங்கியது பெரிதாக பேசப்பட்டது. இனி விஜய்யும் சங்கீதாவும் சேர்ந்து வாழ்ந்து விடுவார்கள் என்று பலரும் நம்பி வந்தனர். ஆனால் நேற்று சுதந்திர தின விழாவில் திரிஷா, விஜய் பெற்றோருடன் கலந்து கொண்டது பெரிதாக பேசப்பட்டு வரும் நிலையில் இது பற்றி பிஸ்மி கொடுத்த பேட்டி இணையத்தில் வைரலாகி வருகிறது.

    Advertisement

    முதல்வர் விஜய் ஆட்சிக்கு வந்த பிறகும் அவருடைய குடும்பத்தை பற்றி பல விமர்சனங்கள் இருந்து வருகிறது. விஜயின் மனைவி சங்கீதா விவாகரத்து வழக்கு தொடர்ந்திருந்தது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. அதோடு அவர் அந்த விவாகரத்து வழக்கில் நடிகை ஒருவருடன் விஜய் பழகி வருவது எங்கள் குடும்பத்திற்கு பிடிக்கவில்லை. இனி அவருடன் பேச மாட்டேன் என்று சொல்லிவிட்டு வெளிநாட்டில் அந்த நடிகையுடன் புகைப்படங்கள் எடுத்து இருக்கிறார்.

    Advertisement

    சுதந்திர தின நிகழ்ச்சியில் திரிஷா

    அந்தப் புகைப்படங்களை நடிகை சோஷியல் மீடியாவில் பதிவிடுவது எங்களுக்கும் குடும்பத்திற்கும் வருத்தத்தை ஏற்படுத்தி இருக்கிறது என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதனால் அந்த நடிகை யாராக இருக்கும் என்று கேள்வி ரசிகர்கள் மத்தியில் இருந்தது. அதற்கு பிறகு விஜய் முதல்வராக மாறிய பிறகும் கூட அரசியல் ரீதியாகவும், சினிமா பிரபலங்களும் பலர் விஜயின் குடும்ப வாழ்க்கையை பற்றி பேசி வருகின்றனர்.

    முதல்வர் விஜய் மகன் பேச்சு

    அதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கிற மாதிரி சமீபத்தில் விஜயின் மகன் ஒரு பேட்டியில் பேசியிருந்தார். தன்னுடைய அப்பாவை பற்றி அவர் பெருமையாக பேசியதும் பழைய கசப்புகள் எல்லாம் மறந்தாச்சு, இனி அப்பா அம்மாவை மகன் சேர்த்து வைத்து விடுவார் என்று ரசிகர்கள் நம்பிக்கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் தான் விஜய் சங்கீதா விவாகரத்து வழக்கு வந்தது, அப்போது இதற்கு மேல் இந்த வழக்கை நடத்தவில்லை என்று சங்கீதா வழக்கை வாபஸ் வாங்கி விட்டார்.

    Advertisement

    ரசிகர்கள் எதிர்பார்ப்பு

    இதனால் இனி லண்டனில் இருக்கும் சங்கீதா மீண்டும் சென்னைக்கு வந்து விஜய்யுடன் சேர்ந்து வாழப்போகிறார் என்று சொல்லி வந்தனர். ஆனால் நேற்று ஜார்ஜ் கோட்டையில் சுதந்திர தின விழாவில் நடிகை திரிஷா விஐபி வரிசையில் அமர்ந்து இருப்பது குறித்து பத்திரிகையாளர் பிஸ்மி பேசி இருக்கிறார். அதில் கடந்த வாரம் சங்கீதா தன்னுடைய விவாகரத்து வழக்கை வாபஸ் வாங்கியதும் குடும்ப வழக்கு முடிவுக்கு வந்துவிட்டதாகவே எல்லோரும் நினைத்துக் கொண்டிருந்தார்கள்.

    அதுபோல விஜயின் மகன் ஜேசன் சஞ்சய் தன்னுடைய அப்பாவை பற்றி பெருமையாக பேசியது குடும்பத்தில் சமூகமான சூழல் திரும்பி இருக்கிறது என்று எல்லோரும் நினைத்திருந்தார்கள். ஆனால் விஜய், சங்கீதா இடையே பிரச்சனை முழுமையாக தீர்ந்திருந்தால் அவர் நேற்று சுதந்திர தின விழா கொண்டாட்டத்திற்கு வந்திருப்பார். அல்லது அவருடைய பிள்ளைகளாவது வந்திருக்கும் ஆனால் திரிஷா விஐபி வரிசையில் அமர்ந்திருக்கிறார் என்றால் குடும்பத்தில் இன்னும் நார்மலான சூழ்நிலை உருவாகவில்லை என்று தான் தெரிகிறது.

    Advertisement

    பிஸ்மி பேட்டி

    விஜய் மகன் சொன்னது போல தன்னுடைய அப்பா இப்போது முதல்வராக இருக்கும் சமயத்தில் தங்களுக்கு பொறுப்பு இருக்கிறது அதற்கு தகுந்த மாதிரி நடந்து கொள்ள வேண்டும் என்று முடிவெடுத்திருக்கலாம். அதேபோல சங்கீதாவும் இனி இவரை அசிங்கப்படுத்த வேண்டாம் என்று வழக்கை வாபஸ் வாங்கி இருக்கலாம். மத்தபடி அவர்களுக்குள் நடந்து பேச்சு வார்த்தையில் சுமுகமான உறவு ஏற்பட்டது போல தெரியவில்லை என்று பேசி இருக்கிறார்.

    இதைத்தான் ரசிகர்களும் பேசி வருகிறார்கள். சோசியல் மீடியாவில் மீண்டும் திரிஷாவை வைத்து விமர்சனங்கள் எழுந்திருக்கிறது. அதே நேரத்தில் ஒரு சிலர் விஜய்யின் நெருங்கிய தோழி திரிஷா என்பதால் விஜயின் பெற்றோருடன் முதல் வரிசையில் அமர்ந்திருந்தார் என்று சப்போர்ட் செய்து வருகிறார்கள். இன்னும் ஒரு சிலர் ஏற்கனவே பல சர்ச்சைகள் பரவி வரும் நிலையில் மீண்டும் மீண்டும் இவங்க எதுக்காக இப்படி பண்ணிட்டு இருக்காங்க..? ஆமா நீங்க பேசுகிறது எல்லாம் உண்மை என்று சொல்ல வருகிறார்களா? என்றும் கேள்வி எழுப்புகிறார்கள்.

    English Summary

    Trisha: A few weeks ago, there was significant discussion about Vijay's wife, Sangeetha, withdrawing her divorce petition, leading many to believe the couple would reconcile and live together. However, amidst the current buzz surrounding Trisha attending the Independence Day celebrations with Vijay and his parents, an interview given by Bismi regarding this matter is going viral online.